உங்கள் நண்பர்களுடனான சந்திப்பை எளிதாக ஒருங்கிணைப்பது முதல், குழு உரையாடலில் பகிர படங்களை உருவாக்குவது வரை, Meta AI எதற்கும் உதவி பெறுவதை எளிதாக்குகிறது, இவை அனைத்தும் WhatsApp இன் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையுடன் மேற்கொள்ள முடிகிறது.
இந்த அம்சங்கள் அனைத்துப் பயனர்களுக்கும் கிடைக்காமல் போகக்கூடும். இதன் கிடைக்கும்தன்மை குறித்து இங்கே மேலும் அறிக.
கணித கணக்குகளைத் தீர்ப்பது முதல், படத்தைத் திருத்துவது அல்லது குழு உரையாடலில் அனைவரும் ஒப்புக்கொள்ளும் உணவகத்தைக் கண்டுபிடிப்பது வரை, நீங்கள் வாசகம் அல்லது குரல் என எதை விரும்பினாலும், Meta AI மூலம் உதவி பெறுங்கள்.
உங்கள் குழு ஐகானாகப் பயன்படுத்த, உங்கள் வீடியோ அழைப்பிற்கான பின்னணியாக அமைக்க அல்லது உரையாடலில் அனுப்ப உங்கள் படங்களைத் திருத்த அல்லது புதிய AI-உருவாக்கிய படங்களை உருவாக்க Meta AI-ஐப் பயன்படுத்தி உங்கள் யோசனைகளுக்கு உயிர் கொடுங்கள்.
படிக்காத மெசேஜ்கள் குவியத் தொடங்கும்போது, Meta AI அவற்றை விரைவாகச் சுருக்கமாகக் கூற உதவும், எனவே நீங்கள் உடனடியாக உரையாடலில் கலந்து கொள்ளலாம். தனிப்பட்ட செயலாக்க தொழில்நுட்பம், Meta அல்லது WhatsApp உங்கள் மெசேஜ்களை படிக்காமலேயே அவற்றைச் செயலாக்க Meta AIக்கு உதவுகிறது.
WhatsApp மூலம் பெறும் AI அனுபவங்களை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. எப்போதும் போல, உங்களின் தனிப்பட்ட மெசேஜ்களும் அழைப்புகளும் எப்போதும் பேசுவோர் இடையே ரகசியம் காக்கப்படும். உங்கள் தனிப்பட்ட மெசேஜ்களைப் பயன்படுத்தும் அம்சங்களைப் பொறுத்தவரையில், Meta அல்லது WhatsApp உங்கள் மெசேஜ்களைப் படிக்காமலேயே பதிலை உருவாக்கிட Meta AI-ஐ தனிப்பட்ட செயலாக்க தொழில்நுட்பம் செயல்படுத்துகிறது.
Meta AI உதவத் தயாராக உள்ளது, அதைப் பயன்படுத்த பல வழிகள் உள்ளன - நீங்கள் உரையாடலிலேயே நேரடியாகக் கேட்டாலும் சரி அல்லது WhatsApp இல் உள்ள பிற AI அனுபவங்களை ஆராய்ந்தாலும் சரி.
கற்க, உருவாக்க மற்றும் ஆராய்ந்துப் பார்க்க Meta AI உடன் உரையாடுங்கள். உங்கள் அடுத்த விடுமுறை இலக்கிடத்தை ஆராய்வது முதல், சரியான வார்த்தைகளில் ஒரு மெசேஜை எழுதுவது வரை, Meta AI உதவிகரமாக இருக்கும்.
நீங்கள் கற்பனை செய்யக்கூடியதை உருவாக்க, செல்ஃபியைப் பதிவேற்ற, எந்தச் சூழ்நிலையிலும் உங்களைக் கற்பனை செய்து அதன் விளைவுகளை உங்கள் குழு உரையாடலில் பகிர்ந்து கொள்ள Meta AI-ஐப் பயன்படுத்துங்கள்.
நீங்கள் விரும்பிய தோற்றத்தில் உங்கள் படத்தைப் பெறுங்கள். புதிய பின்னணியைச் சேர்க்க, ஒரு பொருளை அகற்ற, அதை ஒரு விளக்கப்படமாக மாற்ற மற்றும் பலவற்றைச் செய்ய Meta AI-ஐக் கேளுங்கள்.
உங்களுக்குத் தெரியாத ஒரு தாவரத்தைப் படம் எடுத்தாலோ அல்லது கணிதக் கருத்தைப் புரிந்துகொள்ள உதவி தேவைப்பட்டாலோ, உங்கள் படங்களில் உள்ளவற்றைப் பற்றி அறிய Meta AI-ஐப் பயன்படுத்துங்கள்.