WhatsApp அறிவிப்புகள் பிரிவின் துணைத் தனியுரிமைக் கொள்கை
14 ஜூலை, 2025 அன்று செயலுக்கு வரும்
முக்கிய அறிவிப்புகள்:
அறிவிப்புகள் பிரிவின் தனியுரிமைக் கொள்கையாக ஆக்குவதற்கு நாங்கள் WhatsApp சேனல்களின் துணை தனியுரிமைக் கொள்கையை மாற்றியமைத்துள்ளோம், இது WhatsApp தனியுரிமைக் கொள்கைக்கு துணை ஆவணமாக உள்ளது. இந்த அறிவிப்புகளில் பின்வருவன அடங்கும்:
- இந்தத் தனியுரிமைக் கொள்கையின் பெயர் மற்றும் நோக்கம்: WhatsApp அறிவிப்புகள் பிரிவின் துணைத் தனியுரிமைக் கொள்கை, சேனல்களின் துணைத் தனியுரிமைக் கொள்கைக்கு மாற்றீடாக உள்ளது, மேலும் இது சேனல்களை மட்டும் உள்ளடக்காமல், முழு அறிவிப்புகள் பிரிவையும் உள்ளடக்கும் வகையில் விரிவான நோக்கத்தைக் கொண்டுள்ளது.
- சேனல் சந்தாக்கள். சேனல் நிர்வாகிகள் ஒரு சந்தாவை அமைத்து, சேனல் புதுப்பிப்புகளைச் சந்தாதாரர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக மாதந்தோறும் கட்டணம் பெறலாம்.
- அறிவிப்புகள் பிரிவில் உள்ள விளம்பரங்கள் (எ.கா. சேனல்கள் மற்றும் ஸ்டேட்டஸ்). நாங்கள் அறிவிப்புகள் பிரிவில் விளம்பரங்களை அறிமுகப்படுத்துகிறோம், இது சேனல்கள் மற்றும் ஸ்டேட்டஸின் முகப்பிடமாகத் திகழுகிறது. எடுத்துக்காட்டாக, சேனல் நிர்வாகிகள் இப்போது தங்கள் சேனல்களைச் சேனல்கள் கோப்பகம் உள்ளிட்டவற்றில் விளம்பரப்படுத்த கட்டணம் செலுத்தலாம். கூடுதலாக, பிசினஸ்கள் ஸ்டேட்டஸில் விளம்பரங்களைக் காட்டவும் கட்டணம் செலுத்தலாம். இந்த அம்சங்களை வழங்குவதற்காக, WhatsApp கூடுதல் தகவல்களைச் செயலாக்கத் தொடங்கும், அது குறித்து நாங்கள் கீழே விவரிக்கிறோம். அறிவிப்புகள் பிரிவில் மட்டுமே விளம்பரங்கள் இருக்கும் - பயனாளிகள் தங்கள் கலந்துரையாடல் பட்டியலிலோ தனிப்பட்ட மெசேஜ்களிலோ விளம்பரங்களைப் பார்க்க மாட்டார்கள். உங்கள் தனிப்பட்ட மெசேஜ்களும் அழைப்புகளும் பேசுவோர் இடையே ரகசியக்காப்பு செய்யப்படுகின்றன, உங்கள் விளம்பரங்களைக் காண்பிக்க இவற்றைப் பயன்படுத்த முடியாது. அதற்கேற்ப WhatsApp தனியுரிமைக் கொள்கையை மாற்றியமைத்துள்ளோம்.
WhatsApp அறிவிப்புகள் பிரிவின் துணைத் தனியுரிமைக் கொள்கை என்றால் என்ன?
இந்த WhatsApp அறிவிப்புகள் பிரிவின் துணைத் தனியுரிமைக் கொள்கை (“அறிவிப்புகள் பிரிவின் தனியுரிமைக் கொள்கை”), நீங்கள் WhatsApp அறிவிப்புகள் பிரிவை (“அறிவிப்புகள் பிரிவு”) பயன்படுத்தும்போது எங்கள் தகவல் நடைமுறைகளை விளக்க உதவுகிறது, இவை சேனல்கள் (“சேனல்கள்”) மற்றும் ஸ்டேட்டஸ் (“ஸ்டேட்டஸ்”) போன்ற விருப்பத்தேர்வு அம்சங்களின் முகப்பிடமாகத் திகழுகிறது. "WhatsApp", "எங்கள்", "நாங்கள்" அல்லது "எங்களுக்கு" என்று கூறும்போது, நாங்கள் WhatsApp LLCஐக் குறிப்பிடுகிறோம்.
