உள்ளடக்கத்திற்குச் செல்லும்
  • முகப்பு
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்புதல்இணைந்து இருங்கள்சமுகத்தைக் கட்டமைத்தல்உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்திடுங்கள்பிசினஸுக்கான WhatsApp
  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
பதிவிறக்குக
சேவை விதிமுறை2023 © WhatsApp LLC
WhatsApp முதன்மைப் பக்கம்WhatsApp முதன்மைப் பக்கம்
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்புதல்

      முழு மறையாக்கம் மற்றும் அதிக தனியுரிமைக் கட்டுப்பாடுகள்.

    • இணைந்து இருங்கள்

      உலகளவில் உங்கள் வாடிக்கையாளர்களை சென்றடைந்திடுங்கள்.

    • சமுகத்தைக் கட்டமைத்தல்

      குழு கலந்துரையாடல்கள் எளிமையானது.

    • உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்திடுங்கள்

      ஸ்டிக்கர்கள், குரல், GIFகள் மற்றும் பலவற்றின் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள்.

    • WhatsApp business

      உங்கள் வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களைச் சென்றடைந்திடுங்கள்.

  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
WhatsApp Webதரவிறக்கும்

கடைசியாகத் திருத்தியது: ஜனவரி 04, 2021 (காப்பகப்படுத்திய பதிப்புகள்)

WhatsApp தனியுரிமை கொள்கை

நீங்கள் ஐரோப்பிய பிராந்தியத்தில் வசிப்பவர் என்றால், WhatsApp Ireland Limited இந்த சேவை விதிமுறைகள், மற்றும் தனியுரிமைக் கொள்கை ஆகியவற்றின் கீழ் உங்களுக்கு சேவைகளை வழங்குகிறது.

WhatsApp சட்டத் தகவல்

நீங்கள் ஐரோப்பிய பிராந்தியத்தில் வசிப்பவர் என்றால், WhatsApp LLC ("WhatsApp," "எங்கள்," "நாங்கள்" அல்லது "எங்களுக்கு") இந்த சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை ஆகியவற்றின் கீழ் எங்கள் சேவைகளை வழங்குகிறது.

எங்கள் தனியுரிமைக் கொள்கையானது ("தனியுரிமைக் கொள்கை") எங்கள் சேவைகளை வழங்க நாங்கள் செயலாக்கும் தகவல்கள் உட்பட எங்கள் தரவு நடைமுறைகளை விளக்க உதவுகிறது.

எடுத்துக்காட்டாக, எங்கள் தனியுரிமைக் கொள்கையானது, நாங்கள் சேகரிக்கும் தகவல்கள் மற்றும் இது உங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி பேசுகிறது. உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளையும் இது விளக்குகிறது - எடுத்துக்காட்டாக, அனுப்பப்படும் மெசேஜ்களை நாங்கள் சேமிக்காத வகையில் எங்கள் சேவைகளை உருவாக்குவது, எங்கள் சேவைகள் மூலம் நீங்கள் யாருடன் தொடர்பு கொள்கிறீர்கள் என்பதன் கட்டுப்பாட்டை உங்களிடமே கொடுப்பது போன்றவை.

நாங்கள் Facebook நிறுவனங்களில் ஒன்றாவோம். இந்த நிறுவனங்களின் குழுமத்தில் நாங்கள் தகவல்களைப் பகிரும் வழிகளைப் பற்றி இந்த தனியுரிமைக் கொள்கையில் மேலும் அறியலாம்.

குறிப்பிடப்படாதவரை, இந்தத் தனியுரிமைக் கொள்கை எங்கள் எல்லா சேவைகளுக்கும் பொருந்தும்.

WhatsApp-இன் சேவை விதிமுறைகளை ("விதிமுறைகள்") படிக்கவும், இது நீங்கள் பயன்படுத்தும் மற்றும் நாங்கள் அளிக்கும் சேவைகளைப் பற்றிய விதிமுறைகளை விவரிக்கிறது.

மேலே செல்லவும்

நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்

எங்கள் சேவைகளை நீங்கள் நிறுவும் போது, அணுகும்போது அல்லது பயன்படுத்தும் போது உட்பட, எங்கள் சேவைகளை இயக்க, வழங்க, மேம்படுத்த, புரிந்துகொள்ள, தனிப்பயனாக்க, ஆதரிக்க மற்றும் சந்தைப்படுத்த WhatsApp சில தகவல்களைப் பெற வேண்டும் அல்லது சேகரிக்க வேண்டும்.

நாங்கள் பெறும் மற்றும் சேகரிக்கும் தகவலின் வகைகள் எங்கள் சேவைகளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. சேவைகளை வழங்க எங்களுக்கு சில தகவல்கள் தேவை, இது இல்லாமல் எங்கள் சேவைகளை உங்களுக்கு வழங்க முடியாது. எடுத்துக்காட்டாக, எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு கணக்கை உருவாக்க உங்கள் கைபேசி எண்ணை வழங்க வேண்டும்.

எங்கள் சேவைகளில் விருப்ப அம்சங்கள் உள்ளன, அவற்றை நீங்கள் பயன்படுத்தினால், அவற்றை வழங்க நாங்கள் கூடுதல் தகவல்களைச் சேகரிக்க வேண்டும். அத்தகைய சேகரிப்புகள் பொருந்துவதற்கேற்ப உங்களுக்குத் தெரிவிக்கப்படும். ஒரு அம்சத்தைப் பயன்படுத்தத் தேவையான தகவல்களை வழங்க வேண்டாம் என நீங்கள் தேர்வுசெய்தால், அந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியாது. எடுத்துக்காட்டாக, சாதனத்திலிருந்து உங்கள் இருப்பிடத் தரவைச் சேகரிக்க எங்களை அனுமதிக்காவிட்டால், உங்கள் இருப்பிடத்தை உங்கள் தொடர்புகளுடன் நீங்கள் பகிர்ந்துகொள்ள முடியாது. Android மற்றும் iOS சாதனங்களில் உங்கள் அமைப்புகள் மெனு மூலம் அனுமதிகளை நிர்வகிக்கலாம்.

நீங்கள் வழங்கும் தகவல்கள்

  • உங்கள் கணக்குத் தகவல். நீங்கள் WhatsApp கணக்கை உருவாக்க உங்கள் கைபேசி எண் மற்றும் அடிப்படைத் தகவல்களை (நீங்கள் விரும்பிய சுயவிவரப் பெயர் உட்பட) வழங்க வேண்டும். நீங்கள் இந்தத் தகவலை எங்களுக்கு வழங்கவில்லை என்றால், எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு கணக்கை உருவாக்க முடியாது. சுயவிவரப் படம் மற்றும் "விவரம்" சார்ந்த தகவல் போன்ற பிறவற்றையும் உங்கள் கணக்கில் நீங்கள் சேர்க்கலாம்.

