கடைசியாகத் திருத்தியது: ஜனவரி 04, 2021 (காப்பகப்படுத்திய பதிப்புகள்)
நீங்கள் ஐரோப்பிய பிராந்தியத்தில் வாழவில்லை என்றால் , சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை ஆகியவற்றின் கீழ் WhatsApp LLC உங்களுக்கு சேவைகளை வழங்குகிறது.
WhatsApp ஒப்பந்த சுருக்கம் குறித்தும், ஐரோப்பிய மின்னணுத் தகவல்தொடர்பு சட்டத்தின் படி தேவைப்படும் தகவல்கள் குறித்தும் அறிவதற்கு, இங்கே கிளிக் செய்யவும்.
எங்கள் செயலிகள், சேவைகள், அம்சங்கள், மென்பொருள் அல்லது இணையதளம் மூலம் எங்கள் சேவைகளை (கீழே வரையறுத்தபடி) வழங்க, எங்கள் சேவை விதிமுறைகளுக்கு ("விதிமுறைகள்") உங்கள் சம்மதத்தை நாங்கள் பெற வேண்டும்.
நீங்கள் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியில் உள்ள ஒரு நாட்டில் அல்லது பிராந்தியத்தில் (இதில் ஐரோப்பிய ஒன்றியம் அடங்கும்) மற்றும் வேறெந்த உட்படுத்தப்பட்ட நாட்டில் அல்லது பிராந்தியத்தில் (கூட்டாக " ஐரோப்பிய பிராந்தியம் " என குறிப்பிடப்படுகிறது) வசித்தால், WhatsApp Ireland Limited ("WhatsApp " "எங்கள்," "நாங்கள்," அல்லது "எங்களுக்கு") கீழே விவரிக்கப்பட்ட சேவைகளை ("சேவைகள்") உங்களுக்கு வழங்குகிறது. நீங்கள் ஐரோப்பிய பிராந்தியத்தில் அல்லாத வேறெந்த நாட்டில் அல்லது பிராந்தியத்தில் வசித்தால், இந்தச் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை ஆகியவற்றின் கீழ் WhatsApp LLC உங்களுக்குச் சேவைகளை வழங்குகிறது.
அவசரகாலச் சேவைகளுக்கு அணுகல் இல்லை: எங்கள் சேவைகளுக்கும், உங்கள் கைபேசி, நிலையான தொலைபேசி மற்றும் SMS சேவைகளுக்கும் இடையே முக்கிய வேறுபாடுகள் உள்ளன. எங்கள் சேவைகளானவை போலீஸ், தீயணைப்புத் துறைகள் அல்லது மருத்துவமனைகள் உள்ளிட்ட அவசரகாலச் சேவைகளுக்கோ அவசரகாலச் சேவை வழங்குநர்களுக்கோ அணுகல் வழங்குவதில்லை, அல்லது மற்றபடி பொதுப் பாதுகாப்புப் பதிலளிப்பு மையங்களுடன் இணைப்பு ஏற்படுத்திக் கொள்வதில்லை. ஒரு கைபேசி, நிலையான தொலைபேசி அல்லது பிற சேவை மூலம் உங்களுக்குத் தேவையான அவசரகாலச் சேவை வழங்குநர்களை தொடர்புகொள்ள முடிகிறது என்பதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
பதிவு. நீங்கள் எங்கள் சேவைகளுக்குப் பதிவுசெய்ய, துல்லியமான தகவல்களைப் பயன்படுத்த வேண்டும், உங்கள் தற்போதைய கைபேசி எண்ணை வழங்க வேண்டும், மேலும் நீங்கள் அதை மாற்றினால், எங்கள் செயலியில் உள்ள எண் மாற்ற அம்சத்தைப் பயன்படுத்தி உங்கள் கைபேசி எண்ணைப் புதுப்பிக்க வேண்டும். நீங்கள் எங்கள் சேவைகளுக்குப் பதிவுசெய்வதற்கு, குறியீடுகளுடனான டெக்ஸ்ட் மெசேஜ்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை (எங்களிடமிருந்து அல்லது எங்கள் மூன்றாம் தரப்பு வழங்குநர்களிடமிருந்து) பெற சம்மதிக்கிறீர்கள்.
முகவரிப் புத்தகம். நீங்கள் தொடர்புப் பதிவேற்ற அம்சத்தைப் பயன்படுத்தலாம், மற்றும் பொருந்தும் சட்டங்கள் அனுமதித்தால் எங்கள் சேவைகளின் பயனர்கள் மற்றும் உங்கள் பிற தொடர்புகள் உட்பட, உங்கள் மொபைல் முகவரிப் புத்தகத்தில் உள்ள கைபேசி எண்களை தொடர்ந்து எங்களுக்கு வழங்கலாம். எங்கள் தொடர்புப் பதிவேற்ற அம்சம் பற்றி இங்கு மேலும் அறிக.