இந்த அறிவிப்புகள் பிரிவின் தனியுரிமைக் கொள்கை WhatsApp தனியுரிமைக் கொள்கைக்கு துணையாக உள்ளது, இது அறிவிப்புகள் பிரிவு உட்பட எங்கள் அனைத்துச் சேவைகளின் பயன்பாட்டிற்கும் பொருந்தும். இந்த அறிவிப்புகள் பிரிவின் தனியுரிமைக் கொள்கையில் பயன்படுத்தப்படும் ஆனால் வரையறுக்கப்படாத எந்தப் பெரியெழுத்துச் சொற்களும் WhatsApp தனியுரிமைக் கொள்கையில் வரையறுக்கப்பட்ட அர்த்தங்களைக் கொண்டுள்ளன. இந்த அறிவிப்புகள் பிரிவின் தனியுரிமைக் கொள்கைக்கும் WhatsApp தனியுரிமைக் கொள்கைக்கும் இடையில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், இந்த அறிவிப்புகள் பிரிவின் தனியுரிமைக் கொள்கையானது நீங்கள் அறிவிப்புகள் பிரிவைப் பயன்படுத்துவதைப் பொறுத்த மட்டிலும் முரண்பாட்டின் அளவிற்கு மட்டுமே கட்டுப்படுத்தும்.
அறிவிப்புகள் பிரிவுக்கான துணைச் சேவை விதிமுறைகள் அறிவிப்புகள் பிரிவை நீங்கள் பயன்படுத்துவதற்குப் பொருந்தும். இந்த விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் இடத்தில், இந்த அறிவிப்புகள் பிரிவின் தனியுரிமைக் கொள்கை, சேனல்களின் துணைத் தனியுரிமைக் கொள்கையை முழுவதுமாக மாற்றுகிறது. WhatsApp சேனல்களின் வழிகாட்டுதல்கள், நீங்கள் சேனல்களைப் பயன்படுத்தும்போது கூடுதலாகப் பொருந்தும்.
முக்கியமாக, WhatsApp தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி, நீங்கள் அறிவிப்புகள் பிரிவைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் WhatsApp தனிப்பட்ட மெசேஜ்களின் தனியுரிமையானது பாதிக்கப்படாது, அது தொடர்ந்து பேசுவோர் இடையே ரகசியக்காப்பு செய்யப்பட்டு இருக்கும்.
இந்த அறிவிப்புகள் பிரிவின் தனியுரிமைக் கொள்கை எதனை உள்ளடக்கியது?
இந்த அறிவிப்புகள் பிரிவின் தனியுரிமைக் கொள்கை, WhatsApp அறிவிப்புகள் பிரிவில் கிடைக்கப்பெறும் விருப்பத்தேர்வு தயாரிப்புகள், அம்சங்கள் மற்றும் சேவைகளை உள்ளடக்குகிறது, இவற்றுள் பின்வருவன அடங்கும்:
ஸ்டேட்டஸ் என்பது ஒரு விருப்பத்தேர்வுக்குரிய அம்சமாகும், இது பயனர்கள் தங்கள் தொடர்புகள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்களுடன் படங்கள், வீடியோக்கள் மற்றும் பார்வையில் இருந்து மறைந்து போகும் வாசகப் புதுப்பிப்புகள் (“ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகள்”) போன்றவற்றைப் பகிரவும் மற்றவர்கள் பகிர்ந்ததை நீங்கள் மீண்டும் பகிரவும் அனுமதிக்கிறது. ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகளை நீங்கள் WhatsApp இல் பகிரும்போது அவை பேசுவோர் இடையே ரகசியக்காப்பு செய்யப்படுகின்றன.
சேனல்கள் என்பது WhatsApp இல் உள்ள விருப்பத்தேர்வுக்குரிய, ஒரு வழி பிராட்காஸ்ட் அம்சமாகும், இது எங்கள் தனிப்பட்ட மெசேஜ் அனுப்பும் சேவைகளிலிருந்து வேறுபட்டது, இது சேனலை உருவாக்க அல்லது நிர்வகிக்க உங்களை அனுமதிக்கிறது (உங்களைச் சேனல் “நிர்வாகி” ஆக்குகிறது), இந்தச் சேனல்களில் மற்றவர்கள் பார்ப்பதற்காக நீங்கள் புதுப்பிப்புகளை ("சேனல் புதுப்பிப்புகள்") பகிரலாம். நீங்கள் சேனல் புதுப்பிப்புகளைப் பார்க்கலாம் மற்றும் தொடர்பு கொள்ளலாம், மேலும் குறிப்பிட்ட சேனல்களைப் பின்தொடர்பவராக (“பின்தொடர்பவர்") பின்பற்றலாம். பின்தொடராதவர்களும் (“பார்வையாளர்கள்”) சேனல் புதுப்பிப்புகளைப் பார்க்கலாம் மற்றும் தொடர்பு கொள்ளலாம்.
சேனல் சந்தாக்கள் என்பன சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெறக்கூடிய, சேனல் புதுப்பிப்புகளைப் பெறுவதற்குக் கட்டணம் செலுத்தி சந்தா சேரும் விருப்பத்தை வழங்கும் சேனல்கள் ("சேனல் சந்தா புதுப்பிப்புகள்") ஆகும். நீங்கள் ஒரு சேனலுக்குச் சந்தா சேர்ந்தால், சேனல் சந்தாக்களின் சேவை விதிமுறைகளும் பொருந்தும்.
