உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இலவசமாகச் செய்தியனுப்பலாம்*. செய்திகளை அனுப்புவதற்கு, உங்கள் மொபைலின் இணைய இணைப்பை WhatsApp பயன்படுத்துவதால் SMS கட்டணங்களைத் தவிர்க்கலாம்.
உங்கள் நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் போன்று, உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களுடன் குழுக்கள் வழியாகத் தொடர்பிலேயே இருக்கலாம். குழு அரட்டைகளின் வழியாக, ஒரே நேரத்தில் 256 பேர் வரையிலானோருடன் செய்திகள், புகைப்படங்கள், காணொலிகள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் குழுவிற்குப் பெயர் வைக்கலாம், அறிவிப்புகளை முடக்கலாம் அல்லது தனிப்பயனாக்கலாம், இன்னும் பலவற்றைச் செய்யலாம்.
இணையம் மற்றும் டெஸ்க்டாப்பில் WhatsApp-ஐப் பயன்படுத்த முடியும் என்பதால், உங்கள் அரட்டைகள் அனைத்தையும் உங்கள் கணினிக்குத் தடையின்றி ஒத்திசைக்கலாம். இதன் மூலம், உரையாடுவதற்கு வசதியான சாதனத்தில் அரட்டையடிக்கலாம். தொடங்க, டெஸ்க்டாப் செயலியைப் பதிவிறக்கவும் அல்லது web.whatsapp.com செல்லவும்.
உங்கள் நண்பர்களும் குடும்பத்தினரும் வேறு நாட்டில் இருந்தாலும் கூட, குரல் அழைப்புகள் மூலம் அவர்களுடன் இலவசமாகப்* பேசலாம். குரல் வழியாகவோ உரைச் செய்திகள் வழியாகவோ உரையாடுவது உங்களுக்குத் திருப்தியளிக்கவில்லை என்றால், இலவச* காணொலி அழைப்புகள் மூலம் முகம் பார்த்து உரையாடலாம். உங்கள் மொபைலின் அழைப்புத் திட்டத்தின் குரல் சேவைக்குப் பதிலாக, உங்கள் மொபைலின் இணைய இணைப்பை WhatsApp குரல் மற்றும் காணொலி அழைப்புகள் பயன்படுத்துகின்றன. இதனால் அழைப்புக்கு அதிகச் செலவு ஆகிறதே என்ற கவலையே இனி வேண்டாம்.
உங்கள் பெரும்பாலான தனிப்பட்ட தருணங்களில் சில WhatsApp-இல் பகிரப்படுகின்றன, இதன் காரணத்தாலேயே எங்கள் செயலியின் சமீபத்திய பதிப்புகளில் முழு மறையாக்கத்தைக் கட்டமைத்துள்ளோம். முழு மறையாக்கம் செய்யப்படுவதால், உங்கள் செய்திகளும் அழைப்புகளும் பாதுகாக்கப்படுகின்றன. எனவே, உங்களாலும் நீங்கள் யாருடன் தொடர்புகொள்கிறீர்களோ அவராலும் மட்டுமே அவற்றைப் படிக்கவோ கேட்கவோ முடியும். WhatsApp உட்பட இடையிலுள்ள வேறு எவராலும் படிக்கவோ கேட்கவோ முடியாது.
புகைப்படங்களையும் காணொலிகளையும் WhatsApp-இல் உடனடியாகப் பகிரலாம். உள்ளமைந்த கேமராவைப் பயன்படுத்தி, மறக்க முடியாததாக நீங்கள் கருதும் தருணங்களையும் படம்பிடிக்கலாம். இணைய இணைப்பின் வேகம் மெதுவாக இருந்தாலும்கூட, WhatsApp வழியாக நீங்கள் அனுப்பும் புகைப்படங்களும் காணொலிகளும் விரைவாகச் சென்றடையும்.
சில நேரங்களில், உங்கள் எண்ணங்கள் முழுவதையும் உங்கள் சொற்கள் பிரதிபலிக்கும். ஹலோ மட்டும் சொல்வதாக இருந்தாலும் சரி, நீண்ட செய்தியைக் கூறுவதாக இருந்தாலும் சரி, ஒருமுறை மட்டுமே தட்டி, குரல் செய்தியைப் பதிவுசெய்து அனுப்பலாம்.
PDF கோப்புகள், ஆவணங்கள், விரிதாள்கள், ஸ்லைடுஷோக்கள் மற்றும் பலவகையான ஆவணங்களை, மின்னஞ்சல் அல்லது கோப்புப் பகிர்வுச் செயலிகளின் துணையின்றி அனுப்பலாம். 100 மெ.பை. அளவு வரையிலான ஆவணங்களை அனுப்பலாம். உங்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஆவணங்களை உடனடியாகப் பெறலாம்.