  • உங்கள் மெசேஜ்கள். நாங்கள் வழக்கமாக எங்கள் சேவைகளை உங்களுக்கு வழங்கும்போது உங்கள் மெசேஜ்களைச் சேமித்துவைக்க மாட்டோம். அதற்குப் பதிலாக, உங்கள் மெசேஜ்கள் உங்கள் சாதனத்தில் சேமிக்கப்படுகின்றன, எங்கள் சேவையகங்களில் சேமிக்கப்படுவதில்லை. உங்கள் மெசேஜ்கள் வழங்கப்பட்டதும், அவை எங்கள் சேவையகங்களிலிருந்து நீக்கப்படும். உங்கள் மெசேஜ்களை வழங்கும்போது அவற்றை நாங்கள் சேமிக்கக்கூடிய சூழ்நிலைகளை பின்வரும் சந்தர்ப்பங்கள் விவரிக்கின்றன:

    • வழங்கப்படாத மெசேஜ்கள். ஒரு மெசேஜை உடனே வழங்க முடியாவிட்டால் (எடுத்துக்காட்டாக, பெறுநர் ஆஃப்லைனில் இருந்தால்), அனுப்ப முயற்சிக்கும்போது 30 நாட்கள் வரை எங்கள் சேவையகங்களில் மறையாக்க வடிவில் வைத்திருப்போம். ஒரு மெசேஜ் 30 நாட்களுக்குப் பிறகும் வழங்கப்படாவிட்டால், நாங்கள் அதை நீக்கிவிடுவோம்.

    • மீடியா முன்னனுப்புதல். ஒரு பயனர் ஒரு மெசேஜில் மீடியாவை முன்னனுப்பும்போது, கூடுதல் முன்னனுப்புகளை மிகவும் திறமையாக வழங்க உதவுவதற்காக அந்த மீடியாவைத் தற்காலிகமாக மறையாக்கப்பட்ட வடிவத்தில் எங்கள் சேவையகங்களில் சேமிக்கிறோம்.


    நாங்கள் எங்கள் சேவைகளுக்கு முழு மறையாக்கத்தை வழங்குகிறோம். முழு மறையாக்கம் என்பது, உங்கள் மெசேஜ்களை எங்களாலும் மூன்றாம் தரப்பினராலும் படிக்க முடியாதவாறு மறையாக்கம் செய்யப்பட்டுள்ளது எனப் பொருள். முழு மறையாக்கம் மற்றும் வணிகங்கள் உங்களுடன் WhatsApp-இல் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பன பற்றி மேலும் அறியவும்.

  • உங்கள் இணைப்புகள். நீங்கள் தொடர்புப் பதிவேற்ற அம்சத்தைப் பயன்படுத்தலாம், மற்றும் பொருந்தும் சட்டங்கள் அனுமதித்தால் எங்கள் சேவைகளின் பயனர்கள் மற்றும் உங்கள் பிற தொடர்புகள் உட்பட, உங்கள் முகவரிப் புத்தகத்தில் உள்ள கைபேசி எண்களை தொடர்ந்து எங்களுக்கு வழங்கலாம். உங்கள் தொடர்புகளில் யாரேனும் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தவில்லை எனில், அந்தத் தொடர்புகளை எங்களால் அடையாளம் காண முடியாது என உறுதிப்படுத்தும் வகையில் இந்த தகவலை உங்களுக்காக நிர்வகிப்போம். எங்கள் தொடர்புப் பதிவேற்ற அம்சம் பற்றி இங்கு மேலும் அறிக. நீங்கள் குழுக்களை உருவாக்கலாம், அவற்றில் சேரலாம் மற்றும் பிராட்காஸ்ட் பட்டியல்களில் அல்லது குழுக்களில் சேர்க்கப்படலாம், இதுபோன்ற குழுக்கள் மற்றும் பட்டியல்கள் உங்கள் கணக்குத் தகவலுடன் தொடர்புபடுத்தப்படும். உங்கள் குழுக்களுக்கு ஒரு பெயர் வழங்குங்கள். நீங்கள் ஒரு குழு சுயவிவரப்படம் அல்லது விவரத்தை வழங்க முடியும்.

  • ஸ்டேட்டஸ் தகவல். நீங்கள் உங்கள் கணக்கில் ஒரு ஸ்டேட்டஸை சேர்ப்பதாக இருந்தால், அதை எங்களுக்கு வழங்கலாம். Android, iPhone அல்லது KaiOS-இல் ஸ்டேட்டஸை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிக.

  • பரிவர்த்தனைகள் மற்றும் பேமெண்ட்கள் தரவு. நீங்கள் எங்கள் பேமெண்ட் சேவைகளைப் பயன்படுத்தினால், அல்லது கொள்முதல் அல்லது பிற நிதிப் பரிவர்த்தனைகளுக்காக எங்கள் சேவைகளைப் பயன்படுத்தினால், பேமெண்ட் கணக்கு மற்றும் பரிவர்த்தனைத் தகவல்கள் உட்பட உங்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை நாங்கள் செயலாக்குகிறோம். பேமெண்ட் கணக்கு மற்றும் பரிவர்த்தனைத் தகவல்களில் பரிவர்த்தனையை நிறைவேற்றத் தேவையான தகவல்கள் அடங்கும் (எடுத்துக்காட்டாக, உங்கள் பேமெண்ட் முறை, அனுப்பப்படும் விவரங்கள் மற்றும் பரிவர்த்தனைத் தொகை) உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தில் கிடைக்கும் எங்கள் பேமெண்ட் சேவைகளைப் பயன்படுத்தினால், எங்கள் தனியுரிமை நடைமுறைகள் பொருந்தக்கூடிய பேமெண்ட் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளன.

  • வாடிக்கையாளர் உதவி மற்றும் பிற தொடர்புகள். வாடிக்கையாளர் உதவிக்காக அல்லது வேறு நோக்கத்துக்காக நீங்கள் எங்களைத் தொடர்புகொள்ளும் போது, எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவது தொடர்பான தகவல்களை நீங்கள் வழங்கலாம், அதில் உங்கள் மெசேஜ்களின் நகல்கள், பயனுள்ளவை என நீங்கள் கருதும் வேறு ஏதேனும் தகவல்கள், உங்களைத் தொடர்பு கொள்வதற்கான வழிமுறை (எ.கா. மின்னஞ்சல் முகவரி) போன்றவை அடங்கும். எடுத்துக்காட்டாக, எங்கள் செயலியின் செயல்திறன் அல்லது பிற சிக்கல்கள் தொடர்பான தகவல்களைக் கொண்ட மின்னஞ்சலை நீங்கள் எங்களுக்கு அனுப்பலாம்.