அறிவிப்புகள் பிரிவில் உள்ள விளம்பரங்கள் (எ.கா. சேனல்கள் மற்றும் ஸ்டேட்டஸ்). விளம்பரதாரர்கள், பிசினஸ்கள், நிறுவனங்கள் மற்றும் பிறர் அறிவிப்புகள் பிரிவில் விளம்பரங்களைக் காண்பிக்கக் கட்டணம் செலுத்தலாம், இவற்றுள் விளம்பரப்படுத்தப்பட்ட சேனல்கள் மற்றும் ஸ்டேட்டஸில் காண்பிக்கப்படும் விளம்பரங்களும் அடங்கும். விளம்பரங்கள் ஆனது அறிவிப்புகள் பிரிவுக்குப் படிப்படியாக வரும், எனவே அவற்றைப் பார்க்கத் தொடங்குவதற்குச் சிறிது நேரம் ஆகலாம்.
இது எனது வழக்கமான WhatsApp மெசேஜ்கள் மற்றும் அழைப்புகளை எவ்வாறு பாதிக்கிறது?
முக்கியமாக, WhatsApp தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி, நீங்கள் அறிவிப்புகள் பிரிவைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் WhatsApp தனிப்பட்ட மெசேஜ்கள் மற்றும் அழைப்புகளின் தனியுரிமையானது பாதிக்கப்படாது, அது தொடர்ந்து பேசுவோர் இடையே ரகசியக்காப்பு செய்யப்பட்டு இருக்கும். சேனல்கள் மற்றும் ஸ்டேட்டஸின் முகப்பிடமாகத் திகழும் அறிவிப்புகள் பிரிவில் விளம்பரங்களைக் காண்பிக்க உங்கள் தனிப்பட்ட மெசேஜ்கள் அல்லது அழைப்புகளின் பகிர்வை நாங்கள் பயன்படுத்த மாட்டோம்.
நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்
WhatsApp தனியுரிமைக் கொள்கை எங்கள் சேவைகளில் நாங்கள் சேகரிக்கும் தகவல்களை விவரிக்கிறது. நீங்கள் அறிவிப்புகள் பிரிவைப் பயன்படுத்தும்போது, நாங்கள் பின்வருபவற்றையும் சேகரிக்கிறோம்:
அறிவிப்புகள் பிரிவுத் தகவல்கள்
- சேனல் தகவல்கள். சேனலை உருவாக்க, சேனலின் பெயர் உட்பட அடிப்படைத் தகவல்களை நிர்வாகிகள் வழங்க வேண்டும். தனித்துவமான நிர்வாகியின் பெயர், ஐகான், சுயவிவரப் படம், விவரம் அல்லது மூன்றாம் தரப்புத் தளங்களுக்கான இணைப்புகள் போன்ற பிற தகவல்களைச் சேர்க்கவும் நிர்வாகிகள் தேர்வு செய்யலாம்.
- சேனல் புதுப்பிப்புகள். நிர்வாகிகள் உருவாக்கும் அல்லது பகிரும் சேனல் புதுப்பிப்புகளையும் சேனல் சந்தா புதுப்பிப்புகளையும் நாங்கள் சேகரிக்கிறோம், அதாவது வாசகம், வீடியோக்கள், படங்கள், படங்கள், ஆவணங்கள், இணைப்புகள், GIFகள், ஸ்டிக்கர்கள், ஆடியோ பகிர்வு, அல்லது அவர்களின் சேனலில் பிறர் பார்க்கும் வகையில் உள்ள பிற வகை பகிர்வு ஆகியவை இவற்றுள் அடங்கும்.
- பின்தொடர்பவர்கள், பார்வையாளர்கள் மற்றும் பிற தொடர்புகள். பின்தொடர்பவர்கள் மற்றும் பார்வையாளர்களைப் பற்றிய அவர்களின் ரியாக்ஷன்கள், மொழி தேர்வுகள் மற்றும் அவர்கள் பின்பற்றும் சேனல்கள் போன்ற தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம்.
- பயன்பாடு மற்றும் பதிவு தகவல்கள். சேவை தொடர்பானவை, கண்டறிதல் மற்றும் செயல்திறன் தொடர்பான தகவல்கள் போன்று அறிவிப்புகள் பிரிவில் உங்கள் செயல்பாடு குறித்த தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம். அறிவிப்புகள் பிரிவில் உங்கள் செயல்பாடு மற்றும் அவற்றின் பயன்பாடு பற்றிய தகவல்களையும் நாங்கள் சேகரிக்கிறோம், இதில் நீங்கள் பார்க்கும் மற்றும் சந்தா சேரும் சேனல்களின் வகைகள் மற்றும் அவற்றுடன் நீங்கள் செயலை மேற்கொள்ளும் விதம்; அறிவிப்புகள் பிரிவில் பகிர்வை உருவாக்கும், பகிரும் அல்லது நீக்கும் நேரம்; சேனல்கள், சேனல் புதுப்பிப்புகள், சேனல் சந்தா புதுப்பிப்புகள் மற்றும் ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகள் பற்றிய மெட்டாடேட்டா; பார்வையாளர்களின் பார்வைகள் மற்றும் ரியாக்ஷன்கள்; நீங்கள் பயன்படுத்தும் அறிவிப்புகள் பிரிவின் அம்சங்கள் மற்றும் அமைப்புகள் மற்றும் அவற்றை நீங்கள் அவற்றைப் பயன்படுத்தும் விதம் மற்றும் செயலை மேற்கொள்ளும் விதம் மற்றும் அறிவிப்புகள் பிரிவில் உங்கள் செயல்பாடுகளின் நேரம், கால இடைவெளி மற்றும் கால அளவு ஆகியவை அடங்கும்.
