உள்ளடக்கத்திற்குச் செல்லும்
  • முகப்பு
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்தொடர்பிலேயே இணைந்திருக்கலாம்குழுக்களில் இணைகஉங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்பிசினஸுக்கான WhatsApp
  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பதிவு
  • பிசினஸுக்கானது
  • பதிவிறக்கு
பதிவிறக்குக
விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை2025 © WhatsApp LLC
WhatsApp முதன்மைப் பக்கம்WhatsApp முதன்மைப் பக்கம்
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்

      முழு மறையாக்கம் மற்றும் தனியுரிமைக் கட்டுப்பாடுகள்.

    • தொடர்பிலேயே இணைந்திருக்கலாம்

      உலகம் முழுவதும் இலவசமாக* மெசேஜ் அனுப்பலாம், அழைப்புகளைச் செய்யலாம்.

    • குழுக்களில் இணைக

      குழு மெசேஜிங் எளிதாக்கப்பட்டது.

    • உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்

      ஸ்டிக்கர்கள், குரல், GIFகள் மற்றும் பலவற்றின் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள்.

    • WhatsApp business

      உங்கள் வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களைச் சென்றடைந்திடுங்கள்.

  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • செயலிகள்
உள்நுழைவுபதிவிறக்குக

கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுப் பரவலின்போது மற்றவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க WhatsApp எவ்வாறு உதவுகிறது

முக்கியமானவர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு WhatsApp உதவுகிறது. உங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் கவனித்துக் கொள்வதற்கும், சமீபத்திய அதிகாரப்பூர்வ உடல்நலத் தகவல்களை அறிவதற்கும், தகவல்களைப் பொறுப்புடன் பகிர்ந்து கொள்வதற்கும் WhatsApp-ஐப் பயன்படுத்துவதற்கான சில வழிகள் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளன. WhatsApp-க்கு நீங்கள் புதியவர் என்றாலோ தகவல்களை மீண்டும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றாலோ எவ்வாறு தொடங்குவது என்பதைப் பற்றிய படிப்படியான வழிகாட்டி இதுவாகும்.

தொலைவில் இருந்து இணைந்திடுங்கள்

உங்களுக்கு அன்பானவர்களுடன் ஒரே இடத்தில் நீங்கள் இல்லை என்றாலும்கூட, அவர்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பதற்கும், அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கும்குழுக்கள், குரல், வீடியோ அழைப்புகள் போன்ற WhatsApp அம்சங்களைப் பயன்படுத்தவும்.

நம்பகமான தகவல் மூலங்களைத் தேர்வு செய்யுங்கள்

உள்ளூர், தேசிய மற்றும் உலகளாவிய அமைப்புகளுடன் இணைந்திடுங்கள். சமீபத்திய தகவல்களுக்கும் வழிகாட்டுதல்களுக்கும் உலக சுகாதார நிறுவனம் அல்லது உங்கள் தேசிய சுகாதாரத் துறை போன்ற நம்பகமான மூலங்களைச் சார்ந்திருங்கள்.

வதந்திகள் பரவுவதைத் தடுக்க உதவிடுங்கள்

கொரோனா வைரஸ் குறித்து அனுப்பப்படுகின்ற தகவல்கள் துல்லியமற்றதாக இருக்கலாம் என்பதால், நீங்கள் பெறுகின்ற தகவல்கள் சரியானவைதானா என்று சிந்தித்துச் செயல்படுங்கள். பிற நம்பகமான அதிகாரப்பூர்வ மூலங்கள், உண்மைச் சரிபார்ப்பு மூலங்கள் அல்லது அல்லது சர்வதேச உண்மைச் சரிபார்ப்பு நெட்வொர்க்கின் (International Fact-Checking Network - IFCN) உண்மைச் சரிபார்ப்பு சாட்பாட்டை +1 (727) 2912606 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தகவலின் உண்மைத்தன்மையைச் சரிபாருங்கள். தகவல் உண்மையானது என்று உறுதியாகத் தெரியாத பட்சத்தில், அதை முன்னனுப்ப வேண்டாம்.

சமூகத் தலைவர்கள்

இந்தச் சவாலுக்கு நீங்கள் பதிலளிக்கின்ற அதேசமயத்தில், சமூகத் தலைவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். கொரோனா வைரஸ் குறித்த கவலையில் மக்கள் ஆழ்ந்துள்ள இச்சமயத்தில், WhatsApp பயன்படுத்தி எவ்வாறு தகவலறிந்து இருப்பது, எவ்வாறு சமூகத்துடன் தொடர்பில் இருப்பது என்பதை அறிந்திடுங்கள்.

மருத்துவப் பணியாளர்கள்

உங்கள் நோயாளிகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்வது, சமூகத்திற்கு எவ்வாறு தகவலளிப்பது, தொலைநிலைக் கலந்துரையாடல்களை எவ்வாறு அமைப்பது, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு எவ்வாறு உடனடி பதில்களை அமைப்பது போன்ற பலவற்றை அறிந்திடுங்கள்.

மேலும் அறிக >

கல்வியாளர்கள்

WhatsApp-இல் உங்கள் மாணவர்களுடன் எவ்வாறு தொடர்பில் இருப்பது, வீட்டுப் பாடங்களை எவ்வாறு அனுப்புவது மற்றும் பெறுவது, உரைகள் மற்றும் குரல் தகவல்கள் வடிவில் பாடங்களை எவ்வாறு பகிர்வது போன்ற பலவற்றை அறிந்திடுங்கள்.

