14 ஜூலை, 2025 அன்று செயலுக்கு வரும்
WhatsApp அறிவிப்புகள் பிரிவானது WhatsApp உங்களுக்கு வழங்கும் பல விருப்பத்தேர்வு “சேவைகளை” கொண்டுள்ளன. அறிவிப்புகள் பிரிவுக்கான இந்தத் துணை சேவை விதிமுறைகள் (“துணை விதிமுறைகள்”), WhatsApp சேவை விதிமுறைகளின் துணை ஆவணமாக இருக்கும், மேலும் ஸ்டேட்டஸ் மற்றும் சேனல்கள் போன்ற விருப்பத்தேர்வு அம்சங்களைப் பயன்படுத்துவது உட்பட அறிவிப்புகள் பிரிவில் வழங்கப்பட்டுள்ள சேவைகளைப் பயன்படுத்துவதற்கும் கூட்டாகப் பொருந்தும். துணை விதிமுறைகளின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், சேனல்களுக்கான துணை சேவை விதிமுறைகளின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் முழுவதற்கும் மாற்றீடாக இருக்கும், மேலும் நீங்கள் அறிவிப்புகள் பிரிவைப் பயன்படுத்தும்போதும் பொருந்தும். இந்தத் துணை விதிமுறைகளில் உள்ள எதுவும் WhatsApp சேவை விதிமுறைகள் அல்லது அவை குறிப்பிடும் கூடுதல் விதிமுறைகள் அல்லது கொள்கைகளின் கீழ் உள்ள எங்களின் எந்த உரிமையையும் கட்டுப்படுத்தாது.
WhatsApp அறிவிப்புகள் பிரிவின் துணை தனியுரிமைக் கொள்கை ஆனது WhatsApp தனியுரிமைக் கொள்கைக்கு துணை ஆவணமாக இருக்கும், மேலும் நீங்கள் அறிவிப்புகள் பிரிவுகளில் உள்ள சேவைகளைப் பயன்படுத்தும்போது நாங்கள் எவ்வாறு தகவல்களைச் சேகரிக்கிறோம், பயன்படுத்துகிறோம் மற்றும் பகிர்கிறோம் என்பதை இது விளக்கும். நீங்கள் எந்த நேரத்திலும் உங்கள் அமைப்புகளுக்குச் சென்று உங்கள் தனியுரிமைத் தேர்வுகளைப் படித்துப் பார்க்கலாம். WhatsApp தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி, நீங்கள் அறிவிப்புகள் பிரிவில் உள்ள சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் தனிப்பட்ட WhatsApp மெசேஜ்களின் தனியுரிமையானது பாதிக்கப்படாது, அவை தொடர்ந்து பேசுவோர் இடையே ரகசியக்காப்பு செய்யப்பட்டு இருக்கும்.
அறிவிப்புகள் பிரிவு, எங்கள் விருப்பத்தேர்வு அம்சங்கள், சேனல்கள் மற்றும் ஸ்டேட்டஸ் ஆகியவற்றின் முகப்பிடமாக உள்ளது, மேலும் இது பிற WhatsApp பயனர்கள் பகிரும் தொடர்புடைய ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகள் மற்றும் சேனல்களின் புதுப்பிப்புகளைச் சரியான நேரத்தில் பார்க்கவும் செயலை மேற்கொள்ளவும் உங்களை அனுமதிக்கிறது. உங்கள் தொடர்புகளுடன் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்களுடன் ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகளைப் பகிர, அவர்கள் பதிலளிக்கக்கூடிய வகையிலான ஒரு ஸ்டேட்டஸை நீங்கள் உருவாக்கலாம், அது 24 மணி நேரத்திற்குப் பிறகு மறைந்துவிடும். நீங்கள் ஒரு சேனலையும் உருவாக்கி, புதுப்பிப்புகளைப் பகிரலாம், அதை எவரும் கண்டறியலாம், பின்பற்றலாம் மற்றும் பார்க்கலாம்.
உங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகள் அல்லது சேனல்களையும் நாங்கள் உங்களுக்குப் பரிந்துரைக்கலாம் அல்லது பிசினஸ்களால் விளம்பரப்படுத்தப்படும் சேனலையும் காண்பிக்கலாம். சேனல்களை நாங்கள் உங்களுக்குப் பரிந்துரைக்கும் விதம் பற்றி இங்கே மேலும் அறிக.