- பயனர் புகார்கள். பயனர்கள் அல்லது மூன்றாம் தரப்பினர் உங்கள் சேனல் அல்லது குறிப்பிட்ட சேனல் புதுப்பிப்புகள், சேனல் சந்தா புதுப்பிப்புகள் அல்லது ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகள் குறித்து எங்களிடம் புகாரளிக்கலாம் - எடுத்துக்காட்டாக, எங்கள் விதிமுறைகள் அல்லது கொள்கைகள் அல்லது உள்ளூர் சட்டத்தின் சாத்தியமான மீறல்களைப் பற்றி எங்களிடம் புகாரளிக்கலாம். புகார் செய்யப்படும்போது, புகாரளிக்கும் தரப்பு மற்றும் புகார் சுமத்தப்பட்ட பயனர்(பயனர்கள்) பற்றிய தகவல்களையும், தொடர்புடைய சேனல்கள் அல்லது சேனல் புதுப்பிப்புகள், பயனர் தொடர்பாடல்கள் மற்றும் செயல்பாடு மற்றும் சேனலின் ஒலியடக்கிய பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மற்றும் பிற பயனர் புகார்கள் அல்லது அமலாக்க நடவடிக்கைகள் போன்ற பிற தகவல்கள் என புகாரை விசாரிப்பதில் எங்களுக்கு உதவக்கூடிய பிற தகவல்களையும் நாங்கள் சேகரிப்போம். மேலும் அறிய, எங்கள் WhatsApp சேனல்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் காபந்து அம்சங்கள் ஆகியவற்றைப் பார்வையிடுங்கள்.
சேனல் சந்தாக்கள் குறித்த தகவல்கள்
- சந்தாக்களுக்கான நிர்வாகி தகவல்கள். சேனல் சந்தாக்களைப் பொறுத்தவரை, நிர்வாகிகள் தங்கள் சேனல் சந்தாவை அமைத்து நிர்வகிக்கும்போது, சந்தா விலை நிர்ணயம், பில்லிங் மற்றும் புதுப்பிப்புக் காலங்கள், ரத்துசெய்தல் மற்றும் முடித்தல் மற்றும் கட்டணம் செலுத்தும் முறைகள் போன்ற தகவல்களை நாங்கள் கூடுதலாகச் சேகரிப்போம்.
- சந்தாதாரர் தகவல்கள். நீங்கள் ஒரு சேனலுக்குச் சந்தா செலுத்த தேர்வுசெய்தால், நீங்கள் சந்தா சேர்ந்த சேனல்கள், தொடக்க தேதி மற்றும் புதுப்பிப்பு விதிமுறைகள் போன்ற தகவல்களை நாங்கள் சேகரிப்போம்.
- சந்தா பேமெண்ட் தகவல்கள். நீங்கள் ஒரு சேனலுக்குச் சந்தா சேர்ந்தால், உங்கள் பேமெண்ட் முறை மற்றும் பரிவர்த்தனை தொகை போன்ற தகவல்களையும் நாங்கள் சேகரிப்போம். உங்கள் பரிவர்த்தனை பற்றிய தகவல்களை எங்களுக்கு வழங்கவும், உங்கள் பேமெண்ட்டைச் செயல்படுத்தவும், உங்கள் சந்தாக்களை நிர்வகிக்கவும், Apple App Store அல்லது Google Play போன்ற பல மூன்றாம் தரப்பு பேமெண்ட் சேவை வழங்குநர்களுடன் நாங்கள் பணியாற்றுகிறோம்.
விளம்பரத் தகவல்கள்
- அறிவிப்புகள் பிரிவில் (எ.கா. சேனல்கள் மற்றும் ஸ்டேட்டஸ்) விளம்பரங்களைக் காண்பித்தால், நீங்கள் அந்த விளம்பரத்தைப் பார்க்கிறீர்களா அல்லது தட்டுகிறீர்களா, விளம்பரப்படுத்தப்பட்ட சேனலைப் பின்தொடர்கிறீர்களா, அல்லது ஆர்டர் செய்கிறீர்களா அல்லது WhatsApp இல் வாங்குகிறீர்களா என்பது போன்று அவர்களுடனான உங்கள் செயல் மேற்கொள்ளுதலைப் பற்றிய தகவல்களை நாங்கள் சேகரிப்போம். விளம்பரதாரர்களுடன் நீங்கள் மேற்கொள்ளும் செயல்களைப் பற்றிய தகவல்களையும் நாங்கள் சேகரிக்கிறோம், அதாவது ஒரு விளம்பரத்தில் நீங்கள் செயலை மேற்கொண்ட பிறகு அந்த விளம்பரதாரருடன் நீங்கள் பரிமாறிக் கொள்ளும் மெசேஜ்கள் அல்லது அழைப்புகளின் எண்ணிக்கையையும் நாங்கள் சேகரிக்கிறோம்.