வயது. நீங்கள் ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள ஒரு நாடு அல்லது பிரதேசத்தில் வசிப்பவர் என்றால், எங்கள் சேவைகளைப் பயன்படுத்த உங்களுக்கு குறைந்தபட்சம் 16 வயதாகி இருக்க வேண்டும் அல்லது பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் எங்கள் சேவைகளைப் பதிவுசெய்து பயன்படுத்துவதற்கு உங்கள் நாட்டில் அல்லது பிராந்தியத்தில் விதிக்கப்படும் இதைவிடக் கூடுதல் வயது ஆகியிருக்க இருக்க வேண்டும். நீங்கள் ஐரோப்பிய பிராந்தியத்தில் அல்லாத வேறொரு நாடு அல்லது பிரதேசத்தில் வசிப்பவர் என்றால், எங்கள் சேவைகளைப் பயன்படுத்த உங்களுக்கு குறைந்தபட்சம் 13 வயதாகி இருக்க வேண்டும் அல்லது எங்கள் சேவைகளைப் பதிவுசெய்து பயன்படுத்துவதற்கு உங்கள் நாட்டில் அல்லது பிராந்தியத்தில் விதிக்கப்படும் இதைவிடக் கூடுதல் வயது ஆகியிருக்க இருக்க வேண்டும். பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் எங்கள் சேவைகளைப் பயன்படுத்த குறைந்தபட்ச வயது அவசியம் என்பது மட்டுமல்லாமல், உங்கள் நாட்டில் அல்லது பிராந்தியத்தில் உள்ள எங்கள் விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கான அதிகாரத்துக்குரிய போதுமான வயது உங்களுக்கு இல்லாவிட்டால், நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு உங்கள் சார்பாக உங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் எங்கள் விதிமுறைகளை ஏற்க வேண்டும். உங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் இந்த விதிமுறைகளை உங்களுடன் சேர்ந்து படிக்குமாறு கேட்டுக்கொள்ளுங்கள்.
சாதனங்கள் மற்றும் மென்பொருள். எங்கள் சேவைகளைப் பயன்படுத்த நீங்கள் சில சாதனங்கள், மென்பொருள் மற்றும் தரவு இணைப்புகளை வழங்க வேண்டும், இல்லையெனில் அவற்றை நாங்கள் வழங்க மாட்டோம். நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்த, எங்கள் சேவைகளுக்கான புதுப்பிப்புகளை கைமுறையாக அல்லது தானியங்கி முறையாகப் பதிவிறக்கி நிறுவ ஒப்புதல் அளிக்கிறீர்கள். எங்கள் சேவைகளை உங்களுக்கு வழங்கத் தேவையான படி, அவ்வப்போது உங்களுக்கு அறிவிப்புகளை நாங்கள் அனுப்புவதற்கும் நீங்கள் ஒப்புதல் அளிக்கிறீர்கள்.
கட்டணங்கள் மற்றும் வரிகள். எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவது சார்ந்த அனைத்து கேரியர் தரவுத் திட்டங்கள், இணையத்திற்கான கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள் மற்றும் வரிகளும் உங்கள் பொறுப்பு.
WhatsApp உங்கள் தனியுரிமையில் அக்கறை கொண்டுள்ளது. WhatsApp-இன் தனியுரிமை கொள்கை எங்கள் தரவு (மெசேஜ் உட்பட) நடைமுறைகளை விவரிக்கிறது. இதில், நாங்கள் உங்களிடமிருந்து பெறும் மற்றும் சேகரிக்கும் தகவலின் வகைகள், இந்தத் தகவலை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம் மற்றும் பகிர்ந்து கொள்கிறோம் என்பது, உங்களைப் பற்றிய தகவல்களை செயலாக்குவது தொடர்பான உங்கள் உரிமைகள் ஆகியவை உட்படும்.
எங்கள் விதிமுறைகள் மற்றும் கொள்கைகள். எங்கள் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளின்படி நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் எங்கள் விதிமுறைகள் அல்லது கொள்கைகளை மீறினால், உங்கள் கணக்கை முடக்குவது அல்லது நிறுத்தி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கலாம், நாங்கள் அவ்வாறு செய்தால் எங்கள் அனுமதியின்றி மற்றொரு கணக்கை உருவாக்க மாட்டேன் என்று நீங்கள் சம்மதம் அளிக்கிறீர்கள். உங்கள் கணக்கை முடக்குவது அல்லது நிறுத்தி வைப்பது கீழேயுள்ள “நிறுத்துதல்” பகுதிக்கு ஏற்ப அமைந்திருக்கும்.
