உங்கள் தனியுரிமைக்கு எப்போதுமே முன்னுரிமை வழங்குவோம். தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்பலாம்.
எளிமையாகப் பயன்படுத்தக்கூடிய, தனியுரிமைக்கு முக்கியத்துவம் வழங்குகிற ஒரு தயாரிப்பை வடிவமைத்து இந்த உலக மக்களைத் தனிப்பட்ட முறையில் இணைப்பதே எங்களின் நோக்கமாகும். உங்கள் குடும்பத்தினருக்கோ நண்பர்களுக்கோ தனிப்பட்ட செய்தி அனுப்பினாலும் சரி, வணிகம் தொடர்பான செய்திகளை அனுப்பினாலும் சரி, உங்கள் தகவல்தொடர்புகள் யாவும் உங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
உங்கள் தனியுரிமை தானாகவே பாதுகாக்கப்படும்
முழு மறையாக்கம்
முழு மறையாக்கம் செய்த அரட்டைகளில் உள்ள உரையாடல்கள், கோல்டு மெசேஜுடன் தெளிவாக லேபிளிடப்படும்; இந்த மெசேஜ்களும் அழைப்புகளும் உங்களுக்கு இடையே மட்டுமே இருக்கும், WhatsApp உட்பட வேறு யாராலும் அவற்றைப் படிக்கவோ கேட்கவோ முடியாது.
மெசேஜ்கள் அனைத்தும் உங்கள் சாதனத்திலேயே சேமிக்கப்படுகின்றன
உங்கள் தகவல்கள் அனைத்தும் உங்களிடமே இருக்கும். இந்தக் காரணத்தால்தான் உங்கள் தகவல்கள் அனைத்தும் உங்கள் மொபைலிலேயே சேமிக்கப்படுகின்றன, விளம்பரதாரர்களுடன் நாங்கள் அவற்றைப் பகிர்வதில்லை.
உங்கள் தனியுரிமையை நீங்கள் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்
உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் புரிந்துகொள்வதையும் தனிப்பயனாக்குவதையும் WhatsApp எளிமையாக்குகிறது.
ஒருமுறை மட்டும்
ஒருமுறை பார்த்த பிறகு மறையுமாறு படங்களையும் வீடியோக்களையும் அனுப்பலாம்.
WhatsApp செயலியைப் பூட்டுதல்
படித்தமைக்கு ரசீதுகள்
உங்கள் தொடர்புகள் அனுப்பிய செய்திகளை நீங்கள் படித்துவிட்டீர்களா என்பதை அவர்கள் பார்க்கலாமா அல்லது வேண்டாமா என்று தேர்வு செய்யலாம்.
இறுதியாக கண்டது
கடைசியாக WhatsApp செயலியை நீங்கள் எப்போது திறந்தீர்கள் என்பதை உங்கள் தொடர்புகளில் உள்ளவர்கள் மட்டும் பார்க்கலாமா, எவர் வேண்டுமானாலும் பார்க்கலாமா அல்லது யாரும் பார்க்க வேண்டாமா என்பதைத் தேர்வு செய்யலாம்.
சுயவிவரப்படத் தனியுரிமை
உங்கள் சுயவிவரப்படத்தை உங்கள் தொடர்புகளில் உள்ளவர்கள் மட்டும் பார்க்கலாமா, எவர் வேண்டுமானாலும் பார்க்கலாமா அல்லது யாரும் பார்க்க வேண்டாமா என்று தீர்மானிக்கலாம்.
ஸ்டேட்டஸ் தனியுரிமை
உங்கள் ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகளை யாரெல்லாம் பார்க்கலாம் என்று தேர்வு செய்யலாம்.
குழுத் தனியுரிமை அமைப்புகள்
குழு அரட்டையில் உங்களை எவர் வேண்டுமானாலும் சேர்க்கலாமா, உங்கள் தொடர்புகளில் உள்ளவர்கள் மட்டும் சேர்க்கலாமா, உங்கள் தொடர்புகளில் உள்ள சிலர் மட்டும் சேர்க்கலாமா என்று நீங்கள் தேர்வுசெய்து கொள்ளலாம்.
உங்களைப் பாதுகாப்பதற்குக் கடமைப்பட்டுள்ளோம்
விவரமறிந்து நீங்கள் முடிவெடுப்பதற்கு உதவும் வகையிலும், உங்கள் தகவல்தொடர்புகளைப் பத்திரப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும், கருவிகள், அம்சங்கள், வளங்கள் ஆகியவற்றை WhatsApp தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.
தெரிந்து கொள்ளுங்கள்:
Android | iPhone இல் எவ்வாறு உங்கள் தனியுரிமை அம்சங்களைப் பிரத்தியேகமாக்குவது
தரவின் வெளிப்படைத்தன்மை
எந்தெந்த தகவல்களைத் தனிப்பட்டதாக வைத்திருக்க வேண்டும், எந்தெந்த தகவல்களைச் சேகரித்து எங்கள் தாய் நிறுவனமான Meta உடன் பகிர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க விரும்புகிறோம். நாங்கள் பகிரும் தகவல்கள், பயனர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்குவதிலும் பாதுகாப்பை அதிகரிப்பதிலும் எங்களுக்கு உதவுகின்றன. மிகவும் சமீபத்திய மற்றும் துல்லியமான தகவலைப் பெற, எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் படிக்கவும்.