கணக்குகள் மையத் தகவல்கள்
- கணக்குகள் மையம். உங்கள் WhatsApp கணக்கை கணக்குகள் மையத்தில் சேர்க்க நீங்கள் தேர்வுசெய்தால், அதே கணக்குகள் மையத்தில் உள்ள கணக்குகள் முழுவதுக்குமான உங்கள் தகவல்களை நாங்கள் இணைப்போம். கணக்குகள் மையத்தில் உங்கள் கணக்கைச் சேர்க்கும்போது WhatsApp சேகரிக்கும் தகவல்களைப் பற்றி மேலும் அறிக.
நாங்கள் தகவல்களைப் பயன்படுத்தும் விதம்
பின்வரும் கூடுதல் வழிகளில் நாங்கள் சேகரிக்கும் தகவல்களைப் பயன்படுத்துகிறோம்:
- அறிவிப்புகள் பிரிவை வழங்கப் பயன்படுத்துகிறோம். அறிவிப்புகள் பிரிவை இயக்க, வழங்க மற்றும் மேம்படுத்த எங்களிடம் உள்ள தகவல்களைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, நீங்கள் சேனல்கள் மற்றும் ஸ்டேட்டஸ் அல்லது சேனல் புதுப்பிப்புகள் மற்றும் ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகளை உருவாக்க, பின்தொடர அல்லது செயலை மேற்கொள்ள, கூடுதல் அறிவிப்புகள் பிரிவு அம்சங்களை வழங்குவதில் அல்லது மேம்படுத்துவதில் எங்களுக்கு உதவ, அல்லது அறிவிப்புகள் பிரிவில் உங்களுக்குக் கிடைக்கும் அனுபவத்தை மேம்படுத்த, அதாவது உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாகவும் சுவாரசியமாகவும் இருக்கக்கூடிய சேனல்களை உங்களுக்குக் காண்பிக்க அல்லது உங்களுக்குப் பரிந்துரைக்க அல்லது ஸ்டேட்டஸ்களைக் காட்ட இந்தத் தகவல்களை நாங்கள் பயன்படுத்தக்கூடும். ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகள் அவைகளாகவே பேசுவோர் இடையே ரகசியக்காப்பு செய்யப்படுகின்றன.
- அறிவிப்புகள் பிரிவின் பயன்பாட்டைப் புரிந்துகொள்ளப் பயன்படுத்துகிறோம். அறிவிப்புகள் பிரிவின் வினைவுறு திறன், செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் திறப்பாட்டை அளவிடுவதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும், மக்கள் அறிவிப்புகள் பிரிவு அம்சங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் மற்றும் தொடர்பு கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்கும், எங்கள் சேவைகளை எவ்வாறு முன்னேற்றலாம் மற்றும் மேம்படுத்தலாம் என்பதைத் தீர்மானிக்கவும் இந்தத் தகவல்களைப் பயன்படுத்துகிறோம்.
- நிர்வாகிக்குக் கூடுதல் சேவைகளை வழங்கப் பயன்படுத்துகிறோம். நிர்வாகிகளுக்கு அவர்களின் சேனல்களுடனான ஈடுபாடு தொடர்பான அளவீடுகளை வழங்குவது போன்ற கூடுதல் சேவைகளை நாங்கள் வழங்கக்கூடும்.
- பாதுகாப்பு, காபந்து மற்றும் ஒருமைப்பாட்டிற்குப் பயன்படுத்துகிறோம். எங்களிடம் உள்ள தகவல்களை (சேனல் புதுப்பிப்புகள் மற்றும் அறிவிப்புகள் பிரிவில் உங்கள் செயல்பாடு உட்பட) தீங்கு விளைவிக்கும் நடத்தையை எதிர்த்துப் போராடுவது; மோசமான அல்லது தீங்கு விளைவிக்கும் அனுபவங்களிலிருந்து பயனர்களைப் பாதுகாப்பது, சந்தேகத்திற்கிடமான செயல்பாடு அல்லது எங்கள் WhatsApp சேனல்களின் வழிகாட்டுதல்கள் உட்பட, எங்கள் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளின் விதிமீறல்களைக் கண்டறிந்து விசாரிப்பது உட்பட எங்கள் சேவைகளில் பாதுகாப்பு, காபந்து மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதிப்படுத்தவும், அறிவிப்புகள் பிரிவு உட்பட எங்கள் சேவைகள் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் பயன்படுத்துகிறோம்.
