கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுப் பரவலின்போது மற்றவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க WhatsApp எவ்வாறு உதவுகிறது
முக்கியமானவர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு WhatsApp உதவுகிறது. உங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் கவனித்துக் கொள்வதற்கும், சமீபத்திய அதிகாரப்பூர்வ உடல்நலத் தகவல்களை அறிவதற்கும், தகவல்களை பொறுப்புடன் பகிர்ந்து கொள்வதற்கும் WhatsApp-ஐப் பயன்படுத்துவதற்கான சில வழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் WhatsApp-ஐப் புதிதாகப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தால் அல்லது அதைப் பரிச்சயப்படுத்திக் கொள்ள விரும்பினால், எவ்வாறு தொடங்குவது என்பது குறித்த படிப்படியான வழிகாட்டுதல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சமூகத் தலைவர்கள்
இந்தச் சவாலுக்கு நீங்கள் பதிலளிக்கின்ற அதேசமயத்தில், சமூகத் தலைவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். கொரோனா வைரஸ் குறித்த கவலையில் மக்கள் ஆழ்ந்துள்ள இச்சமயத்தில், WhatsApp பயன்படுத்தி எவ்வாறு தகவலறிந்து இருப்பது, எவ்வாறு சமூகத்துடன் தொடர்பில் இருப்பது என்பதை அறிந்திடுங்கள்.
கதைகள்
இந்தச் சவாலான நேரத்தில் மக்கள் தங்கள் சமூகங்களுடன் தொடர்பில் இருப்பதற்கு WhatsApp-ஐ எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்று பாருங்கள்:
பாகிஸ்தானில், நாட்டின் வறுமையின் பிடியிலுள்ள மக்களுக்கு ஆதரவளிப்பதற்காக ஒரு WhatsApp குழு 21 மில்லியன் ரூபாய் தொகையைத் திராட்டியுள்ளது:
கட்டுரையை இங்கே படியுங்கள் >பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும் கூட இத்தாலியின் நேப்பிள்ஸ் பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளிகள் WhatsApp மூலம் மாணவர்களின் பெற்றோருக்கு வீட்டுப் பாடங்களை அனுப்பி கற்பித்தலைத் தொடர்கின்றன:
கட்டுரையை இங்கே படியுங்கள் >ஹாங்காங்கில் உள்ள ஒரு நபர், WhatsApp-ஐப் பயன்படுத்தி உள்ளூர் வணிகங்களுக்கு ஆதரவாக சமூகத்தை ஒருங்கிணைத்துள்ளார்:
கட்டுரையை இங்கே படியுங்கள் >கொரோனா வைரஸ் பாதித்துள்ள இந்தச் சமயத்தில் ஜோர்டானில் உள்ள ஒரு வேலைவாய்ப்புத் திட்டம் பெண்களுக்கு உத்வேகமளிப்பதற்கு WhatsApp-ஐப் பயன்படுத்துகிறது:
கட்டுரையை இங்கே படியுங்கள் >பாரிஸில் உள்ள மருத்துவ நிபுணர்கள் தங்கள் மருத்துவமனையின் திறன் குறித்த சமீபத்திய தகவல்களைப் பெறுவதற்கு ஒரு WhatsApp குழுவை உருவாக்கியுள்ளனர்:
கட்டுரையை இங்கே படியுங்கள் >சிரியா அகதிகள் முகாம்களில் உள்ள ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களுக்கான பாடங்களை WhatsApp மூலம் அவர்களின் பெற்றோர்களுக்குப் பகிர்கின்றனர்:
கட்டுரையை இங்கே படியுங்கள் >அடிமைத்தனத்தின் பிடியிலிருந்து மீண்டு வந்த இந்தியர்கள் சிலர் தங்களைப் போன்றவர்களின் மத்தியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு WhatsApp-ஐப் பயன்படுத்துகின்றனர்:
கட்டுரையை இங்கே படியுங்கள் >பிரேசிலின் ஃபுளோரியான்போலிஸில் உள்ள நோயாளிகள் தங்களின் முன்பதிவுகளைத் திட்டமிடுவதற்கும், சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கும் WhatsApp-ஐப் பயன்படுத்துகின்றனர்:
கட்டுரையை இங்கே படியுங்கள் >