தானாகச் சேகரிக்கப்பட்ட தகவல்

  • பயன்பாடு மற்றும் பதிவு தகவல். சேவை, கண்டறிதல் மற்றும் செயல்திறன் தொடர்பான தகவல்கள் போன்ற, எங்கள் சேவைகளில் உங்கள் செயல்பாடு குறித்த தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம். இதில் உங்கள் செயல்பாடு பற்றிய தகவல்களும் (எங்கள் சேவைகளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள், உங்கள் சேவைகள் அமைப்புகள், எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி மற்றவர்களுடன் நீங்கள் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் (நீங்கள் ஒரு வணிகத்துடன் தொடர்பு கொள்ளும்போது உட்பட), மற்றும் உங்கள் செயல்பாடுகள் மற்றும் தொடர்புகளின் நேரம், எண்ணிக்கை மற்றும் காலம் உட்பட), பதிவு கோப்புகள் மற்றும் கண்டறிதல், செயலிழப்பு, வலைத்தளம் மற்றும் செயல்திறன் பதிவுகளும் அறிக்கைகளும் அடங்கும். எங்கள் சேவையைப் பயன்படுத்த நீங்கள் பதிவுசெய்த நேரம் பற்றிய தகவல்களும் இதில் அடங்கும்; மேலும் எங்கள் மெசேஜ், அழைப்பு, ஸ்டேட்டஸ், குழுக்கள் (குழு பெயர், குழு படம், குழு விளக்கம் உட்பட), பேமெண்ட் அல்லது வணிக அம்சங்கள் போன்ற நீங்கள் பயன்படுத்தும் அம்சங்கள்; சுயவிவரப்படம், “விவரம்” சார்ந்த தகவல், நீங்கள் ஆன்லைனில் இருக்கிறீர்களா என்பது; நீங்கள் கடைசியாக எங்கள் சேவைகளைப் பயன்படுத்திய நேரம் (உங்கள் "கடைசியாகப் பார்த்தது"); உங்கள் "விவரம்" சார்ந்த தகவலை நீங்கள் கடைசியாக புதுப்பித்த நேரம் ஆகியவையும் அடங்கும்.

  • சாதனம் மற்றும் இணைப்பு தகவல். எங்கள் சேவைகளை நீங்கள் நிறுவும்போது, அணுகும்போது அல்லது பயன்படுத்தும்போது சாதனம் மற்றும் இணைப்பு சார்ந்த தகவல்களை நாங்கள் சேகரிப்போம். வன்பொருள் மாதிரி, இயக்க முறைமை தகவல், பேட்டரி நிலை, சிக்னல் அளவு, செயலியின் பதிப்பு, உலாவி தகவல், மொபைல் நெட்வொர்க், தொலைபேசி எண், மொபைல் ஆபரேட்டர் அல்லது ISP, மொழி மற்றும் நேர மண்டலம், IP முகவரி, சாதன செயல்பாட்டு தகவல், மற்றும் அடையாளங்காட்டிகள் (ஒரே சாதனம் அல்லது கணக்குடன் தொடர்புடைய Facebook நிறுவன தயாரிப்புகளுக்குரிய தனித்துவமான அடையாளங்காட்டிகள் உட்பட) ஆகியவை அடங்கும்.

  • இருப்பிடத் தகவல். இருப்பிடம் தொடர்பான அம்சங்களைப் பயன்படுத்த நீங்கள் தேர்வுசெய்யும்போது உங்கள் சாதனத்திலிருந்து துல்லியமான இருப்பிடத் தகவலை நாங்கள் சேகரித்துப் பயன்படுத்துகிறோம், எடுத்துக்காட்டாக உங்கள் தொடர்புகளுடன் உங்கள் இருப்பிடத்தைப் பகிர்ந்துகொள்ள முடிவு செய்யும்போது அல்லது அருகிலுள்ள இருப்பிடங்களையோ மற்றவர்கள் உங்களுடன் பகிர்ந்து கொண்ட இடங்களையோ பார்க்கும்போது. இருப்பிடப் பகிர்வு போன்ற சில இருப்பிடம்-தொடர்பான தகவல் பற்றிய அமைப்புகளை உங்கள் சாதன அமைப்புகளில் அல்லது செயலியில் உள்ள அமைப்புகளில் காணலாம். எங்கள் இருப்பிடம்-தொடர்பான அம்சங்களை நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும், உங்கள் பொதுவான இருப்பிடத்தை (எ.கா. நகரம் மற்றும் நாடு) யூகித்து அறிவதற்கு IP முகவரிகள் மற்றும் தொலைபேசி எண் பகுதி குறியீடுகள் போன்ற பிற தகவல்களை பயன்படுத்துகிறோம். கண்டறிதல் மற்றும் சரிசெய்தல் நோக்கங்களுக்காகவும் உங்கள் இருப்பிடத் தகவலை பயன்படுத்துகிறோம்.

  • குக்கீகள். இணையம்-சார்ந்த எங்கள் சேவைகளை வழங்குவது, உங்கள் அனுபவங்களை மேம்படுத்துதல், எங்கள் சேவைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது மற்றும் அவற்றைத் தனிப்பயனாக்குவது போன்ற எங்கள் சேவைகளை இயக்க மற்றும் வழங்க குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, இணையம், டெஸ்க்டாப் மற்றும் பிற இணையம்-சார்ந்த சேவைகளுக்கு எங்கள் சேவைகளை வழங்க குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். எங்கள் உதவி மையக் கட்டுரைகளில் எவை மிகவும் பிரபலமானவை என்பதைப் புரிந்துகொள்ளவும் எங்கள் சேவைகள் தொடர்பான தேவையான உள்ளடக்கத்தைக் காண்பிக்கவும் நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்தலாம். கூடுதலாக, உங்கள் மொழி விருப்பங்கள் போன்ற உங்கள் விருப்பங்களை நினைவில் வைத்துக் கொள்ள, பாதுகாப்பான அனுபவத்தை வழங்க, மற்றபடி உங்களுக்காக எங்கள் சேவைகளைத் தனிப்பயனாக்க நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்தலாம். எங்கள் சேவைகளை உங்களுக்கு வழங்க நாங்கள் குக்கீகளை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது பற்றி மேலும் அறிக.

மேலே செல்லவும்

மூன்றாம் தரப்புத் தகவல்

  • உங்களைப் பற்றி மற்றவர்கள் வழங்கும் தகவல்கள். நாங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை பிற பயனர்களிடமிருந்து பெறுகிறோம். எடுத்துக்காட்டாக, உங்களுக்குத் தெரிந்த பிற பயனர்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, அவர்கள் உங்கள் கைபேசி எண், பெயர் மற்றும் பிற தகவல்களை (அவர்கள் மொபைல் முகவரி புத்தகத்திலிருந்து வரும் தகவல்கள் போன்றவை) வழங்கலாம், இதேபோல் நீங்களும் அவர்களின் இத்தகு தகவல்களை வழங்கலாம். அவர்கள் உங்களுக்கு மெசேஜ்களை அனுப்பலாம், நீங்கள் சேர்ந்த குழுக்களுக்கு மெசேஜ்களை அனுப்பலாம் அல்லது உங்களை அழைக்கலாம். இந்தப் பயனர்கள் ஒவ்வொருவரும் உங்களின் தரவை எங்களுக்கு வழங்குவதற்கு முன்னர், அதைச் சேகரிக்க, பயன்படுத்த மற்றும் பகிர்ந்துகொள்ள அவர்களிடம் சட்டரீதியான உரிமைகள் இருக்க வேண்டும்.


