பாதுகாப்பு பக்கம்
முதல் நாளிலிருந்து, நாங்கள் WhatsAppஐ உருவாக்கியது தங்கள் நண்பர்களுட ன் தொடர்பிலிருக்கவும், முக்கிய தகவல்களை இயற்கைபேரிடர் காலத்தில் பகிரவும் , பிரிந்தகுடும்பத்துடன் மீண்டும் இணையவும், அல்லது மேம்பட்டவாழ்கையை தேடவும் உதவுவதற்காகும். தங்களின் தனிப்பட்ட தருணங்கள் WhatsAppல் பகிரப்படுகிறது, அதனால்தான் நாங்கள் முழு மறையாக்கத்தை அமைத்துள்ளோம். முழு மறையாக்கதின் மூலம், தங்கள் தகவல்கள், படங்கள், காணொலிகள், குரல் தகவல்கள், ஆவணங்கள், மற்றும் அழைப்புகள் இவை அனைத்தும் தவறான நபர்களிடமிருந்து பாதுகாக்கப்படுகிறது.
தாங்களும் தாங்கள் தொடர்புகொள்ளும் நபரும் பயன்படுத்தும் போது WhatsAppன் முழு மறையாக்கம் இயக்கப்படும். பல்வேறு தகவல் பரிமாறும் பயன்பாடுகள் அவர்களுக்கும் தங்களுக்குமான தகவல்களை மட்டுமே மறையாக்கம் செய்கின்றனர், ஆனால் WhatsAppன் முழு மறையாக்கத்தின் மூலம் தாங்களும் தாங்கள் தொடர்புகொள்ளும் நபரும் மட்டும் அனுப்பப்படும் தகவல்களை படிக்க இயலும், வேறு எவரும் இடையில் இல்லை, WhatsApp உட்பட. அதாவது தகவல்கள் ஒரு பூட்டைக் கொண்டு பாதுகாக்கப்படுகிறது, தகவல் பெறுநரிடமும் தங்களிடமும் மட்டுமே இந்த பூட்டை திறப்பதற்கான சாவி உண்டு. கூடுதல் பாதுகாப்பிற்கு, அனுப்பப்படும் ஒவ்வொரு தகவலுக்கும் தனியொரு பூட்டும் சாவியும் உண்டு. இவை அனைத்தும் தானாக நடைபெறும்: எந்த ஒரு அமைப்பையும் சிறப்பு பாதுகாப்பு அரட்டையையும் இயக்க தேவையில்லை.
WhatsApp அழைப்பு தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வேறு நாட்டில் இருந்தாலும் அவர்களுடன் பேச உதவும். தங்கள் தகவல்களைப் போலவே, WhatsApp அழைப்புகளும் முழுமையாக மறையாக்கப்படும், வேறு எவரும் கேட்க இயலாது.
தங்களது தகவல்கள் தங்களிடமே. அதனால் தான் WhatsApp தங்கள் தகவல்களை தங்களிடம் சேர்த்த பின் எங்கள் சேவையகத்தில் சேமிப்பதில்லை, மற்றும் முழு மறையாக்கம் என்பது WhatsApp மற்றும் வேறு எவரும் தகவல்களை படிக்க இயலாது.
WhatsApp தங்கள் தகவல்களும் அழைப்புகளும் முழுமையாக மறையாக்கப்படுகிறதா என்று சரிபார்க்க அனுமதிக்கின்றது. தொடர்பு விவரம் அல்லது குழு விவரத்தில் இதற்கான குறிப்பை காணவும்.