சட்டப்பூர்வமான மற்றும் ஏற்கத்தக்க பயன்பாடு. நீங்கள் எங்கள் சேவைகளை சட்டப்பூர்வமான, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் ஏற்கத்தக்க நோக்கங்களுக்காக மட்டுமே அணுக வேண்டும் மற்றும் பயன்படுத்த வேண்டும். எங்கள் சேவைகளை நீங்கள் கீழ்கண்ட வழிகளில் பயன்படுத்த (அல்லது பிறர் பயன்படுத்துவதற்கு உதவ) மாட்டீர்கள்: (அ) WhatsApp, எங்கள் பயனர்கள் அல்லது பிறரின் தனியுரிமை, விளம்பரம், அறிவுசார் சொத்து அல்லது பிற தனியுடமை உரிமைகள் உள்ளிட்ட உரிமைகளை மீறுதல், தவறாகப் பயன்படுத்துதல் அல்லது அத்துமீறுதல்; (ஆ) சட்டவிரோதமான, ஆபாசமான, கேவலப்படுத்துகிற, அச்சுறுத்துகிற, மிரட்டி அடக்குகிற, தொல்லை தருகிற, வெறுப்பூட்டுகிற, இன அல்லது இனக்குழு ரீதியாக புண்படுத்துகிற வழிகளில், அல்லது வன்முறையான குற்றங்களை ஊக்குவிப்பது, குழந்தைகளையோ பிறரையோ ஆபத்துக்கு ஆளாக்குவது அல்லது சுரண்டுவது அல்லது தீங்கான செயலை ஒருங்கிணைப்பது போன்ற சட்டவிரோதமான அல்லது மற்றபடி தகாத நடத்தையைத் தூண்டுதல் அல்லது ஊக்குவித்தல்; (இ) பொய்கள், போலி அடையாளங்கள் அல்லது திசைதிருப்புகிற வாசகங்களை வெளியிடுவதில் ஈடுபடுதல்; (ஈ) ஆள்மாறாட்டம்; (உ) மொத்தமான மெசேஜ்கள், தானியங்கி மெசேஜ்கள், ஆட்டோ-டயலிங் உள்ளிட்ட ஏனையவை போன்ற சட்டவிரோதமான அல்லது அனுமதியற்ற தகவல்தொடர்புகளை அனுப்புவதில் ஈடுபடுதல்; மற்றும் (ஊ) எங்களால் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தால் தவிர மற்றபடி, ஏதேனும் தனிப்பட்டவர்-சாராத வகையில் எங்கள் சேவைகளைப் பயன்படுத்துதல்.
WhatsApp அல்லது எங்கள் பயனர்களுக்கு பாதிப்பு. நீங்கள் எங்கள் சேவைகளை அனுமதியற்ற அல்லது அங்கீகாரமற்ற முறைகளிலோ, அல்லது எங்களை, எங்கள் சேவைகளை, சிஸ்டங்களை, எங்கள் பயனர்களை அல்லது பிறரை சுமைக்கு ஆளாக்கும், பாழாக்கும் அல்லது பாதிக்கும் வழிகளிலோ நேரடியாக, மறைமுகமாக, தானியங்கி அல்லது பிற வழிமுறைகள் மூலமாக அணுகுவது, பயன்படுத்துவது, நகலெடுப்பது, தகவமைப்பது, மாற்றியமைப்பது, அவற்றின் அடிப்படையில் துணை ஆக்கங்களை உருவாக்குவது, விநியோகிப்பது, உரிமம் அளிப்பது, துணை உரிமம் அளிப்பது, கைமாற்றுவது, காட்சிப்படுத்துவது, மேற்கொள்வது அல்லது மற்றபடி சுரண்டலுக்கு ஆளாக்குவது (அல்லது இவற்றைச் செய்ய பிறருக்கு உதவியளிப்பது) கூடாது, இதில் பின்வருபவற்றை நேரடியாகவோ தானியங்கி வழிமுறைகளிலோ செய்வதும் கூடாது: (அ) எங்கள் சேவைகளை ‘கழற்றிப் பார்ப்பது’, மாற்றுவது, மாற்றியமைப்பது, டீகம்பைல் செய்வது, அவற்றிலிருந்து துணை ஆக்கங்களை உருவாக்குவது அல்லது நிரலைப் பிரித்தெடுப்பது; (ஆ) எங்கள் சேவைகள் வழியாகவோ அவற்றுக்கோ அவற்றிலோ வைரஸ்களை அல்லது இன்னபிற கொடிய கணினி நிரல்களை அனுப்புவது, சேமிப்பது அல்லது கடத்துவது; (இ) எங்கள் சேவைகள் அல்லது சிஸ்டங்களுக்கு அங்கீகாரமற்ற அணுகலைப் பெறுவது அல்லது பெற முயற்சிப்பது; (ஈ) எங்கள் சேவைகளின் பாதுகாப்பு, பந்தோபஸ்து, இரகசியத்தன்மை, நம்பகத்தன்மை, கிடைப்பு அல்லது இயக்கத்தில் தலையிடுதல் அல்லது தடங்கல் ஏற்படுத்துதல்; (உ) அங்கீகாரமற்ற