அறிவிப்புகள் பிரிவில் (எ.கா. சேனல்கள் மற்றும் ஸ்டேட்டஸ்) உள்ள விளம்பரங்களுக்கு நாங்கள் தகவல்களைப் பயன்படுத்தும் விதம்
- சேனல்கள் மற்றும் ஸ்டேட்டஸ்களின் முகப்பிடமான அறிவிப்புகள் பிரிவில் நாங்கள் உங்களுக்கு விளம்பரங்களைக் காண்பித்தால், எங்கள் விளம்பரச் சேவைகளை வழங்கவும் அளவிடவும் வரையறுக்கப்பட்ட வகையான தகவல்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். நாட்டின் குறியீடு போன்ற அடிப்படை கணக்குத் தகவல்களும், மொழி, பொதுவான (துல்லியமாக இல்லை) இருப்பிடம் போன்ற சாதனத் தகவல்களும், பின்பற்றப்படும் சேனல்கள் மற்றும் விளம்பரத்தில் மேற்கொள்ளப்பட்ட செயல்கள் குறித்த தகவல்கள் போன்ற அறிவிப்புகள் பிரிவின் செயல்பாடு ஆகியவை இதில் அடங்கும். உங்களுக்குச் சுவாரஸ்யமான மற்றும் தொடர்புடையதாக இருக்கும் விளம்பரங்களைக் காட்ட விரும்புகிறோம், எனவே நாங்கள் உங்களுக்கு விளம்பரங்களைக் காட்டினால், இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி அனுமானங்களைச் செய்து, நாங்கள் உங்களுக்குக் காண்பிக்கும் விளம்பரங்களை நபருக்கேற்றபடியாக்கி, அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அளவிடுகிறோம்.
- விளம்பரதாரர்கள், பிசினஸ்கள் மற்றும் பிறருக்கு, அவர்களின் விளம்பரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் வேலை செய்கின்றன என்பதை அளவிட உதவுவதன் மூலம் அளவீடு, பகுப்பாய்வு மற்றும் பிசினஸ் சேவைகளையும் நாங்கள் வழங்குகிறோம்.
சேனல் சந்தாக்களுக்கு நாங்கள் தகவல்களைப் பயன்படுத்தும் விதம்
நீங்கள் நிர்வாகியாகவோ சந்தாதாரராகவோ சேனல் சந்தாக்களைப் பயன்படுத்தினால், சேனல் சந்தாக்களை வழங்கவும் நிர்வகிக்கவும் எங்களிடம் உள்ள தகவல்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம், இதில் சந்தாக்களைத் தொடங்குவது, புதுப்பிப்பது மற்றும் முடித்துக் கொள்வது; பேமெண்ட்டுகள் மற்றும் பேஅவுட்களை நிர்வகிப்பது; மற்றும் சந்தாதாரர்களுக்குச் சேனல் சந்தா அறிவிப்புகளைக் கிடைக்கச் செய்வது உள்ளிட்டவை அடங்கும்.
தகவல்களை நாங்கள் பகிரும் விதம்
அறிவிப்புகள் பிரிவின் தகவல்கள் பின்வரும் வழிகளில் பகிரப்படுகிறது:
- பொதுத் தகவல்கள். சேனல் புதுப்பிப்புகள், சேனல் சந்தா புதுப்பிப்புகள் மற்றும் சேனல்களில் நிர்வாகிகள் பகிரும் தகவல்கள் பொதுவானவை ஆகும், மேலும் இவை பார்வையாளர், சந்தா அல்லது தனியுரிமை அமைப்புகள் எதற்கும் உட்பட்டு பிறருக்குக் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகள் உங்கள் தொடர்புகள் அல்லது நீங்கள் தேர்ந்தெடுக்கும் பார்வையாளர்களுக்குத் தெரியும். சேனல் புதுப்பிப்புகள் மற்றும் ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகள் உட்பட அறிவிப்புகள் பிரிவில் நீங்கள் பகிரும் தகவல்களை எவரும் ஸ்கிரீன்ஷாட்டுகள் எடுக்கலாம் அல்லது பதிவு செய்யலாம் மற்றும் அவற்றை WhatsApp அல்லது வேறு யாருக்காவது அனுப்பலாம் அல்லது எங்கள் சேவைகளிலிருந்து வெளியே அவற்றைப் பகிரலாம், தரவேற்றுமதி செய்யலாம் அல்லது பதிவேற்றலாம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
- பார்வையாளர்கள். நிர்வாகிகள் தங்கள் சேனல்களை யார் பின்தொடர்கிறார்கள் மற்றும் சேனலுக்குச் சந்தா சேர்கிறார்கள் என்பதைக் காணலாம். பயனர்கள் தங்கள் ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகளை யார் பார்க்கிறார்கள் அல்லது ரியாக்ட் செய்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.
- மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் மற்றும் Meta நிறுவனங்கள். அறிவிப்புகள் பிரிவை இயக்க, வழங்க, மேம்படுத்த, புரிந்துகொள்ள மற்றும் ஆதரிக்க எங்களுக்கு உதவும் விதமாக மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் மற்றும் பிற Meta நிறுவனங்கள் உடன் நாங்கள் பணியாற்றுகிறோம். பகிர்வு அல்லது அறிவிப்புகள் பிரிவின் பயன்பாட்டு விதிமீறலை முன்கூட்டியே கண்டறிவதற்கு வகைப்படுத்திகள், எங்களுக்குக் கிடைக்கப்பெறும் பகிர்வு மற்றும் நடத்தை சமிக்கைகள், மனித மதிப்பாய்வு மற்றும் பயனர் அறிக்கைகள் ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தும் கண்டறிதல் மற்றும் அளவீட்டுக் கருவிகளின் பயன்பாடு உட்பட, அறிவிப்புகள் பிரிவு மற்றும் எங்கள் சேவைகளில் பாதுகாப்பு, காபந்து மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்த எங்களுக்கு உதவும் விதமாக, Meta நிறுவனங்களுடனும் இணைந்து செயல்படுகிறோம். இந்தத் திறனில் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் மற்றும் பிற Meta நிறுவனங்கள் தகவல்களைப் பெறும்போது, எங்கள் வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க, எங்கள் சார்பாக உங்கள் தகவல்களை அவர்கள் பயன்படுத்துமாறு நாங்கள் கோருகிறோம்.