மேலும் அறிக>

இலாபநோக்கமற்ற அமைப்புகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்

உங்கள் அமைப்பின் அறிமுகத்தை வழங்குவது, சமூகத்துடன் தொடர்பில் இருப்பது, துல்லியமான தகவல்களை உரிய நேரத்தில் வழங்குவது, உங்கள் குழுவினருடன் ஒருங்கிணைந்து இருப்பது, பொதுவான விசாரணைகளுக்கு விரைவாகப் பதிலளிப்பது போன்ற பலவற்றை அறிந்திடுங்கள்.

மேலும் அறிக >

உள்ளூர் வணிகங்கள்

உங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருப்பதற்கான வழிகளை அறிந்துகொள்வது, மேலும் உங்களின் நடப்பு வணிக நேரத்தைப் பகிர்வது, பிக்அப் மற்றும் டெலிவரிகளைச் செயல்திறனுடன் மேற்கொள்வது, இருப்பு குறித்து வழக்கமான முறையில் தகவல்களை வழங்குவது போன்ற பலவற்றை அறிந்திடுங்கள்.

மேலும் அறிக >

கதைகள்

இந்தச் சவாலான நேரத்தில் மக்கள் தங்கள் சமூகங்களுடன் தொடர்பில் இருப்பதற்கு WhatsApp-ஐ எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்று பாருங்கள்:

பாகிஸ்தானில், வறுமையில் மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு உதவ ஒரு WhatsApp குழு ரூ.21 மில்லியனைத் திரட்டியுள்ளது: கட்டுரையை இங்கே படியுங்கள் >

இத்தாலிய மேயர்களின் குழு WhatsApp மூலம் தொடர்பில் உள்ளனர்: இங்கே கட்டுரைகளைப் படியுங்கள் >

பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும் கூட இத்தாலியின் நேப்பிள்ஸில் உள்ள ஆரம்பப் பள்ளிகள் WhatsApp மூலம் மாணவர்களின் பெற்றோருக்கு வீட்டுப் பாடங்களை அனுப்பி கற்பித்தலைத் தொடர்கின்றன: இங்கே கட்டுரைகளைப் படியுங்கள் >

ஹாங்காங்கில் உள்ள ஒரு நபர், WhatsApp-ஐப் பயன்படுத்தி உள்ளூர் வணிகங்களுக்கு ஆதரவாக சமூகத்தை ஒருங்கிணைத்துள்ளார்: இங்கே கட்டுரையைப் படியுங்கள் >

கொரோனா வைரஸ் பாதித்துள்ள இந்தச் சமயத்தில் ஜோர்டானில் உள்ள ஒரு வேலைவாய்ப்புத் திட்டம் பெண்களுக்கு உத்வேகமளிப்பதற்கு WhatsApp-ஐப் பயன்படுத்துகிறது: இங்கே கட்டுரைகளைப் படியுங்கள் >

பாரிஸில் உள்ள மருத்துவ நிபுணர்கள் தங்கள் மருத்துவமனையின் திறன் குறித்த சமீபத்திய தகவல்களைப் பெறுவதற்கு ஒரு WhatsApp குழுவை உருவாக்கியுள்ளனர்: இங்கே கட்டுரையைப் படியுங்கள் >

இந்தியாவின் கோயமுத்தூரில் உள்ள அதிகாரிகள் WhatsApp மூலம் கலந்துரையாடல்களை மேற்கொள்கின்றனர்: இங்கே கட்டுரைகளைப் படியுங்கள் >

சிரியாவின் அகதிகள் முகாம்களில் உள்ள ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களுக்கான பாடங்களை WhatsApp மூலம் அவர்களின் பெற்றோர்களுக்குப் பகிர்கின்றனர்: இங்கே கட்டுரையைப் படியுங்கள் >

அடிமைத்தனத்தின் பிடியிலிருந்து மீண்டு வந்த இந்தியர்கள் சிலர் தங்களைப் போன்றவர்களின் மத்தியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு WhatsApp-ஐப் பயன்படுத்துகின்றனர்: இங்கே கட்டுரைகளைப் படியுங்கள் >

பிரேசிலின் ஃபுளோரியானோபோலிஸில் உள்ள நோயாளிகள் தங்களின் முன்பதிவுகளைத் திட்டமிடுவதற்கும், சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கும் WhatsApp-ஐப் பயன்படுத்துகின்றனர்: இங்கே கட்டுரைகளைப் படியுங்கள் >

உலகளாவிய கூட்டாளர்கள்

தரவிறக்குக
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோ
தரவிறக்குக
நாங்கள் வழங்கும் சேவைகள்
அம்சங்கள்வலைப்பூபாதுகாப்புபிசினஸுக்கானது
நம்மைப் பற்றிய தகவல்
எங்கள் சுயவிவரம்தொழில்வாய்ப்புகள்பிராண்டு மையம்தனியுரிமை
WhatsApp ஐ பயன்படுத்துங்கள்
ஆண்ட்ராய்டுiPhoneMac/PCWhatsApp Web
உதவி தேவையா?
எங்களைத் தொடர்பு கொள்ளளுங்கள்உதவி மையம்செயலிகள்பாதுகாப்பு ஆலோசனைகள்
தரவிறக்குக

2025 © WhatsApp LLC

விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை
தளவரைபடம்