WhatsApp பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்

தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்புவதன் தன்மையின் பொருட்டு, உங்கள் தனியுரிமையும் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியமானதாகும். உங்கள் செய்திகளும் அழைப்புகளும் முழுவதும் முறைமையாக்குதல் மூலம் தானாக பாதுகாக்கப்படுகிறது, இதனால் உங்கள் செய்திகளையும் அழைப்புகளையும் WhatsApp உட்பட யாரும் படிக்கவோ கேட்கவோ முடியாது.

நீங்கள் WhatsApp இல் பாதுகாப்பாக இருப்பதற்கு உதவும் வகையில் கூடுதல் அம்சங்களை உருவாக்கியுள்ளோம்.

உங்கள் தனியுரிமை அமைப்புகளைக் கட்டுப்படுத்தலாம்

உங்கள் சுயவிவரப்படம், கடைசியாகப் பார்த்தது மற்றும் அறிமுகம் ஆகிய விஷயங்களை அனைவரும் பார்க்க, தொடர்புகள் மட்டும் அல்லது எனக்கு மட்டும் என்பதற்கு அமைக்கலாம்.

தேவையற்ற பயனர்களைத் தடுக்கலாம்

உரையாடலில் இருந்து நேரடியாக ஒருவர் உங்களைத் தொடர்புக்கொள்வதைத் தடுக்கலாம்.

கணக்குத் தகவல்களைக் கோரலாம்

உங்கள் WhatsApp கணக்குத் தகவல்கள் மற்றும் அமைப்புகளின் அறிக்கையைப் பெறலாம்.

உரையாடலில் உள்ள செய்திகளை அழிக்கலாம்

தனிப்பட்ட அல்லது குழு அரட்டையில் உள்ள செய்திகள் அல்லது எல்லா அரட்டை செய்திகளையும் ஒரே சமயத்தில் நீக்கலாம் .

படித்தக் குறிகளை முடக்கலாம்

அனுப்புநரின் செய்திகளைப் படித்தீர்கள் என்ற தகவலை ஒருவர் பார்க்கலாமா என்பதைத் தேர்வுசெய்யலாம்.

ஸ்பேமை நீக்கி புகாரளிக்கலாம்

பயன்பாட்டிலிருந்தே ஸ்பேமைப் புகாரளிக்கலாம்.

குழுவிலிருந்து வெளியேறலாம்

எந்நேரமும் குழுவிலிருந்து வெளியேறலாம்.

இரு படி சரிபார்ப்பை இயக்கலாம்

கூடுதல் பாதுகாப்பை இயக்க, ஆறு இலக்க பின்னை உருவாக்கலாம்.

கூடுதல் மூலங்கள்

பாதுகாப்புத் தலைப்புகள் பற்றிய கூடுதல் மூலங்களுக்கு, இந்த அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பார்க்கவும்.