- கணக்குகள் மையம். கணக்குகள் மையத்தில் உங்கள் WhatsApp கணக்கைச் சேர்த்திருந்தால், உங்கள் தகவல்கள் பகிரப்படும் விதம் பற்றி மேலும் அறிய இங்கே பார்வையிடுங்கள்.
சந்தாக்கள் தொடர்பான தகவல்கள் பின்வருமாறு பகிரப்படுகின்றன:
- பேமெண்ட் சேவை வழங்குநர்கள். நீங்கள் ஒரு சேனலுக்குச் சந்தா சேரும்போதான தருணங்களில் பேமெண்ட்டுகள் மற்றும் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்த, Google Play Store மற்றும் Apple App Store உள்ளிட்ட மூன்றாம் தரப்பு பேமெண்ட் சேவை வழங்குநர்களுடன் நாங்கள் பணியாற்றுகிறோம். அங்கீகாரம் மற்றும் பரிவர்த்தனை தகவல்கள் போன்ற தகவல்களை இந்த மூன்றாம் தரப்பு பேமெண்ட் சேவை வழங்குநர்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். நீங்கள் மூன்றாம் தரப்பு தளத்தின் பேமெண்ட் சேவை வழங்குநர் சேவைகளைப் பயன்படுத்தும்போது, அவற்றின் சொந்த விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளே அந்தச் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும் விதத்தை நிர்வகிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
விளம்பரங்கள் தொடர்பான தகவல்கள் பின்வருமாறு பகிரப்படுகின்றன:
- WhatsApp இல் விளம்பரம் செய்யும் பிசினஸ்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, ஒரு விளம்பரம் அதிக ஈடுபாட்டைப் பெறுகிறதா அல்லது எதிர்மறையான கருத்துக்களைப் பெறுகிறதா என்பது போன்ற அவர்களின் விளம்பரச் செயல்திறன் குறித்த அறிக்கைகளை நாங்கள் வழங்குகிறோம்.
- உங்கள் WhatsApp கணக்கை கணக்குகள் மையத்தில் சேர்த்திருந்தால், உங்கள் தகவல்கள் இணைக்கப்பட்டு, அதே கணக்குகள் மையத்தில் உள்ள கணக்குகள் முழுவதும் பயன்படுத்தப்படும், இதில் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் விளம்பரங்களை நபருக்கேற்றபடியாக்குவதும் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அளவிடுவதும் அடங்கும்.
உங்கள் தகவல்களை நிர்வகித்தல் மற்றும் சேமித்து வைத்தல்
WhatsApp தனியுரிமைக் கொள்கையில் அமைக்கப்பட்டுள்ள எங்கள் செயலியில் உள்ள அமைப்புகளைப் பயன்படுத்தி உங்கள் சேனல்களின் தகவல்களை அணுகலாம், நிர்வகிக்கலாம் அல்லது போர்ட் செய்யலாம்.
- உங்கள் சந்தாதாரர்களுக்கான பொது சேனல் புதுப்பிப்புகள் மற்றும் சேனல் சந்தா தொடர்பான புதுப்பிப்புகளைத் தக்கவைத்தல். சேனல்களை வழங்கும் வழக்கமான போக்கில், பாதுகாப்பு, காபந்து மற்றும் ஒருமைப்பாடு நோக்கங்கள் அல்லது நீண்ட காலம் தக்கவைக்க வேண்டிய பிற சட்ட அல்லது இணக்கக் கடமைகளுக்கு உட்பட்டு, மேலும் நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு காப்பக விருப்பங்களுக்கும் உட்பட்டு, 30 நாட்கள் வரை சேனல்கள் புதுப்பிப்புகள் மற்றும் சேனல் சந்தா புதுப்பிப்புகளை எங்கள் சர்வர்களில் சேமித்து வைப்போம். சேனல் புதுப்பிப்புகள் மற்றும் சேனல் சந்தா புதுப்பிப்புகள், பார்வையாளர்கள், பின்தொடர்பவர்களின் அல்லது சந்தாதாரர்களின் சாதனங்களில் நீண்ட காலத்திற்கு இருக்கக்கூடும், இருப்பினும் புதுப்பிப்புகள் விரைவாக மறைந்துவிடும் விருப்பங்களை நாங்கள் வழங்கக்கூடும், எடுத்துக்காட்டாக 7 நாட்கள் அல்லது 24 மணிநேரங்களுக்குப் பிறகு மறைந்துவிட நிர்வாகிகள் தேர்வுசெய்யும்போது.