அல்லது தானியங்கியான வழிமுறைகள் மூலம் எங்கள் சேவைகளுக்கான கணக்குகளை உருவாக்குதல்; (ஊ) எங்கள் பயனர்களின் அல்லது அவர்களைப் பற்றிய தகவல்களை எவ்வொரு அனுமதியற்ற அல்லது அங்கீகாரமற்ற முறையிலும் சேகரிப்பது; (எ) எங்கள் சேவைகளை அல்லது எங்களிடமோ எங்கள் சேவைகளிலிருந்தோ பெறப்படும் தரவுகளை அங்கீகாரமற்ற முறையில் விற்பது, மறுவிற்பனை செய்வது, வாடகைக்கு விடுவது அல்லது அவற்றுக்குக் கட்டணம் விதிப்பது; (ஏ) நாங்கள் எங்கள் சேவைகள் வழியே வெளிப்படையாக வழங்கியுள்ள கருவிகள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட முறையில் தவிர மற்றபடி, ஒரே சமயத்தில் பல சாதனங்களால் பயன்படுத்த முடியும் ஒரு நெட்வொர்க்கில் எங்கள் சேவைகளை விநியோகிப்பது அல்லது கிடைக்கச் செய்வது; (ஐ) நடைமுறையளவில் எங்கள் சேவைகளைப் போலவே செயல்படும் மென்பொருள் அல்லது API-களை உருவாக்கி ஓர் அங்கீகாரமற்ற முறையில் அவற்றை மூன்றாம் தரப்பினர்களின் பயன்பாட்டுக்காக வழங்குவது; அல்லது (ஒ) மோசடியான அல்லது அடிப்படையற்ற புகார்களை அல்லது முறையீடுகளைச் சமர்ப்பிப்பது போன்று, புகாரளிக்கும் வழிகளைத் தவறாகப் பயன்படுத்துவது.
உங்கள் கணக்கைப் பாதுகாத்தல். உங்கள் சாதனம் மற்றும் உங்கள் WhatsApp கணக்கை பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைத்திருப்பது உங்கள் பொறுப்பு, மேலும் உங்கள் கணக்கு அல்லது எங்கள் சேவைகளின் அங்கீகாரமற்ற பயன்பாடு அல்லது பாதுகாப்பு மீறல் குறித்து உடனடியாக எங்களிடம் தெரிவிக்க வேண்டும்.
மூன்றாம் தரப்பு இணையதளங்கள், செயலிகள், உள்ளடக்கம், பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகள், Facebook நிறுவன தயாரிப்புகள் ஆகியவற்றை அணுக, பயன்படுத்த அல்லது தொடர்புகொள்ள எங்கள் சேவைகள் அனுமதிக்கலாம். எடுத்துக்காட்டாக, எங்கள் சேவைகளுடன் ஒருங்கிணைந்த மூன்றாம் தரப்பு தரவுக் காப்புப்பிரதி சேவைகளை (iCloud அல்லது Google Drive போன்றவை) பயன்படுத்தவோ அல்லது உங்கள் WhatsApp தொடர்புகளுக்குத் தகவல்களை அனுப்ப உதவும் மூன்றாம் தரப்பினரின் இணையதளத்தின் ‘பகிர்’ பொத்தானைப் பயன்படுத்தவோ நீங்கள் விரும்பலாம். இந்த விதிமுறைகள் மற்றும் எங்கள் தனியுரிமை கொள்கை எங்கள் சேவைகளின் பயன்பாட்டிற்கு மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் கொள்க. நீங்கள் மூன்றாம் தரப்புத் தயாரிப்புகள் அல்லது சேவைகளையோ பிற Facebook நிறுவன தயாரிப்புகளையோ பயன்படுத்தும்போது, அவற்றின் சொந்த விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளானவை அந்தத் தயாரிப்புகள் அல்லது சேவைகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும்.
உங்கள் உரிமைகள். உங்கள் WhatsApp கணக்கிற்காக அல்லது எங்கள் சேவைகள் மூலம் நீங்கள் சமர்ப்பிக்கும் தகவல்களுக்கு WhatsApp உரிமை கோரவில்லை. உங்கள் WhatsApp கணக்கிற்காக அல்லது எங்கள் சேவைகள் மூலம் நீங்கள் சமர்ப்பிக்கும் அத்தகைய தகவல்களுக்குத் தேவையான உரிமைகள் மற்றும் உரிமங்களை வழங்குவதற்கான உரிமை உங்களுக்கு இருக்க வேண்டும்.
