பொருளடக்கம்
WhatsApp LLC (நீங்கள் இங்கிலாந்தில் அல்லது ஐரோப்பிய பிராந்தியத்திற்கு வெளியே வசிக்கிறீர்கள் என்றால்) மற்றும் WhatsApp Ireland Limited (நீங்கள் ஐரோப்பிய பிராந்தியத்தில் வசிக்கிறீர்கள் என்றால்) (ஒட்டுமொத்தமாக "WhatsApp," "எங்கள்," "நாங்கள்," அல்லது "எங்களால்") ஆனது மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அவர்களின் அறிவுசார் சொத்துரிமைகளைப் பாதுகாக்க உதவுவதில் உறுதியாக உள்ளது. எங்கள் செயலிகள், சேவைகள், அம்சங்கள், மென்பொருள் அல்லது வலையதளத்தை (ஒட்டுமொத்தமாக "சேவைகள்") நிறுவுதல், அணுகல் அல்லது பயன்படுத்துதல் மூலம் எங்கள் பயனர்கள் எங்கள் சேவை விதிமுறைகளை ("விதிமுறைகள்") ஏற்கிறார்கள். எங்கள் பயனர்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் போது வேறொருவரின் பதிப்புரிமைகள் மற்றும் வர்த்தகச் சின்னங்கள் உட்பட அவர்களின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறுவதற்கு எங்கள் விதிமுறைகள் அனுமதிக்காது.
எங்கள் தனியுரிமைக் கொள்கையில் இன்னும் விரிவாக விளக்கப்பட்டுள்ளபடி, நாங்கள் வழக்கமாக எங்கள் சேவைகளை வழங்கும்போது எங்கள் பயனர்களின் மெசேஜ்களை சேமித்துவைக்க மாட்டோம். எவ்வாறாயினும், எங்கள் பயனர்களின் சுயவிவரப்படம், சுயவிவரப் பெயர் அல்லது அறிமுக மெசேஜ் உட்பட, எங்கள் பயனர்களின் கணக்கு விவரங்களை அவர்களின் கணக்கு விவரங்களின் ஒரு பகுதியாகச் சேர்க்க முடிவு செய்தால் நாங்கள் அவற்றை ஹோஸ்ட் செய்கிறோம்.
பதிப்புரிமை என்பது படைப்பாளரின் அசல் படைப்புகளை (எடுத்துக்காட்டு: புத்தகங்கள், இசை, திரைப்படம், கலை) பாதுகாக்க முயலும் சட்டப்பூர்வ உரிமை ஆகும். பொதுவாக, பதிப்புரிமை என்பது வார்த்தைகள் அல்லது படங்கள் போன்ற அசல் வெளிப்பாட்டைப் பாதுகாக்கிறது. இது ஒரு கருத்தை விவரிக்கப் பயன்படுத்தப்படும் அசல் வார்த்தைகள் அல்லது படங்களைப் பாதுகாக்கலாம் என்றாலும், இது உண்மைத்தகவல்களையும் யோசனைகளையும் பாதுகாக்காது. பதிப்புரிமை என்பது பெயர்கள், தலைப்புகள் மற்றும் சுலோகங்கள் போன்றவற்றைப் பாதுகாக்காது; இருப்பினும், வர்த்தகச் சின்னம் எனப்படும் இன்னொரு சட்டப்பூர்வ உரிமை இவற்றைப் பாதுகாக்கலாம்.
WhatsApp இல் உள்ள பகிர்வு உங்கள் பதிப்புரிமை பெற்ற படைப்பை மீறுவதாக நீங்கள் நம்பினால், தொடர்பு படிவத்தை நிரப்புவதன் மூலம் அது குறித்து புகார் செய்யலாம்.
WhatsApp LLC
Attn: WhatsApp Copyright Agent
1 Meta Way,
Menlo Park, CA 94025
United States of America
நீங்கள் ஒரு பதிப்புரிமை மீறல் கோரிக்கை குறித்து புகாரளிக்கும் முன், உங்கள் பதிப்புரிமையை அநேகமாக மீறுகிறார் என நீங்கள் நம்பும் அந்த WhatsApp பயனருக்கு ஒரு மெசேஜை அனுப்ப விரும்பலாம். நீங்கள் அவர்களை நேரடியாக அணுகியும் பிரச்சினையைத் தீர்க்க முடியும்.
வர்த்தகச் சின்னம் என்பது ஒரு நபர், குழு அல்லது நிறுவனம் வழங்கும் தயாரிப்புகள் அல்லது சேவைகளை மற்றொருவரிடமிருந்து வேறுபடுத்தும் ஒரு சொல், சுலோகம், சின்னம் அல்லது வடிவமைப்பு (எடுத்துக்காட்டு: பிராண்டு பெயர், லோகோ). பொதுவாக, வர்த்தகச் சின்னம் சட்டம் ஒரு தயாரிப்பு அல்லது சேவையை யார் வழங்குவது அல்லது எதனுடன் இணைந்துள்ளது என்பது குறித்து நுகர்வோர் மத்தியில் குழப்பத்தைத் தடுக்க முயல்கிறது.
WhatsApp இல் உள்ள பகிர்வு வர்த்தகச் சின்னம் பெற்ற படைப்பை மீறுவதாக நீங்கள் நம்பினால், இந்த தொடர்புப் படிவத்தை நிரப்புவதன் மூலம் அது குறித்து புகார் செய்யலாம்.
வர்த்தகச் சின்னம் மீறல் சார்ந்த கோரிக்கை குறித்து நீங்கள் புகாரளிப்பதற்கு முன், உங்கள் வர்த்தகச் சின்னத்தை அநேகமாக மீறுகிறார் என நீங்கள் நம்பும் அந்த WhatsApp பயனருக்கு ஒரு மெசேஜை அனுப்ப விரும்பலாம். நீங்கள் அவர்களை நேரடியாக அணுகியும் பிரச்சினையைத் தீர்க்க முடியும்.
ஒரு நபர் அறிவுசார் சொத்துரிமைகளை மீறும் பகிர்வை மீண்டும் மீண்டும் பதிவிட்டால் பின்வருபவை நிகழலாம்:
மேல்முறையீட்டின் காரணமாகவோ உரிமைகள் உரிமையாளர் தங்களின் புகாரைத் திரும்பப் பெற்றதாலோ நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் ஏதேனும் திரும்பப்பெறப்பட்டால், அதைத் தொடர் அத்துமீறல் கொள்கையின் கீழ் கணக்கில் எடுத்துக்கொள்வோம்.
அறிவுசார் சொத்துரிமை புகாரின் காரணமாக உங்கள் சேனலில் இருந்து உங்கள் பகிர்வை நாங்கள் அகற்றியிருந்தால், நாங்கள் அவ்வாறு செய்திருக்கக்கூடாது என நீங்கள் நம்பினால், நீங்கள் மேல்முறையீட்டைச் சமர்ப்பிக்கலாம்.
உங்கள் சேனல் மீது எடுக்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமை நடவடிக்கைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய, பேனரில் உள்ள சேனல் விழிப்பூட்டல்கள் என்பதைத் தட்டுங்கள் அல்லது உங்கள் சேனலின் பெயர் > சேனல் விழிப்பூட்டல்கள் என்பதைத் தட்டுங்கள்.