- அறிவிப்புகள் பிரிவுத் தகவல்களைச் சேமித்து வைத்தல். இந்த அறிவிப்புகள் பிரிவின் தனியுரிமைக் கொள்கை மற்றும் WhatsApp தனியுரிமைக் கொள்கையில் அடையாளம் காணப்படும் நோக்கங்களுக்காக, எங்கள் அறிவிப்புகள் பிரிவை வழங்குவது அல்லது சட்டபூர்வமான கடமைகளுக்கு இணங்குவது, எங்கள் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை மீறுவது அல்லது தடுப்பது, அல்லது எங்கள் உரிமைகள், சொத்து, மற்றும் பயனர்களைப் பாதுகாப்பது அல்லது காப்பது போன்ற பிற நியாயமான நோக்கங்களுக்காக தேவையான தகவல்களைத் தேவைப்படும் வரையில் நாங்கள் சேமித்து வைப்போம். சேமிப்பகக் காலங்கள் தனி வழக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அவை தகவல்களின் தன்மை, காரணம், தொடர்புடைய சட்ட அல்லது செயல்பாட்டு தக்கவைப்பு தேவைகள் மற்றும் சட்டபூர்வமான கடமைகள் போன்ற காரணிகளைப் பொறுத்தது.
- உங்கள் சேனலை நீக்குதல். நீங்கள் நிர்வாகியாக இருந்தால், உங்கள் சேனலை நீக்குவதன் மூலம், உங்கள் செயலியில் உள்ள அறிவிப்புகள் பிரிவிலுள்ள சேனல் மற்றும் சேனல் புதுப்பிப்புகள் அகற்றப்படும், அப்போது சேனல்கள் மூலம் மற்ற பயனர்களால் அவற்றை இனி அணுக முடியாது. தொழில்நுட்பக் காரணங்களுக்காக, எங்கள் சர்வர்களில் உள்ள தகவல்களை நீக்க அல்லது அடையாளம் அகற்ற, நீக்கச் செயல்முறையின் தொடக்கத்திலிருந்து 90 நாட்கள் வரை ஆகும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். சட்டப்பூர்வக் கடமைகளுக்கு இணங்குவது, எங்களின் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை மீறுவது அல்லது தீங்கிழைக்காமல் தடுக்கும் முயற்சிகள் போன்ற விஷயங்களுக்குத் தேவையான வரையில் சில தகவல்களை நாங்கள் சேமித்து வைக்கக்கூடும். உங்கள் சேனலை நீங்கள் நீக்கும் போது, அது பிற பயனர்கள் தங்கள் சாதனத்தில் சேமித்து வைத்த சேனல் புதுப்பிப்புகளின் நகல் அல்லது பிற பயனர்களுக்கு அனுப்பிய அல்லது எங்கள் சேவைகளில் இருந்து பகிர்ந்த சேனல் புதுப்பிப்புகளின் நகல் எனப் பிற பயனர்கள் தொடர்ந்து வைத்திருக்கக்கூடிய தகவல்களை மற்றும் பகிர்வைப் பாதிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- உங்கள் ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகளை நீக்குதல். ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு மறைந்துவிடும், ஆனால் ஸ்டேட்டஸ் புதுப்பிப்பிலிருந்தே அவற்றை நீங்கள் விரைவில் நீக்கலாம்.
- சேனல் புதுப்பிப்புகளை அகற்றுதல். பதிவிட்ட பிறகு 30 நாட்களுக்குள் நிர்வாகிகள் சேனல் புதுப்பிப்புகளை அகற்றலாம்.
WhatsApp தனியுரிமைக் கொள்கையில் அமைக்கப்பட்டுள்ள எங்கள் செயலியில் உள்ள அமைப்புகளைப் பயன்படுத்தி உங்கள் விளம்பரங்களின் தகவல்களை அணுகலாம், நிர்வகிக்கலாம் அல்லது போர்ட் செய்யலாம்.
எங்கள் தரவு நீக்கம் மற்றும் தக்கவைப்பு நடைமுறைகள் பற்றியும், உங்கள் கணக்கை நீக்கும் விதம் பற்றியும் மேலும் இங்கே அறியலாம்.
எங்கள் கொள்கை குறித்த சமீபத்திய அறிவிப்புகள்
இந்த அறிவிப்புகள் பிரிவின் தனியுரிமைக் கொள்கையை நாங்கள் திருத்தலாம் அல்லது மாற்றியமைக்கலாம். பொருத்தமான திருத்தங்கள் அல்லது மாற்றியமைத்தல்கள் குறித்த அறிவிப்பை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம், அத்துடன் மேலே “நடைமுறைப்படுத்தப்படும் தேதியை” அண்மைத் தகவலுக்கு ஏற்றவாறு மாற்றியமைப்போம். குறிப்பிட்ட கால இடைவெளியில் எங்கள் அறிவிப்புகள் பிரிவின் தனியுரிமைக் கொள்கையை மீண்டும் படித்துப் பாருங்கள்.