WhatsApp உரிமைகள். எங்கள் சேவைகளுடன் தொடர்புடைய அனைத்துப் பதிப்புரிமைகள், வணிகக் குறிகள், களங்கள், இலச்சினைகள், வணிகம்சார் உடை, வர்த்தக ரகசியங்கள், காப்புரிமைகள் மற்றும் பிற அறிவுசார் சொத்துரிமைகளும் எங்களுக்கே சொந்தம். எங்கள் பதிப்புரிமை, வணிகக் குறிகள் (அல்லது இதே போன்ற குறிகள்), களங்கள், இலச்சினைகள், வணிகம்சார் உடை, வர்த்தக ரகசியங்கள், காப்புரிமைகள் அல்லது பிற அறிவுசார் சொத்துரிமைகளை எங்களுடைய வெளிப்படையான அனுமதி இன்றி மற்றும் எங்கள் பிராண்ட் வழிகாட்டுதல்களின் பிரகாரம் அன்றி நீங்கள் பயன்படுத்தக்கூடாது. எங்கள் துணை நிறுவனங்களின் வணிகக் குறிகளை அவர்களின் அனுமதியுடன் மட்டுமே பயன்படுத்தலாம், இதில் ஏதேனும் வெளியிடப்பட்ட பிராண்ட் வழிகாட்டுதல்களில் அங்கீகரிக்கப்பட்டதற்கு ஏற்ற அனுமதியும் உட்படும்.
WhatsApp-க்கான உங்கள் உரிமம். எங்கள் சேவைகளை இயக்குவதற்கும் வழங்குவதற்கும், நீங்கள் WhatsApp-க்கு உலகளாவிய, பிரத்தியேகமற்ற, உரிமைத்தொகை-இல்லாத, துணை உரிமம் அளிக்கக்கூடிய மற்றும் மாற்றத்தக்க உரிமத்தை பயன்படுத்த, வெளியிட, விநியோகிக்க, துணை ஆக்கங்களை உருவாக்க, காட்சிப்படுத்த (உள்ளடக்கம் உட்பட) எங்கள் சேவைகளில் அல்லது அதன் மூலம் நீங்கள் பதிவேற்றம், சமர்ப்பித்தல், சேமித்தல், அனுப்புதல் அல்லது பெறுதலுக்கான அனுமதியை வழங்குகிறீர்கள். இந்த உரிமத்தில் நீங்கள் வழங்கும் உரிமைகள் எங்கள் சேவைகளை இயக்குவதற்கும் வழங்குவதற்குமான நோக்கத்திற்காக மட்டுமே உள்ளன (உங்கள் சுயவிவரப் படம் மற்றும் நிலை மெசேஜைக் காண்பிக்க, உங்கள் மெசேஜ்களை அனுப்ப, மற்றும் வழங்கப்படாத மெசேஜ்களை நாங்கள் அவற்றை வழங்க முயற்சிக்கும்போது, எங்கள் சேவையகங்களில் 30 நாட்கள் வரை சேமிக்க எங்களுக்கு அனுமதிப்பது போன்றவையாகும்).
WhatsApp உங்களுக்கு வழங்கும் உரிமம். எங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டும் அதன் பிரகாரமும், எங்கள் சேவைகளைப் பயன்படுத்த ஒரு வரையறுக்கப்பட்ட, திரும்பப்பெறக்கூடிய, பிரத்தியேகமற்ற, துணை உரிமம் பெறமுடியாத மற்றும் மாற்ற முடியாத உரிமத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். இந்த உரிமம் எங்கள் விதிமுறைகளால் அனுமதிக்கப்பட்ட முறையில் எங்கள் சேவைகளைப் பயன்படுத்த உங்களுக்கு உதவும் ஒரே நோக்கத்திற்காக உள்ளது. உங்களுக்கு வெளிப்படையாக வழங்கப்பட்ட உரிமங்கள் மற்றும் உரிமைகளைத் தவிர, வேறு எந்த உரிமங்களும் உரிமைகளும் உங்களுக்குச் சூசகமாகவோ மற்றபடியோ வழங்கப்படுவதில்லை.