நாங்கள் குறிப்பிடாவிட்டால், அறிவிப்புகள் பிரிவைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் உங்களிடம் கட்டணம் வசூலிக்க மாட்டோம். மாறாக, பிசினஸ்கள், நிறுவனங்கள் மற்றும் பிற நபர்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளினுடைய விளம்பரங்களை உங்களுக்கு அறிவிப்புகள் பிரிவில் (எ.கா., ஸ்டேட்டஸில் அல்லது சேனல்களில்) காண்பிக்க பணம் செலுத்துகிறார்கள். அறிவிப்புகள் பிரிவைப் பயன்படுத்துவதன் மூலம், உங்களுக்கும் உங்களினுடைய ஆர்வங்களுக்கும் ஏற்றதாக இருக்கலாம் என்று நாங்கள் கருதும் விளம்பரங்களை அறிவிப்புகள் பிரிவில் நாங்கள் காண்பிக்கலாம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
எங்களின் நபருக்கேற்றபடியான விளம்பர அமைப்பை நாங்கள் வடிவமைத்த விதத்தில் மக்களின் தனியுரிமையைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகத் திகழுகிறது. உங்களின் தனிப்பட்ட தரவை நாங்கள் விற்பனை செய்ய மாட்டோம். விளம்பரதாரர்கள் அவர்களின் பிசினஸ் இலக்கு, அவர்கள் தங்கள் விளம்பரங்களைப் பார்க்க விரும்பும் பார்வையாளர்கள் போன்ற விஷயங்களை எங்களிடம் கூற நாங்கள் அனுமதிக்கிறோம். பின்னர் நாங்கள் அவர்களின் விளம்பரத்தை, இவர்களுக்கு ஆர்வமிருக்கலாம் என்று நாங்கள் நினைக்கும் நபர்களின் அறிவிப்புகள் பிரிவில் காண்பிப்போம்.
மேலே விவரிக்கப்பட்டுள்ள சேவைகளை வழங்க நாங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்தும் விதம் பற்றி WhatsApp அறிவிப்புகள் பிரிவின் துணை தனியுரிமைக் கொள்கையில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் எங்கள் சேனல்களைச் சட்டப்பூர்வமான, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் ஏற்கத்தக்க நோக்கங்களுக்காக மட்டுமே அணுக வேண்டும் மற்றும் பயன்படுத்த வேண்டும். சேனல் நிர்வாகிகள் தங்களின் சேனல்களில் இடம்பெறும் சேனல் புதுப்பிப்புகளுக்குப் பொறுப்பாவார்கள், மேலும் அவர்கள் தங்களின் சேனல்களைப் பின்தொடர்பவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வயதுக்கு ஏற்ற மற்றும் அவர்களுக்குப் பாதுகாப்பான அனுபவத்தை வழங்கும் வகையில் சேனல்களைப் பராமரிக்க வேண்டும். சேனல்களில் பயனர்கள் என்ன செய்கிறார்கள் அல்லது பேசுகிறார்கள் என்பதை நாங்கள் கட்டுப்படுத்த மாட்டோம், மேலும் அவர்களின் (அல்லது உங்களின்) செயல்கள் அல்லது நடத்தைகள் (அது ஆன்லைனாக இருந்தாலும் சரி அல்லது ஆஃப்லைனாக இருந்தாலும் சரி) அல்லது பகிர்வு (சட்டவிரோதமான அல்லது ஆட்சேபனைக்குரிய பகிர்வு உட்பட) ஆகியவற்றிற்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.
WhatsApp சேவை விதிமுறைகள் மற்றும் WhatsApp சேனல்களின் வழிகாட்டுதல்கள் உட்பட எங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்துவதற்குப் பொருந்தும் இந்தத் துணை விதிமுறைகள் அல்லது பிற விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை மீறும் செயலில் சேனல் நிர்வாகிகள் ஈடுபடக்கூடாது.
