16 ஜூன், 2025 அன்று செயலுக்கு வரும்
இந்த WhatsApp சேனல்களின் சந்தாக்கான சந்தாதாரர் சேவை விதிமுறைகள் (“சேனல்களின் சந்தாதாரர் விதிமுறைகள்” அல்லது “விதிமுறைகள்”) ஆனது நீங்கள் (இங்கே நீங்கள், உங்கள் மற்றும்/அல்லது சந்தாதாரர் என குறிப்பிடப்படுகிறது) சேனல்களின் சந்தாவை வாங்குவது மற்றும் சேனல்களின் சந்தாவில் பங்கேற்பதை (கீழே வரையறுக்கப்பட்டுள்ளவாறு) நிர்வகிக்கிறது. சேனல்களின் சந்தாவில் சேருவது அல்லது வேறுவிதமாகப் பங்கெடுப்பதன் மூலம், நீங்கள் இந்தச் சேனல்களின் சந்தாதாரர் விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள். இந்தச் சேனல்களின் சந்தாதாரர் விதிமுறைகளை அன்புகூர்ந்து கவனமாகப் படித்துப்பாருங்கள்.
சேனல்களின் உரிமையாளர்(கள்) என்பது சேனல் சந்தா பகிர்வுடன் கூடிய WhatsApp சேனலின் உரிமையாளராக இருக்கும் நபர் அல்லது நிறுவனத்தைக் குறிக்கிறது.
சேனல்களின் சந்தா(க்கள்) என்பது சேனல் உரிமையாளரின் சேனல்களின் சந்தா பகிர்வு மற்றும்/அல்லது சில டிஜிட்டல் அம்சங்களை அணுகுவதற்கு ஈடாக WhatsApp-இல் கிடைக்கச் செய்யப்பட்டிருக்கும் அதுவாகவே தொடரும் மாதாந்திர சந்தாவைக் குறிக்கிறது.
சேனல்களின் சந்தா பகிர்வு என்பது, சேனல் உரிமையாளரின் சேனல்களின் சந்தாவில் சேரும் சந்தாதாரர்களுக்கு, சேனல் உரிமையாளரால் கிடைக்கச் செய்யப்பட்டிருக்கும் உட்பொருளைக் குறிக்கிறது.
நீங்கள் அல்லது சந்தாதாரர் என்றால் WhatsApp இல் இருந்து சேனல்களின் சந்தாவை வாங்கும் எந்தவொரு நபரையும் குறிக்கும்.
புதுப்பிப்புத் தேதி என்பது காலண்டர் நாள் அல்லது காலண்டர் மாதம் மற்றும் நாளுடன் (ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பொருந்தக்கூடியது) தொடர்புடைய உங்கள் சந்தா தேதிக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் வரும் காலண்டர் நாள் அல்லது ஒவ்வொரு வருடமும் (ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பொருந்தக்கூடியது) வரும் காலண்டர் மாதம் மற்றும் நாளைக் குறிக்கிறது. ஒவ்வொரு புதுப்பிப்புத் தேதியன்றும், உங்கள் சேனல்களின் சந்தா அதுவாகவே புதுப்பிக்கப்படும், மேலும் கீழே உள்ள விதிமுறைகளின்படி, உங்கள் சேனல்களின் சந்தாவை நீங்கள் ரத்து செய்யாவிட்டால் அல்லது உங்கள் சேனல்களின் சந்தா நிறுத்தப்படாவிட்டால், மற்றுமொரு சந்தா காலத்திற்கு உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு மாதாந்திர சந்தாவைத் தேர்ந்தெடுத்து, உங்கள் சந்தா தேதி (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி) பிப்ரவரி 15 ஆக இருந்தால், உங்கள் சேனல்களின் சந்தா ரத்து செய்யப்படும் வரை அல்லது நிறுத்தப்படும் வரை அதே காலண்டர் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதியும், அதற்கடுத்து வரும் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி அன்று சேனல்களின் சந்தாவிற்காகக் கட்டணம் வசூலிக்கப்படும். நீங்கள் சந்தா செலுத்திய ஒரு காலண்டர் தேதி அடுத்துவரும் மாதத்தில் இல்லை என்றால், உங்கள் புதுப்பிப்புத் தேதி அந்த மாதத்தின் கடைசி நாளாக இருக்கும். எடுத்துக்காட்டாக, உங்கள் சந்தா தேதி மார்ச் 31 என்றால், உங்கள் முதல் புதுப்பிப்புத் தேதி ஏப்ரல் 30 ஆகவும், அடுத்தடுத்த புதுப்பிப்புத் தேதிகள் அடுத்தடுத்த மாதங்களின் 30 வது நாளாகவும் இருக்கும்.
சந்தா தேதி என்பது இந்த விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொண்ட தேதியாகும்.
சந்தா காலம் என்பது உங்கள் சந்தா தேதியைத் தொடர்ந்து வரும் ஒவ்வொரு ஒரு-மாத காலமாகும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு மாதாந்திர சந்தா திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் சந்தா தேதி மார்ச் 15 எனில், உங்களின் தற்போதைய சந்தா காலம் அதே காலண்டர் ஆண்டின் மார்ச் 15 முதல் ஏப்ரல் 14 வரை நீடிக்கும், அடுத்தச் சந்தா காலம் அதே காலண்டர் ஆண்டின் ஏப்ரல் 15 அன்று அதுவாகவே தொடங்கும்.
மூன்றாம் தரப்புத் தள வழங்குநர்(கள்) என்பது நீங்கள் சேனல்களின் சந்தாவை வாங்குகின்ற Apple App Store அல்லது Google Play போன்ற WhatsApp அல்லாதத் தளத்தைக் குறிக்கிறது.