மூன்றாம் தரப்புப் பதிப்புரிமை, வணிகக்குறி அல்லது பிற அறிவுசார் சொத்து மீறல்கள் சார்ந்த கோரிக்கைகள் குறித்து புகாரளிக்க, தயவுசெய்து எங்கள் அறிவுசார் சொத்து கொள்கையை பார்க்கவும். மற்றவர்களின் அறிவுசார் சொத்துரிமைகளை நீங்கள் தெளிவாக, தீவிரமாக அல்லது மீண்டும் மீண்டும் மீறினால் அல்லது சட்டக் காரணங்களுக்காக செய்யும் தேவை இருந்தால், நாங்கள் உங்கள் கணக்கை முடக்குவது அல்லது நிறுத்தி வைப்பது உட்பட உங்கள் கணக்கு குறித்து நடவடிக்கை எடுக்கலாம். உங்கள் கணக்கை முடக்குவது அல்லது நிறுத்தி வைப்பது கீழேயுள்ள “நிறுத்துதல்” பகுதிக்கு ஏற்ப அமைந்திருக்கும்.
நீங்கள் எங்கள் சேவைகளை உங்கள் சொந்த பொறுப்பின் பேரிலும், பின்வரும் பொறுப்புத் துறப்புகளுக்கு உட்பட்டும் பயன்படுத்துகிறீர்கள். விற்பனை சார்ந்த உத்தரவாதங்கள், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கான தகுதி, தலைப்பு, அத்துமீறல் இன்மை, மற்றும் கணினி வைரஸிலிருந்து விடுபடுதல் அல்லது பிற தீங்கான நிரல் ஆகியவை மட்டுமின்றி அவையும் உள்ளிட்ட எவ்வித வெளிப்படையான அல்லது மறைமுகமான உத்தரவாதங்களும் இன்றி நாங்கள் எங்கள் சேவைகளை “உள்ளது உள்ளபடி” என்ற அடிப்படையில் வழங்குகிறோம். எங்களால் வழங்கப்பட்ட எந்தவொரு தகவலும் துல்லியமானது, முழுமையானது அல்லது பயனுள்ளதாக இருக்கும், எங்கள் சேவைகள் செயல்படும், பிழையின்றி இருக்கும், பாதுகாப்பாக இருக்கும் அல்லது எங்கள் சேவைகளானது இடையூறுகள், தாமதங்கள் அல்லது குறைபாடுகள் இல்லாமல் செயல்படும் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கவில்லை. எங்கள் பயனர்கள் எங்கள் சேவைகளை எவ்வாறு அல்லது எப்போது பயன்படுத்துகிறார்கள் என்பதையோ அல்லது எங்கள் சேவைகள் வழங்கும் அம்சங்கள், சேவைகள் மற்றும் இடைத்தளங்களையோ நாங்கள் கட்டுப்படுத்துவதில்லை மற்றும் அவற்றுக்குப் பொறுப்பேற்பதில்லை. எங்கள் பயனர்கள் அல்லது பிற மூன்றாம் தரப்பினரின் செயல்கள் அல்லது தகவல்களை (உள்ளடக்கம் உட்பட) கட்டுப்படுத்த நாங்கள் பொறுப்பல்ல மற்றும் கடமைப்பட்டிருக்க மாட்டோம். எந்த மூன்றாம் தரப்பினர்களுக்கு எதிராகவும் நீங்கள் வைக்கும் எவ்வொரு கோரிக்கை சார்ந்த, அதிலிருந்து எழுகின்ற அல்லது எவ்விதத்திலும் அதனுடன் தொடர்புகொண்ட, அறியப்பட்ட அல்லது அறியப்படாத எவ்வொரு கோரிக்கை, புகார், நடவடிக்கைக்கான காரணம், சர்ச்சை, பிணக்கு அல்லது பாதிப்புகள் (மொத்தமாக “கோரிக்கைகள்”) ஆகியவற்றிலிருந்தும் எங்களையும், எங்கள் துணை நிறுவனங்களையும், சார்பு நிறுவனங்களையும், எண்களின் மற்றும் அவர்களின் இயக்குனர்களையும், அதிகாரிகளையும், ஊழியர்களையும், கூட்டாளர்களையும், முகவர்களையும் (மொத்தமாக “WhatsApp தரப்பினர்கள்”) விடுவிக்கிறீர்கள். எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதன் விளைவாகப் பொருந்தக்கூடிய உங்கள் நாட்டின் அல்லது வசிக்கும் பிராந்தியத்தின் சட்டங்கள் அனுமதிக்காவிட்டால், WhatsApp தரப்பினர்கள் தொடர்பான உங்கள் உரிமைகள் மேற்படி பொறுப்புத் துறப்பு மூலம் மாற்றம் அடையாது.
WhatsApp பின்வரும் அளவிற்கு மட்டுமே பொறுப்புடமை ஏற்கும்:
உயிர், உடல் அல்லது உடல்நலம் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கான சட்டரீதியான விதிகளின்படி WhatsApp வரம்பில்லாமல் பொறுப்பாகும்; நோக்கம் விஷயத்தில்; மொத்த அலட்சியம் விஷயத்தில்; மற்றும் தயாரிப்பு பொறுப்பு உத்தரவுக்கு இணங்குவதற்கு ஏற்ப.