    பொதுவாக எந்தவொரு பயனரும் உங்கள் அரட்டைகள் அல்லது மெசேஜ்களின் திரைப்பிடிப்பை எடுக்கலாம் அல்லது அவர்களுடனான உங்கள் அழைப்புகளைப் பதிவு செய்யலாம், பிறகு அவற்றை WhatsApp-க்கு அல்லது வேறொருவருக்கு அனுப்பலாம் அல்லது இன்னொரு தளத்தில் பதிவிடலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

  • பயனர் புகார்கள். நீங்கள் பிற பயனர்கள் குறித்து புகாரளிக்க முடியும் என்பது போலவே, பிற பயனர்கள் அல்லது மூன்றாம் தரப்பினரும் எங்கள் சேவைகளில் அவர்களுடனான அல்லது மற்றவர்களுடனான உங்கள் உரையாடல்கள் மற்றும் உங்கள் மெசேஜ்கள் குறித்து எங்களிடம் புகாரளிக்க விரும்பலாம்; எடுத்துக்காட்டாக, எங்கள் விதிமுறைகள் அல்லது கொள்கை மீறல்கள் குறித்து புகாரளிக்கலாம். ஒரு புகார் தயாரிக்கப்படும் போது, புகாரளிக்கும் பயனர் மற்றும் புகாரளிக்கப்பட்ட பயனர் என இருவரின் தகவல்களையும் நாங்கள் சேகரிப்போம். ஒரு பயனருக்கான புகார் தயாரிக்கப்படும் போது என்ன நடக்கிறது என்பது பற்றி மேலும் அறிய, மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து அம்சங்களைப் பார்க்கவும்.

  • WhatsApp-இல் உள்ள வணிகங்கள். எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி நீங்கள் தொடர்பு கொள்ளும் வணிகங்கள் உங்களுடனான தொடர்புகளைப் பற்றிய தகவல்களை எங்களுக்கு வழங்கக்கூடும். இந்த வணிகங்கள் ஒவ்வொன்றும் எங்களுக்கு எந்தவொரு தகவலையும் வழங்கும்போது பொருந்தக்கூடிய சட்டத்தின்படி செயல்பட வேண்டும்.


    WhatsApp-இல் ஒரு வணிகம் மூலம் மெசேஜ் அனுப்பும்போது, நீங்கள் அவ்வாறு பகிர்ந்துகொள்ளும் உள்ளடக்கம் அந்த வணிகத்தில் உள்ள பலருக்கும் தெரியலாம் என்பதை நினைவில் கொள்ளவும். மேலும், சில வணிகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடனான தகவல்தொடர்புகளை நிர்வகிக்க உதவியாக மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுடன் (இதில் Facebook உட்படலாம்) இணைந்து செயலாற்றலாம். எடுத்துக்காட்டாக, அத்தகு மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர் ஒரு வணிகத்தின் தகவல்தொடர்புகளை அனுப்ப, சேமிக்க, படிக்க, நிர்வகிக்க அல்லது மற்றபடி வணிக நோக்கத்துக்காக செயலாக்க அவற்றுக்கான அணுகலை அவர்களுக்கு அந்த வணிகம் வழங்கலாம். ஒரு வணிகம் எப்படி உங்கள் தகவல்களை மூன்றாம் தரப்பினருடனோ Facebook உடனோ பகிர்ந்து கொள்ளலாம் என்பது உட்பட உங்கள் தகவல்களை அது எவ்வாறு செயலாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள, அந்த வணிகத்தின் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் படிக்க வேண்டும் அல்லது அந்த வணிகத்தை நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டும்.

  • மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள். எங்கள் சேவைகளை இயக்க, வழங்க, மேம்படுத்த, புரிந்துகொள்ள, தனிப்பயனாக்க, ஆதரவு வழங்க மற்றும் சந்தைப்படுத்த எங்களுக்கு உதவ மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் மற்றும் பிற Facebook நிறுவனங்கள் உடன் நாங்கள் பணியாற்றுகிறோம். எடுத்துக்காட்டாக, எங்கள் செயலிகளை விநியோகிக்க நாங்கள் அவர்களுடன் இணைந்து செயல்படுகிறோம்; எங்கள் தொழில்நுட்ப மற்றும் திடநிலையான உள்கட்டமைப்பு, சேவை வழங்கல் மற்றும் பிற அமைப்புகள்; பொறியியல் ஆதரவு, சைபர் பாதுகாப்பு ஆதரவு மற்றும் செயல்பாட்டு ஆதரவை வழங்குதல்; இருப்பிடம், வரைபடம் மற்றும் இடங்களின் தகவல்களை வழங்குதல்; பேமெண்ட் செயல்முறை; எங்கள் சேவைகளை மக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவுதல்; எங்கள் சேவைகளை சந்தைப்படுத்துதல்; எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி உங்களை வணிகங்களுடன் இணைக்க உதவுகிறது; எங்களுக்காக ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளை நடத்துதல்; பாதுகாப்பு, பந்தோபஸ்து மற்றும் நம்பகத்தன்மையை உறுதிசெய்தல்; மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கு உதவுதல். இந்த நிறுவனங்கள் சில சூழ்நிலைகளில் உங்களைப் பற்றிய தகவல்களை எங்களுக்கு வழங்கக்கூடும்; எடுத்துக்காட்டாக, சேவை சார்ந்த சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்ய உதவுவதற்கு ஆப் ஸ்டோர்ஸ் எங்களுக்கு அறிக்கைகளை வழங்கலாம்.


    கீழேயுள்ள “பிற Facebook நிறுவனங்களுடன் நாங்கள் எவ்வாறு செயல்படுகிறோம்” என்ற பகுதியில், எப்படி பிற Facebook நிறுவனங்களிடம் WhatsApp தகவல்களைச் சேகரிக்கிறது மற்றும் பகிர்ந்து கொள்கிறது என்பது பற்றி மேலும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

  • மூன்றாம் தரப்பு சேவைகள். மூன்றாம் தரப்பு சேவைகள் மற்றும் Facebook நிறுவன தயாரிப்புகள் தொடர்பாக எங்கள் சேவைகளைப் பயன்படுத்த நாங்கள் உங்களை அனுமதிக்கிறோம். இதுபோன்ற மூன்றாம் தரப்பு சேவைகள் அல்லது Facebook நிறுவன தயாரிப்புகளுடன் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தினால், உங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் அவர்களிடமிருந்து பெறலாம்; எடுத்துக்காட்டாக, எங்கள் சேவைகளில் உங்கள் WhatsApp தொடர்புகள், குழுக்கள் அல்லது ஒளிபரப்பு பட்டியல்களுடன் ஒரு செய்திக் கட்டுரையைப் பகிர்ந்து கொள்ள ஒரு செய்திச் சேவையில் WhatsApp பகிர் பொத்தானைப் பயன்படுத்தினால், அல்லது மொபைல் கேரியர் அல்லது சாதன வழங்குநரின் விளம்பரத்தின் மூலம் எங்கள் சேவைகளை அணுக நீங்கள் தேர்வுசெய்தால். நீங்கள் மூன்றாம் தரப்பு சேவைகளை அல்லது Facebook நிறுவன தயாரிப்புகளைப் பயன்படுத்தும்போது, ​​அவற்றின் சொந்த விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளே அந்தச் சேவைகள் மற்றும் தயாரிப்புகளின் உங்கள் பயன்பாட்டை நிர்வகிக்கும் என்பதை நினைவில் கொள்க.