இதில் பின்வருபவை அடங்கும்:
உங்களின் உரிமைகள் அல்லது எங்கள் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை மீறக்கூடிய ஏதேனும் சேனல் அல்லது குறிப்பிட்ட சேனல் புதுப்பிப்பு அல்லது ஸ்டேட்டஸ் புதுப்பிப்பு குறித்து நீங்கள் புகாரளிக்கலாம். WhatsApp இல் புகாரளிக்கும் மற்றும் தடுக்கும் விதம் பற்றி இங்கே அறியலாம்.
WhatsApp சேவை விதிமுறைகள், இந்தத் துணை விதிமுறைகள், எங்கள் கொள்கைகள் (WhatsApp சேனல்கள் வழிகாட்டுதல்கள் மற்றும் மெசேஜிங் வழிகாட்டுதல்கள் உட்பட) ஆகியவற்றை மீறும் விதமாக ஸ்டேட்டஸ் அல்லது சேனல்களில் பகிரப்படும் ஏதேனும் புதுப்பிப்புகள் அல்லது தகவல்களுக்கான அணுகலை WhatsApp அகற்றலாம், அவை பகிரப்படுவதைத் தடுக்கலாம் அல்லது கட்டுப்படுத்தலாம், அல்லது சட்டத்தின்படி அனுமதிக்கப்படும் இடத்தில் அல்லது செய்ய வேண்டிய இடத்தில் நாங்கள் இவ்வாறு செய்யலாம். எங்கள் சேவைகள் மற்றும் பயனர்களைப் பாதுகாக்க சில அம்சங்களுக்கான அணுகலை நாங்கள் அகற்றலாம் அல்லது கட்டுப்படுத்தலாம், கணக்கை முடக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம் அல்லது சட்ட அமலாக்கத்தைத் தொடர்புகொள்ளலாம். WhatsApp சேவை விதிமுறைகள் மற்றும் WhatsApp தனியுரிமைக் கொள்கை மற்றும் WhatsApp அறிவிப்புகள் பிரிவின் துணைத் தனியுரிமைக் கொள்கை ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ளபடி, WhatsApp முழுவதும் பாதுகாப்பு, காபந்து மற்றும் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த, Meta நிறுவனங்கள் உட்பட மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுடன் நாங்கள் பணியாற்றலாம்.
மேலும் WhatsApp சேவை விதிமுறைகளுக்கு இணங்கும் விதமாக, முழுச் சேவைக்கான உங்கள் அணுகலை நிறுத்துவதற்கான உரிமையை WhatsApp கொண்டுள்ளது. எங்கள் கொள்கைகளை எல்லா அதிகார எல்லைகளிலும் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டாலும், சில அதிகார எல்லைகளில் பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் குறிப்பிட்ட தேவைகள் இருக்கலாம், இதற்கு அமலாக்கத்தின் வேறுபட்ட செயலிகள் தேவைப்படலாம்.
ஸ்டேட்டஸ் மற்றும் சேனல்களை வழங்குவதற்கு உங்களிடமிருந்து சில அனுமதிகள் எங்களுக்குத் தேவை. WhatsApp சேவை விதிமுறைகளில் நீங்கள் எங்களுக்கு வழங்கும் உரிமத்தில் WhatsApp ஸ்டேட்டஸ் மற்றும் சேனல்களில் நீங்கள் பகிரும் புதுப்பிப்புகளும் அடங்கும்.
ஸ்டேட்டஸ் அல்லது சேனல்கள் உள்ளிட்டவற்றுக்கு அறிவிப்புகள் பிரிவில் உள்ள அம்சங்களின் செயல்பாடு மற்றும்/அல்லது செயல்திறன், காலப்போக்கில் மாறக்கூடும். நாங்கள் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தலாம், வரம்புகளை விதிக்கலாம், அணுகலை நிறுத்தி வைக்கலாம், நீக்கலாம், மாற்றலாம், கட்டுப்படுத்தலாம் அல்லது ஏற்கெனவே உள்ள சில அம்சங்கள் அல்லது ஸ்டேட்டஸ் அல்லது சேனல்களின் ஏதேனும் பகுதியை மாற்றியமைக்கலாம். ஸ்டேட்டஸ் அல்லது சேனல்களின் வரம்புகளுடைய பதிப்புகளை நாங்கள் வழங்கலாம், மேலும் இந்தப் பதிப்புகள் வரம்புகளுடனான அம்சங்களைக் கொண்டிருக்கலாம் அல்லது பிற வரம்புகளைக் கொண்டிருக்கலாம். ஓர் அம்சம் அல்லது பகிர்வு (ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகள் மற்றும் சேனல் புதுப்பிப்புகள் உட்பட) இனி இல்லாவிட்டால், அத்தகைய அம்சம் அல்லது பகிர்வு தொடர்பாக நீங்கள் உருவாக்கிய அல்லது வழங்கிய தகவல்கள், தரவு அல்லது பகிர்வு நீக்கப்படலாம் அல்லது அணுக முடியாததாகிவிடலாம்.