உங்களுக்கு சேவைகளை வழங்குவதில் WhatsApp தொழில்முறை ரீதியான முயற்சியை மேற்கொள்ளும். நாங்கள் தொழில்முறை ரீதியான முயற்சியை மேற்கொண்டிருக்கும் பட்சத்தில், இந்த விதிமுறைகளை மீறுவதால் அல்லது எங்கள் செயல்களால் ஏற்படாத இழப்புகளுக்கு; இந்த விதிமுறைகளில் நுழையும் நேரத்தில் உங்களுக்கும் எங்களுக்கும் நியாயமான முறையில் எதிர்பார்க்க முடியாத இழப்புகளுக்கு; மற்றும் எங்கள் நியாயமான கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளுக்கு WhatsApp பொறுப்பு ஏற்காது.
நீங்கள் நுகர்வோராக இருந்து, வழக்கமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாட்டில் வசிப்பவராக இருந்தால், மேற்கொள்ளப்படும் அனைத்து கிளைம்கள், செயல் விளைவு அல்லது இந்த விதிமுறைகளிலிருந்தோ ("கிளைம்") அல்லது இது தொடர்பாகவோ ஏற்படும் முறையிடல் ஆகியவற்றுக்கு உறுப்பு நாட்டின் சட்டங்கள் பொருந்தும், மேலும் அந்த நாட்டில் உள்ள கிளைமைச் செயல்படுத்துவதற்கான சட்டப்பூர்வ அதிகாரத்தைக் கொண்ட தகுந்த நீதிமன்றத்தில் உங்கள் கிளைமிற்கான தீர்வைப் பெறலாம். மேற்கூறியவை தவிர மற்ற எல்லா நிலைமைகளிலும், கோரிக்கைக்கான தீர்வு அயர்லாந்து குடியரசின் தகுந்த நீதிமன்றத்தில் வழங்கப்பட வேண்டும் என்பதையும், சட்ட விதிகளில் எந்த முரண்பாடு இருந்தாலும் இந்த விதிமுறைகளும் எந்தவொரு கோரிக்கையும் அயர்லாந்து சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படும் என்பதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள்.
எங்கள் சேவைகளின் கிடைப்பு. நாங்கள் எப்போதும் எங்கள் சேவைகளை மேம்படுத்த முயற்சிக்கிறோம். அதாவது, எங்கள் சேவைகள், அம்சங்கள், செயல்பாடுகள் மற்றும் சில சாதனங்கள் மற்றும் தளங்களின் ஆதரவை நாங்கள் விரிவாக்கலாம், சேர்க்கலாம் அல்லது அகற்றலாம். பராமரிப்பு, பழுதுபார்ப்பு, மேம்பாடுகள் அல்லது நெட்வொர்க் அல்லது உபகரணங்கள் தோல்விகள் உட்பட எங்கள் சேவைகளில் தடங்கல் ஏற்படலாம். 30 நாட்களான அறிவிப்பு காலத்திற்குப் பிறகு எந்த நேரத்திலும், சில அம்சங்கள் மற்றும் சில சாதனங்கள் மற்றும் தளங்களுக்கான ஆதரவு உட்பட எங்கள் சேவைகளில் சில அல்லது அனைத்தையும் நாங்கள் நிறுத்தலாம், துஷ்பிரயோகத்தைத் தடுப்பது, சட்டப்பூர்வமாக பதிலளிப்பது போன்ற அவசர சூழ்நிலைகளில் அத்தகைய அறிவிப்புக்கான தேவையின்றி இதைச் செய்வோம். எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள், இயற்கையின் நிகழ்வுகள் மற்றும் பிற எதிர்பாராத சூழ்நிலைக்குரிய நிகழ்வுகள் போன்றவை எங்கள் சேவைகளைப் பாதிக்கலாம்.
நிறுத்துதல். நீங்கள் ஒரு WhatsApp பயனராக இருப்பீர்கள் என நாங்கள் நம்பினாலும், உங்கள் கணக்கை நீக்குவதன் மூலம் எந்த காரணத்திற்காகவும் WhatsApp உடனான உங்கள் உறவை எந்த நேரத்திலும் நிறுத்தலாம். அதை எப்படிச் செய்வது என்பதற்கான வழிமுறைகளுக்கு, எங்கள் உதவி மையத்தில் உள்ள Android, iPhone அல்லது KaiOS கட்டுரைகளைப் பார்க்கவும்.