மேலே செல்லவும்

நாங்கள் தகவலை எவ்வாறு பயன்படுத்துகிறோம்

எங்கள் சேவைகளை இயக்க, வழங்க, மேம்படுத்த, புரிந்துகொள்ள, தனிப்பயனாக்க, ஆதரிக்க, வழங்க மற்றும் சந்தைப்படுத்த எங்களிடம் உள்ள தகவல்களை (நீங்கள் செய்யும் தேர்வுகள் மற்றும் பொருந்தக்கூடிய சட்டத்திற்கு உட்பட்டு) பயன்படுத்துகிறோம். இதோ பயன்படுத்தும் முறை:

  • எங்கள் சேவைகள். வாடிக்கையாளர் உதவியை வழங்குதல், கொள்முதல்கள் அல்லது பரிவர்த்தனைகளை நிறைவேற்றுதல், எங்கள் சேவைகளை மேம்படுத்துதல், சரிசெய்தல் மற்றும் தனிப்பயனாக்குதல் ஆகியவை உட்பட, எங்கள் சேவைகளை இயக்கவும் வழங்கவும்; மற்றும் நீங்கள் பயன்படுத்தக்கூடிய Facebook நிறுவன தயாரிப்புகளுடன் எங்கள் சேவைகளை இணைக்க நாங்கள் எங்களிடம் உள்ள தகவல்களைப் பயன்படுத்துகிறோம். எங்கள் சேவைகளை மக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள, எங்கள் சேவைகளை மதிப்பீடு செய்து மேம்படுத்த; புதிய சேவைகள் மற்றும் அம்சங்களை ஆராய, மேம்படுத்துதல் மற்றும் சோதித்தலை மேற்கொள்ள; மற்றும் சரிசெய்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நாங்கள் எங்களிடம் உள்ள தகவல்களைப் பயன்படுத்துகிறோம். எங்களைத் தொடர்புகொள்ளும் போது உங்களுக்குப் பதிலளிப்பதற்காகவும் உங்கள் தகவல்களைப் பயன்படுத்துவோம்.

  • பாதுகாப்பு, பந்தோபஸ்து மற்றும் நம்பகத்தன்மை. பாதுகாப்பு, பந்தோபஸ்து மற்றும் நம்பகத்தன்மை எங்கள் சேவைகளின் பிரிக்கமுடியாத ஓர் அங்கம். கணக்குகள் மற்றும் செயல்பாட்டை சரிபார்த்தல்; தீங்கு விளைவிக்கும் நடத்தைக்கு எதிராகப் போராடுதல், மோசமான அனுபவங்கள் மற்றும் ஸ்பேமிலிருந்து பயனர்களைப் பாதுகாத்தல்; எங்கள் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளின் சந்தேகத்திற்கிடமான செயல்பாடு அல்லது மீறல்களை விசாரிப்பதன் மூலமும், எங்கள் சேவைகள் சட்டப்பூர்வமாக பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்வது போன்ற எங்கள் சேவைகளில் பாதுகாப்பு, பந்தோபஸ்து மற்றும் நம்பகத்தன்மையை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கு நாங்கள் எங்களிடம் உள்ள தகவல்களைப் பயன்படுத்துகிறோம். மேலும் தகவலுக்கு, கீழே உள்ள "சட்டம், எங்கள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு" பகுதியைப் பார்க்கவும்.

  • எங்கள் சேவைகள் மற்றும் Facebook நிறுவனங்கள் பற்றிய தொடர்புகள். எங்கள் சேவைகளைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கவும், எங்கள் விதிமுறைகள், கொள்கைகள் மற்றும் பிற முக்கியமான புதுப்பிப்புகளைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கவும் நாங்கள் எங்களிடம் உள்ள தகவல்களைப் பயன்படுத்துகிறோம். எங்கள் சேவைகள் மற்றும் Facebook நிறுவனங்களுக்கான சந்தையிடலை நாங்கள் உங்களுக்கு வழங்கலாம்.

  • மூன்றாம் தரப்பு பேனர் விளம்பரங்கள் இல்லை. எங்கள் சேவைகளில் மூன்றாம் தரப்பு பேனர் விளம்பரங்களை நாங்கள் இன்னும் அனுமதிக்கவில்லை. அவற்றை அறிமுகப்படுத்த எங்களுக்கு விருப்பமில்லை, ஆனால் நாங்கள் எப்போதாவது அதைச் செய்தால், இந்த தனியுரிமைக் கொள்கையை நாங்கள் புதுப்பிப்போம்.

  • வணிக தொடர்புகள். WhatsApp இல் உள்ள வணிகங்களுக்கான கேட்டலாக்குகள் போன்ற எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி உங்களுக்கும் மூன்றாம் தரப்பினருக்கும் ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு பேசுவதற்கும் நாங்கள் உதவுகிறோம், அங்கு நீங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காண உலவலாம் மற்றும் ஆர்டர்களை வைக்கலாம். வணிகங்கள் உங்களுக்கு பரிவர்த்தனை, நியமனம் மற்றும் அனுப்பும்முறை, தயாரிப்பு மற்றும் சேவை புதுப்பிப்புகள்; மற்றும் சந்தைப்படுத்தல் போன்றவற்றின் அறிவிப்புகளை அனுப்பலாம் எடுத்துக்காட்டாக, வரவிருக்கும் பயணத்திற்கான விமான நிலை தகவல், நீங்கள் வாங்கியவற்றிற்கான ரசீது அல்லது டெலிவரி செய்யப்படும் போது அறிவிப்பு ஆகியவற்றைப் பெறலாம். ஒரு வணிகத்திலிருந்து நீங்கள் பெறும் மெசேஜ்களில் உங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு சலுகையும் அடங்கியிருக்கலாம். உங்களுக்கு நிறைய ஸ்பாம் வருவதை நாங்கள் விரும்பவில்லை; உங்கள் எல்லா மெசேஜ்களையும் போலவே, இந்த தகவல்தொடர்புகளையும் நீங்கள் நிர்வகிக்கலாம், மேலும் நீங்கள் செய்யும் தேர்வுகளை நாங்கள் மதிப்போம்.

மேலே செல்லவும்

நீங்களும் நாங்களும் பகிர்ந்து கொள்ளும் தகவல்

எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது மற்றும் தொடர்பு கொள்ளும்போது உங்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறீர்கள், மேலும் எங்கள் சேவைகளை இயக்க, வழங்க, மேம்படுத்த, புரிந்துகொள்ள, தனிப்பயனாக்க, ஆதரிக்க, வழங்க மற்றும் சந்தைப்படுத்த எங்களுக்கு உதவுவதற்கு உங்கள் தகவல்களை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.

  • நீங்கள் தொடர்புகொள்ள விரும்புவோருக்கு உங்கள் தகவல்களை அனுப்புங்கள். எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி அதன் மூலம் நீங்கள் தொடர்பு கொள்ளும்போது உங்கள் தகவல்களை (மெசேஜ்கள் உட்பட) பகிர்ந்து கொள்கிறீர்கள்.