இந்தத் துணை விதிமுறைகளை நாங்கள் திருத்தலாம் அல்லது மாற்றியமைக்கலாம். எங்கள் துணை விதிமுறைகளில் உள்ள பொருள் திருத்தங்கள் குறித்த அறிவிப்பை, தகுந்தபடி நாங்கள் உங்களுக்கு வழங்குவோம், மேலும் எங்கள் துணை விதிமுறைகளின் மேலே உள்ள “கடைசியாக மாற்றியமைக்கப்பட்ட” தேதியை மாற்றியமைப்போம். அறிவிப்புகள் பிரிவின் உங்களுடைய தொடர்ச்சியான பயன்பாடு, திருத்தப்பட்டபடி எங்கள் துணை விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துகிறது. அறிவிப்புகள் பிரிவை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் திருத்தப்பட்டபடி எங்கள் துணை விதிமுறைகளை நீங்கள் ஏற்கவில்லை என்றால், நீங்கள் அறிவிப்புகள் பிரிவைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் அல்லது உங்கள் கணக்கை நீக்குவதன் மூலம் எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
WhatsApp சேனல்களுக்குச் சந்தா சேரும் சந்தாதாரரின் சேவை விதிமுறைகள்: பிரீமியம் சேனல்களின் பிரிவை அணுக நீங்கள் சந்தா சேர்ந்தால் இந்த விதிமுறைகள் பொருந்தும்.
இந்தத் துணை விதிமுறைகளில் எந்தவொரு சட்ட விதியும் சட்டவிரோதமானது, ரத்து செய்யப்பட்டது அல்லது ஏதேனும் காரணத்திற்காக செயல்படுத்த முடியாதது எனக் கண்டறியப்பட்டால், அந்தச் சட்ட விதியைச் செயல்படுத்துவதற்குத் தேவையான குறைந்தபட்ச அளவிற்கு அது திருத்தப்பட்டதாகக் கருதப்படும், மேலும் அதைச் செயல்படுத்த முடியாவிட்டால், அது இந்தத் துணை விதிமுறைகளிலிருந்து துண்டிக்கக்கூடியதாகக் கருதப்படும், மேலும் இது இந்தத் துணை விதிமுறைகள், WhatsApp சேவை விதிமுறைகளின் எஞ்சிய விதிகள், அல்லது முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படும் மற்றும் செயல்படுத்தப்படும் அவை குறிப்பிடுகிற ஏதேனும் துணை விதிமுறைகள் அல்லது கொள்கைகளின் செல்லுபடியாகும் தன்மை மற்றும் செயல்படுத்தலில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இந்தத் துணை விதிமுறைகள் அல்லது அறிவிப்புகள் பிரிவு மற்றும் அறிவிப்புகள் பிரிவுகளில் கிடைக்கப்பெறும் சேவைகளால் (சேனல்கள் மற்றும் ஸ்டேட்டஸ் உட்பட) எழும் அல்லது அவை தொடர்பாக எழும் அனைத்துச் சர்ச்சைகளையும் நீங்கள் அல்லது நாங்கள் உரிமைகோரலைத் தொடங்கும் நேரத்தில் நடைமுறையில் இருக்கும் WhatsApp சேவை விதிமுறைகளில் உள்ள சர்ச்சைத் தீர்வு மற்றும் ஆளும் சட்ட விதிகளின்படி தீர்க்க நீங்களும் நாங்களும் ஒப்புக்கொள்கிறோம்.