தக்க காரணத்துக்காக நிறுத்துவதற்கான எங்கள் உரிமையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு தரப்பினர் சட்டங்களை மற்றும் மூன்றாம் தரப்பு உரிமைகளை மீறினால் அல்லது இந்த விதிமுறைகளை மீறினால், மற்றும் ஏற்கப்பட்ட நிறுத்தல் தேதி வரை அல்லது அறிவிப்பு காலம் முடிவடையும் வரை தனிப்பட்ட வழக்கின் அனைத்து சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு மற்றும் இரு தரப்பினரின் நலன்களையும் எடைபோட்ட பிறகு, நிறுத்தல் தரப்பினர் ஒப்பந்த உறவைத் தொடருவார் என நியாயமாக எதிர்பார்க்க முடியாது என்றால், தக்க காரணம் உள்ளது எனக் கருதப்படும். ஒரு மீறல் குறித்து மற்ற தரப்பினர் அறிந்த பிறகு ஒரு நியாயமான காலத்திற்குள் மட்டுமே தக்க காரணத்திற்காக நிறுத்துவது சாத்தியமாகும்.
முக்கியமான காரணம் இந்த விதிமுறைகளின் ஒரு கடமையை மீறுவதாக இருந்தால், வழங்கப்பட்ட தீர்வு காலம் பலனளிக்காமல் காலாவதியான பிறகு அல்லது பலனளிக்காத எச்சரிக்கைக்குப் பிறகு மட்டுமே நிறுத்தல் அனுமதிக்கப்படுகிறது. எனினும், மீறும் தரப்பினர் தீவிரமாகவும் இறுதியாகவும் தமது கடமைகளை நிறைவேற்ற மறுத்தால் அல்லது இரு தரப்பினர்களின் நலன்களையும் எடைபோட்ட பிறகு, சிறப்பு சூழ்நிலைகள் உடனடியாக நிறுத்தப்படுவதை நியாயப்படுத்தினால் இது பொருந்தாது.
இந்த "நிறுத்துதல்" பகுதிக்கு ஏற்ப, மோசடி உட்பட சந்தேகத்திற்கிடமான அல்லது சட்டவிரோத நடத்தைக்காகவோ அல்லது நீங்கள் மீறுவதாக எங்கள் விதிமுறைகள் அல்லது எங்களுக்கு, எங்கள் பயனர்களுக்கு அல்லது பிறருக்கு தீங்கு, ஆபத்து அல்லது சாத்தியமான சட்ட வெளிப்பாட்டை உருவாக்குவதாக நாங்கள் நம்பினாலோ, எப்போது வேண்டுமானாலும் எங்கள் சேவைகளுக்கான உங்கள் அணுகலை அல்லது பயன்பாட்டை நாங்கள் மாற்றியமைக்கலாம், நிறுத்தி வைக்கலாம் அல்லது நிறுத்தலாம். உங்கள் கணக்கு பதிவுசெய்த பிறகு செயலில் இல்லாவிட்டாலும் அல்லது நீண்ட காலத்திற்கு செயலற்ற நிலையில் இருந்தாலும் நாங்கள் அதை முடக்கலாம் அல்லது நீக்கலாம். உங்கள் கணக்கை நீங்கள் அல்லது நாங்கள் நீக்கினால் அல்லது முடக்கினால், உங்களுக்கும் எங்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் என்ற வகையில் இந்த விதிமுறைகள் முடிவுக்கு வரும், ஆனால் WhatsApp உடனான உங்கள் உறவு எவ்விதத்தில் நிறுத்தப்பட்டாலும் பின்வரும் துணை அம்சங்கள் தொடர்ந்து நீடிக்கும்: “உரிமங்கள்,” “பொறுப்புத் துறப்புகள் மற்றும் விடுவிடுப்பு,” “பொறுப்புடமையின் வரம்பு,” “சர்ச்சைத் தீர்வு,” “எங்கள் சேவைகள் கிடைத்தல் மற்றும் நிறுத்தப்படுதல்,” மற்றும் “மற்றவை”. உங்கள் கணக்கு தவறுதலாக நிறுத்தப்பட்டுள்ளது அல்லது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் நினைத்தால், தயவுசெய்து எங்களை support@support.whatsapp.com-இல் தொடர்பு கொள்ளவும்.
வேறு சில மொழிகளில் எங்கள் விதிமுறைகளை அணுக, உங்கள் WhatsApp அமர்வுக்கான மொழி அமைப்பை மாற்றவும். நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியில் எங்கள் விதிமுறைகள் இல்லை எனில், ஆங்கிலப் பதிப்பு இயல்பாகக் காட்டப்படும்.
எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவது குறித்த கூடுதல் தகவல்களை வழங்கும் பின்வரும் ஆவணங்களை படித்துப் பார்க்கவும்:
WhatsApp தனியுரிமை கொள்கை
WhatsApp அறிவுசார் சொத்து கொள்கை
WhatsApp பிராண்ட் வழிகாட்டல்கள்