  • உங்கள் கணக்குடன் தொடர்புடைய தகவல். உங்கள் மொபைல் எண், சுயவிவரப் பெயர் மற்றும் புகைப்படம், "விவரம்" சார்ந்த தகவல், கடைசியாகப் பார்த்த தகவல் மற்றும் மெசேஜ் ரசீதுகள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் எவருக்கும் கிடைக்கின்றன, இருப்பினும் நீங்கள் யாரைத் தொடர்பு கொள்கிறீர்கள், வணிகங்கள் உட்பட பிற பயனர்களுக்கு கிடைக்கக்கூடிய சில தகவல்களை நிர்வகிக்க உங்கள் சேவை அமைப்புகளை நீங்கள் கட்டமைக்க முடியும்.

  • உங்கள் தொடர்புகள் மற்றும் பிறர். நீங்கள் தொடர்பு கொள்ளும் வணிகங்கள் உள்ளிட்ட பயனர்கள் உங்கள் தகவல்களை (உங்கள் ஃபோன் எண் அல்லது மெசேஜ்கள் உட்பட) சேமித்துவைக்கலாம் அல்லது எங்கள் சேவைகளிலும் வெளியேயும் மற்றவர்களுடன் மீண்டும் பகிரலாம். எங்கள் சேவைகளில் நீங்கள் தொடர்புகொள்பவர்களையும் நீங்கள் பகிரும் சில தகவல்களையும் நிர்வகிக்க, உங்கள் சேவைகளின் அமைப்புகளையும் எங்கள் சேவைகளில் உள்ள "தடுப்பு" அம்சத்தையும் பயன்படுத்தலாம்.

  • WhatsApp-இல் உள்ள வணிகங்கள். எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவது தொடர்பான அளவீடுகளை அவர்களுக்கு வழங்குவது போன்ற வணிகங்களுக்கு குறிப்பிட்ட சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்.

  • மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள். எங்கள் சேவைகளை இயக்க, வழங்க, மேம்படுத்த, புரிந்துகொள்ள, தனிப்பயனாக்க, ஆதரவு வழங்க மற்றும் சந்தைப்படுத்த எங்களுக்கு உதவ மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் மற்றும் பிற Facebook நிறுவனங்கள் உடன் நாங்கள் பணியாற்றுகிறோம். தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, டெலிவரி மற்றும் பிற அமைப்புகளை வழங்குவது, எங்கள் சேவைகளைச் சந்தைப்படுத்துவது; எங்களுக்காகக் கருத்தாய்வுகளையும் ஆராய்ச்சியையும் நடத்துவது; பயனர்கள் மற்றும் பிறரின் பாதுகாப்பு, பந்தோபஸ்து மற்றும் நம்பகத்தன்மையை பாதுகாப்பது; மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கு உதவுவது போன்ற எங்கள் சேவைகளை ஆதரிக்க இந்த நிறுவனங்களுடன் நாங்கள் பணியாற்றுகிறோம். இந்தத் திறனில் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் மற்றும் பிற Facebook நிறுவனங்கள் உடன் நாங்கள் தகவல்களைப் பகிரும்போது, எங்கள் அறிவுறுத்தல்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க, எங்கள் சார்பாக உங்கள் தகவல்களை அவர்கள் பயன்படுத்துமாறு நாங்கள் கோருகிறோம்.

  • மூன்றாம் தரப்பு சேவைகள். எங்கள் சேவைகளுடன் ஒருங்கிணைந்த மூன்றாம் தரப்புச் சேவைகள் அல்லது பிற Facebook நிறுவனத் தயாரிப்புகளை நீங்கள் அல்லது மற்றவர்கள் பயன்படுத்தும்போது, அந்த மூன்றாம் தரப்புச் சேவைகள் நீங்கள் அல்லது மற்றவர்கள் அவற்றுடன் எவற்றைப் பகிர்கிறீர்கள் என்பது பற்றிய தகவல்களைப் பெறலாம். எடுத்துக்காட்டாக, எங்கள் சேவைகளுடன் (iCloud அல்லது Google Drive போன்றவை) ஒருங்கிணைந்த தரவுக் காப்புப் பிரதிச் சேவையைப் பயன்படுத்தினால், அவர்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை, அதாவது உங்கள் WhatsApp மெசேஜ்கள் போன்றவற்றைப் பெறுவார்கள். மூன்றாம் தரப்புச் சேவை அல்லது எங்கள் சேவைகளின் மூலம் இணைக்கப்பட்ட மற்றொரு Facebook நிறுவனத் தயாரிப்புடன் நீங்கள் தொடர்பு கொண்டால், மூன்றாம் தரப்புத் தளத்திலிருந்து உள்ளடக்கத்தை செயலியில் உள்ள பிளேயரில் இயக்கும்போது, ​​உங்கள் IP முகவரி மற்றும் நீங்கள் ஒரு WhatsApp பயனர் என்ற உண்மை போன்ற உங்களைப் பற்றிய தகவல்கள், அத்தகைய மூன்றாம் தரப்பு அல்லது Facebook நிறுவனத் தயாரிப்புக்கு வழங்கப்படலாம். நீங்கள் மூன்றாம் தரப்பு சேவைகளை அல்லது பிற Facebook நிறுவன தயாரிப்புகளைப் பயன்படுத்தும்போது, ​​அவற்றின் சொந்த விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளே அந்தச் சேவைகள் மற்றும் தயாரிப்புகளின் உங்கள் பயன்பாட்டை நிர்வகிக்கும் என்பதை நினைவில் கொள்க.

மேலே செல்லவும்

பிற Facebook நிறுவனங்களுடன் நாங்கள் எவ்வாறு செயல்படுகிறோம்

Facebook நிறுவனங்களின் ஒரு பகுதியாக, WhatsApp மற்ற Facebook நிறுவனங்களிடம் தகவல்களைப் பெறுகிறது, மேலும் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது (இங்கே பார்க்கவும்). அவர்களிடமிருந்து நாங்கள் பெறும் தகவல்களை நாங்கள் பயன்படுத்தலாம், மேலும் Facebook நிறுவனத் தயாரிப்புகள் உட்பட எங்கள் சேவைகளையும் அவற்றின் சலுகைகளையும் இயக்க, வழங்க, மேம்படுத்த, புரிந்துகொள்ள, தனிப்பயனாக்க, ஆதரிக்க மற்றும் சந்தைப்படுத்த உதவுவதற்கு, அவர்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை அவர்கள் பயன்படுத்தலாம். இதில் அடங்குபவை:

  • உள்கட்டமைப்பு மற்றும் விநியோக அமைப்புகளை மேம்படுத்த உதவுதல்;
  • எங்கள் சேவைகள் அல்லது அவர்களின் சேவைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது;
  • Facebook நிறுவனத் தயாரிப்புகள் எல்லாவற்றிலும் பாதுகாப்பு, பந்தோபஸ்து மற்றும் நம்பகத்தன்மையை ஊக்குவித்தல், எ.கா., அமைப்புகளைப் பாதுகாத்தல் மற்றும் ஸ்பாம், அச்சுறுத்தல்கள், துஷ்பிரயோகம் அல்லதஅத்துமீறல் நடவடிக்கைகளைத் தடுத்தல்;
  • உங்களுக்கான பரிந்துரைகளை வழங்குதல் (எடுத்துக்காட்டாக, நண்பர்கள் அல்லது குழு இணைப்புகள் அல்லது சுவாரஸ்யமான உள்ளடக்கம்), அம்சங்கள் மற்றும் உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்குதல், கொள்முதல் மற்றும் பரிவர்த்தனைகளை முடிக்க உங்களுக்கு உதவுதல் மற்றும் தொடர்புடைய சலுகைகள் மற்றும் விளம்பரங்களைக் காண்பித்தல் போன்ற அவர்களின் சேவைகளையும் அவற்றைப் பயன்படுத்தி உங்கள் அனுபவங்களையும் மேம்படுத்துதல். Facebook நிறுவன தயாரிப்புகள்; மற்றும்
  • உங்கள் WhatsApp அனுபவங்களை பிற Facebook நிறுவன தயாரிப்புகளுடன் இணைக்க உதவும் ஒருங்கிணைப்புகளை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, WhatsApp செயலியில் உள்ள விஷயங்களுக்கு பணம் செலுத்த உங்கள் Facebook Pay கணக்கை இணைக்க உங்களை அனுமதிக்கிறது அல்லது உங்கள் WhatsApp கணக்கை இணைப்பதன் மூலம் Portal போன்ற பிற Facebook நிறுவன தயாரிப்புகளில் உங்கள் நண்பர்களுடன் அரட்டையடிக்க உதவுகிறது.

அவர்களின் தனியுரிமைக் கொள்கைகளைப் படிப்பதன் மூலம் மற்ற Facebook நிறுவனங்கள் மற்றும் அவர்களின் தனியுரிமை நடைமுறைகளைப் பற்றி மேலும் அறிக.

மேலே செல்லவும்

நியமித்தல், கட்டுப்பாடு மாற்றம் மற்றும் இடமாற்றம்

எங்கள் அனைத்து அல்லது சில சொத்துகளின் இணைப்பு, கையகப்படுத்தல், மறுசீரமைப்பு, திவால்நிலை அல்லது விற்பனையில் நாங்கள் ஈடுபட்டிருந்தால், பொருந்தக்கூடிய தரவு பாதுகாப்பு சட்டங்களுக்கு ஏற்ப பரிவர்த்தனை தொடர்பாக உங்கள் தகவல்களை வாரிசு நிறுவனங்கள் அல்லது புதிய உரிமையாளர்களுடன் பகிர்ந்து கொள்வோம்.

மேலே செல்லவும்

உங்கள் தகவல்களை நிர்வகித்தல் மற்றும் சேமித்துவைத்தல்

எங்கள் செயலியில் உள்ள கணக்கு தகவல் கோரல் அம்சத்தைப் பயன்படுத்தி உங்கள் தகவலை அணுகலாம் அல்லது மாற்றலாம் (அமைப்புகள் >கணக்கு என்பதன் கீழ் கிடைக்கும்). iPhone பயனர்களுக்கு, உங்கள் தகவல்களை அணுகுதல், நிர்வகித்தல், மற்றும் நீக்குதல் எப்படி என்பதை எங்கள் Android உதவி மைய கட்டுரைகள் மூலம் அறியலாம். Android பயனர்களுக்கு, அணுகல், நிர்வகித்தல், மற்றும் நீக்குதல் உங்கள் தகவல்களை எங்கள் Android உதவி மைய கட்டுரைகள் மூலம் நீக்குவது எப்படி என்பதை அறியலாம்.

தனியுரிமைக் கொள்கையில் காணப்படும் நோக்கத்துக்காக, எங்கள் சேவைகளை வழங்குவது உட்பட, சட்டப்பூர்வமான கடமைகளுக்கு இணங்குவது, எங்கள் விதிமுறைகளை மீறுவது மற்றும் தடுப்பது அல்லது எங்கள் உரிமைகள், சொத்து மற்றும் பயனர்களைப் பாதுகாத்தல் போன்ற பிற நியாயமான நோக்கங்களுக்காகத் தகவல்களைச் சேமிக்கிறோம். சேமிப்பக காலங்கள் தனி வழக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அவை தகவலின் தன்மை, காரணம், தொடர்புடைய சட்ட அல்லது செயல்பாட்டு தக்கவைப்பு தேவைகள் மற்றும் சட்டபூர்வமான கடமைகள் போன்ற காரணிகளைப் பொறுத்தது.

உங்கள் தகவல்களை மேலும் நிர்வகிக்க, மாற்ற, கட்டுப்படுத்த அல்லது நீக்க விரும்பினால், பின்வரும் கருவிகள் வழியாக அதைச் செய்யலாம்:

  • சேவைகளின் அமைப்புகள். பிற பயனர்களுக்குக் கிடைக்கும் சில தகவல்களை நிர்வகிக்க உங்கள் சேவைகளின் அமைப்புகளை நீங்கள் மாற்றலாம். உங்கள் தொடர்புகள், குழுக்கள் மற்றும் பிராட்காஸ்ட் பட்டியல்களை நிர்வகிக்கலாம் அல்லது எங்கள் "தடுப்பு" அம்சத்தைப் பயன்படுத்தி நீங்கள் தொடர்புகொள்ளும் பயனர்களை நிர்வகிக்கலாம்.

  • உங்கள் கைபேசி எண், சுயவிவரப் பெயர் மற்றும் படம் மற்றும் "விவரம்" சார்ந்த தகவல்களை மாற்றுதல். உங்கள் மொபைல் எண்ணை மாற்றினால், எங்கள் செயலியில் உள்ள எண் மாற்றம் அம்சத்தைப் பயன்படுத்தி அதைப் புதுப்பித்து, உங்கள் கணக்கை உங்கள் புதிய மொபைல் எண்ணுக்கு மாற்ற வேண்டும். மேலும், எந்த நேரத்திலும் உங்கள் சுயவிவரப் பெயர், சுயவிவரப் படம் மற்றும் "விவரம்" சார்ந்த தகவல்களையும் மாற்றலாம்.

  • WhatsApp கணக்கை நீக்குதல். எங்கள் செயலியில் உள்ள ‘எனது கணக்கை நீக்கு’ அம்சத்தைப் பயன்படுத்தி நீங்கள் எந்த நேரத்திலும் உங்கள் WhatsApp கணக்கை நீக்கலாம் (பொருந்தக்கூடிய சட்டத்தின் படி உங்கள் தகவல்களை நாங்கள் பயன்படுத்துவதற்கான உங்கள் சம்மதத்தை நீங்கள் ரத்து செய்ய விரும்பினால் உட்பட). உங்கள் WhatsApp கணக்கை நீங்கள் நீக்கும்போது, வழங்கப்படாத மெசேஜ்களும், எங்கள் சேவைகளை இயக்கவும் வழங்கவும் அதற்குமேல் தேவைப்படாத உங்களின் இதர தகவல்களும் எங்கள் சேவையகங்களிலிருந்து நீக்கப்படும். உங்கள் கணக்கை நீக்குவது, எடுத்துக்காட்டாக, உங்கள் கணக்குத் தகவல் மற்றும் சுயவிவரப்படத்தை நீக்குகிறது, எல்லா WhatsApp குழுக்களிலிருந்தும் உங்களை நீக்குகிறது, மேலும் உங்கள் WhatsApp மெசேஜ் வரலாற்றை நீக்கும். எங்கள் செயலியில் உள்ள ‘எனது கணக்கை நீக்கு’ அம்சத்தைப் பயன்படுத்தாமல் உங்கள் சாதனத்திலிருந்து WhatsApp-ஐ நீக்கினால் மட்டுமே உங்கள் தகவல்கள் நீண்ட காலம் எங்களிடம் சேமித்து வைக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். உங்கள் கணக்கை நீக்கிவிடும் போது, ​​நீங்கள் உருவாக்கிய குழுக்கள் தொடர்பான உங்கள் தகவல்களையோ அல்லது பிற பயனர்களுக்கு நீங்கள் அனுப்பிய மெசேஜ்களின் நகல் போன்று உங்கள் தொடர்பாக அவர்களிடம் உள்ள தகவல்களையோ இது பாதிக்காது என்பதை நினைவில் கொள்க.

