உரை செய்திகள்
எளிதான, நம்பிக்கையான செய்தி பரிமாற்றம்.
நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இலவசமாக* செய்தியனுப்பிடுங்கள். செய்திகளை அனுப்புவதற்கு தங்கள் மொபைலின் இணைய இணைப்பை WhatsApp பயன்படுத்தும் என்பதால் குறுஞ்செய்தி கட்டணத்தை நீங்கள் தவிர்க்கலாம்.
குழு அரட்டை
தொடர்பில் இருக்க வேண்டிய குழுக்கள்
குடும்பத்தினர் அல்லது உடன் பணிபுரிபவர்கள் போன்ற முக்கியமான குழுக்களில் இணைந்திருங்கள். குழு அரட்டைகள் மூலம் ஒரே நேரத்தில் அதிகப்படியாக 256 நபர்களுக்கு செய்திகள், புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை நீங்கள் பகிர முடியும். தங்கள் குழுவிற்குப் பெயரிட்டுக் கொள்ளலாம், அறிவிப்புகளை ஒலியடக்கலாம், விருப்ப அறிவிப்புகளை அமைக்கலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.
உலாவி மற்றும் கணினியில் WhatsApp
உரையாடலைத் தொடருங்கள்
இணையம் மற்றும் கணினியிலான WhatsApp கொண்டு அனைத்து அரட்டைகளையும் கணினியுடன் ஒத்திசைக்க முடியும். இதன் மூலம் தங்களுக்கு வசதியான சாதனத்தில் அரட்டையைத் தொடரலாம். கணினி செயலியைத் தரவிறக்கவும் அல்லது தொடங்குவதற்கு web.whatsapp.com-ஐக் காணவும்.
WhatsApp குரல் மற்றும் காணொலி அழைப்புகள்
இலவசமாகப் பேசுங்கள்
குரல் அழைப்புகள் மூலம் வெவ்வேறு நாடுகளில் உள்ள நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் இலவசமாக*, பேசமுடியும். மேலும் இலவச* காணொலி அழைப்புகள் மூலம், நேருக்கு நேர் பார்த்து உரையாட முடியும். WhatsApp குரல் மற்றும் காணொலி அழைப்பு உங்கள் மொபைலின் அழைப்பு நிமிடங்களைப் பயன்படுத்தாமல் இணைய இணைப்பை பயன்படுத்தும். இதனால் அழைப்புகளுக்கு அதிக கட்டணம் செலவாகுமோ என்ற கவலையில்லை.
முழு மறையாக்கம்
இயல்புநிலைப் பாதுகாப்பு
தங்களின் தனிப்பட்ட தருணங்களை WhatsApp-இல் பகிர்கிறீர்கள். எனவேதான் எங்களது சமீபத்திய பதிப்புகளில் முழு மறையாக்கத்தை அமைத்துள்ளோம். தங்கள் செய்திகளும் அழைப்புகளும் முழு மறையாக்கத்துடன் பாதுகாக்கப்படுகின்றன. இதன்மூலம் தாங்களும், தாங்கள் தொடர்புகொள்ளும் நபரும் மட்டுமே இத்தகவல்களை கேட்கவோ படிக்கவோ முடியும். WhatsApp உட்பட வேறு எவராலும் அவற்றைக் கேட்கவோ படிக்கவோ முடியாது.
புகைப்படங்கள் மற்றும் காணொலிகள்
முக்கியமான தருணங்களைப் பகிர்ந்திடுங்கள்
புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை WhatsApp-இல் உடனுக்குடன் அனுப்பிடுங்கள். உள்ளமைந்த கேமரா மூலம் முக்கிய தருணங்களைப் பதிவு செய்திடுங்கள். குறைந்த இணைப்பு வேகத்தில் கூட, உங்களால் WhatsApp-இல் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை விரைவாக அனுப்ப முடியும்.
குரல் செய்திகள்
மனதில் உள்ளதைக் கூறிடுங்கள்
சில நேரங்களில் தங்கள் குரலால் அனைத்தையும் விளக்கிட முடியும். சிறிய வணக்கம் சொல்ல விரும்பினாலும் சரி, பெரிய கதையைக் கூற விரும்பினாலும் சரி, ஒருமுறை தட்டுவதன் மூலம் குரல் செய்தியைப் பதிவுசெய்து அனுப்ப முடியும்.
ஆவணங்கள்
ஆவணங்களின் பகிர்வு எளிதாக்கப்பட்டது
மின்னஞ்சல் அல்லது கோப்பு பரிமாறும் செயலிகளின் தேவையின்றி PDFகள், ஆவணங்கள், ஸ்பிரெட்ஷீட்கள் மற்றும் பலவற்றை எளிதாகப் பகிர்ந்திடுங்கள். அதிகப்படியாக 100 MB வரையுள்ள ஆவணங்களை அனுப்ப முடியும். இதனால் உங்களுக்கு வேண்டியதை யாரிடமிருந்தும் எளிதாகப் பெற முடியும்.