எங்கள் தரவு நீக்கம் மற்றும் சேமித்துவைத்தல் நடைமுறைகள் பற்றியும், உங்கள் கணக்கை எவ்வாறு நீக்குவது என்பது பற்றியும் மேலும் இங்கே அறியலாம்.

மேலே செல்லவும்

சட்டம், எங்கள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு

"நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்" என்ற பகுதியில் விவரிக்கப்பட்டுள்ள உங்கள் தகவல்களை அணுகுவோம், பாதுகாத்து வைப்போம் மற்றும் பகிர்ந்து கொள்வோம். எனினும், பின்வரும் அவசியம் உள்ளதாக நன்னம்பிக்கையின் பேரில் நாங்கள் கருதினாலே இது செய்யப்படும்: (அ) பொருந்துகிற சட்டம் அல்லது விதிமுறைகள், சட்ட நடைமுறைகள் அல்லது அரசின் கோரிக்கைகள் நிமித்தமாக பதிலளித்தல்; (ஆ) சாத்தியமான விதிமீறல்கள் குறித்த புலன்விசாரணைகளுக்கு உட்பட, எங்கள் விதிமுறைகளையும் வேறு ஏதேனும் பொருந்துகிற விதிமுறைகள் மற்றும் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்துதல்; (இ) மோசடி மற்றும் இதர சட்டவிரோதச் செயல்பாடுகள் அல்லது பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்களை கண்டறிதல், புலன்விசாரித்தல், தடுத்தல் அல்லது அவற்றுக்குத் தீர்வளித்தல்; அல்லது (ஈ) மரணம் அல்லது நேரடி உடல் தீங்கு உட்பட, எங்கள் பயனர்கள், WhatsApp, மற்ற Facebook நிறுவனங்கள், அல்லது பிறரின் உரிமைகள், உடமைகள் மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காத்தல்.

மேலே செல்லவும்

எங்கள் உலகளாவிய செயல்பாடுகள்

WhatsApp இந்தத் தனியுரிமைக் கொள்கைக்கு ஏற்ப, Facebook நிறுவனங்களுக்கு உள்ளேயும் மற்றும் எங்கள் கூட்டாளர்களுடனும், சேவை வழங்குநர்களுடனும், உலகளவில் நீங்கள் தொடர்புகொள்பவர்களுடனும் என உலகளாவிய அளவில் தகவலைப் பகிர்ந்துகொள்கிறது. எடுத்துக்காட்டாக, உங்கள் தகவல்கள் அமெரிக்காவிற்கு, Facebook நிறுவனங்களின் இணை மற்றும் கூட்டாளர்கள் அல்லது எங்கள் சேவை வழங்குநர்கள் அமைந்துள்ள நாடுகள் அல்லது பிராந்தியங்களுக்கு; அல்லது இந்த தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக நீங்கள் வாழும் இடத்திற்கு வெளியே எங்கள் சேவைகள் வழங்கப்படும் உலகளவிலான வேறு எந்த நாடு அல்லது பிராந்தியத்திற்கும் மாற்றப்படலாம் அல்லது அனுப்பப்படலாம் அல்லது அங்கே சேமிக்கப்படலாம் மற்றும் செயலாக்கப்படலாம். அமெரிக்கா உட்பட Facebook-இன் உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் தரவு மையங்களை WhatsApp பயன்படுத்துகிறது. எங்கள் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள உலகளாவிய சேவைகளை வழங்க இந்தப் பரிமாற்றங்கள் அவசியம். உங்கள் தகவல் மாற்றப்பட்ட நாடுகள் அல்லது பிராந்தியங்கள் உங்கள் சொந்த நாட்டில் அல்லது பிராந்தியத்தில் உள்ளதை விட வேறுபட்ட தனியுரிமைச் சட்டங்களையும் பாதுகாப்புகளையும் கொண்டிருக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்க.

மேலே செல்லவும்

கொள்கைப் புதுப்பிப்புகள்

எங்கள் தனியுரிமைக் கொள்கையை நாங்கள் மாற்றலாம் அல்லது புதுப்பிக்கலாம். இந்தத் தனியுரிமைக் கொள்கையில் ஏற்படுத்தப்படும் திருத்தங்களை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம், மேலும் இந்த கொள்கையின் மேலே உள்ள "கடைசியாக மாற்றியமைக்கப்பட்ட" தேதியைப் புதுப்பிப்போம். அவ்வப்போது எங்கள் தனியுரிமைக் கொள்கையை படித்துப் பார்க்கவும்.

மேலே செல்லவும்

கலிபோர்னியா நுகர்வோர் தனியுரிமைச் சட்டம்

கலிபோர்னியாவில் வசிப்பவர்கள் 2018-ஆம் ஆண்டின் கலிபோர்னியா நுகர்வோர் தனியுரிமைச் சட்டத்தின் கீழ் தங்களின் உரிமைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது உட்பட, தங்கள் உரிமைகளைப் பற்றி மேலும் அறிய இங்கு கிளிக் செய்யவும்.

மேலே செல்லவும்

பிரேசிலியப் பொதுத் தரவுப் பாதுகாப்புச் சட்டம்

பிரேசிலியப் பொதுத் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உங்கள் உரிமைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது உட்பட, உங்கள் உரிமைகளைப் பற்றி மேலும் அறிய இங்கு கிளிக் செய்யவும்.

மேலே செல்லவும்

எங்களைத் தொடர்புகொள்ளவும்

எங்கள் தனியுரிமைக் கொள்கை பற்றி உங்களுக்குக் கேள்விகளோ சிக்கல்களோ இருந்தால்,எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

WhatsApp LLC
Privacy Policy
1601 Willow Road
Menlo Park, California 94025
United States of America

மேலே செல்லவும்

தரவிறக்கும்
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோதரவிறக்கும்
நாங்கள் வழங்கும் சேவைகள்அம்சங்கள்வலைப்பூஸ்டோரிகள்பிசினஸுக்கானது
நம்மைப் பற்றிய தகவல்சுயவிவரம்தொழில்வாய்ப்புகள்பிராண்டு மையம்தனியுரிமை
WhatsApp ஐ பயன்படுத்துங்கள்ஆண்ட்ராய்டுiPhoneMac/PCWhatsApp Web
உதவி தேவையா?எங்களைத் தொடர்புகொள்ளவும்உதவி மையம்கொரோனா வைரஸ்பாதுகாப்பு ஆலோசனைகள்
தரவிறக்கும்

2023 © WhatsApp LLC

சேவை விதிமுறைகள்