எழுத்துக்கள்

எளிதான, நம்பிக்கையான தகவல் பரிமாற்றம்.

நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இலவசமாக* தகவல் அனுப்பலாம். WhatsApp தங்கள் கைபேசியின் இணையத்தொடர்பை பயன்படுத்துகிறது எனவே குறுந்தகவல் கட்டணத்தை தவிர்க்கலாம்.
* தரவு கட்டணங்கள் இருக்கலாம். விவரங்களுக்கு சேவைதாரரை அணுகவும்.

குழு அரட்டை

தொடர்பிலிருக்க வேண்டிய குழுக்கள்

Up Down குடும்பத்தினர் அல்லது உடன் பணிபுரிபவர்கள் போன்ற முக்கியமான குழுக்களில் இணைந்திருங்கள். குழு அரட்டைகள் மூலம், தாங்கள் ஒரே நேரத்தில் அதிகப்படியாக 256 நபர்களிடம் தகவல்கள், படங்கள் மற்றும் காணொலிகளைப் பகிர இயலும். தங்கள் குழுவிற்கு தாங்களே பெயரிடலாம், ஒலியடக்கலாம் அல்லது விருப்ப அறிவிப்புகளை அமைக்கலாம் மற்றும் பல.
நண்பர்கள்
குடும்பம்
வார இறுதி

WhatsApp உலாவி மற்றும் கணினியில்

உரையாடலை தொடருங்கள்

WhatsAppஐ உலாவி மற்றும் கணினியில் கொண்டு தாங்கள் அணைத்து அரட்டைகளையும் கணினியுடன் ஒருங்கியாக்கலாம், இதன் மூலம் தங்களுக்கு வசதியான கருவில் அரட்டையை தொடரலாம். கணினி பயன்பாட்டை தரவிறக்கவும் அல்லது தொடங்குவதற்கு இங்கு காண்க web.whatsapp.com.

WhatsApp குரல் மற்றும் காணொலி அழைப்புகள்

இலவசமாக பேசுங்கள்

குரல் அழைப்புகள் மூலம், வெவ்வேறு நாட்டிலிருந்தாலும் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் இலவசமாக*, பேசலாம். மேலும் இலவச* காணொலி அழைப்புகள் மூலம், நேருக்கு நேராக உறையாடலாம். WhatsApp குரல் மற்றும் காணொலி அழைப்பு, கைபேசியின் அழைப்பு நிமிடங்களை பயன்படுத்தாமல் இணையத்தொடர்பை பயன்படுத்தும், எனவே அதிக கட்டண அழைப்புகளைப் பற்றி கவலை வேண்டாம்.
* தரவு கட்டணங்கள் இருக்கலாம். விவரங்களுக்கு சேவைதாரரை அணுகவும்.

முழு மறையாக்கம்

இயல்பான பாதுகாப்பு

தங்களின் தனிப்பட்ட தருணங்களை WhatsAppல் பகிர்கின்றீர், அதற்காகவே நாங்கள் முழு மறையாக்கத்தை எங்களது சமீபத்திய பதிப்புகளில் அமைத்துள்ளோம். முழு மறையாக்கத்தினால் தங்கள் தகவல்களும் அழைப்புகளும் பாதுகாக்கப்படுகிறது, இதன்மூலம் தாங்களும் தாங்கள் தொடர்பு கொள்ளும் நபரும் மட்டுமே இத்தகவல்களை கேட்கவோ படிக்கவோ இயலும், WhatsApp உட்பட வேறு எவரும் இடையில் இல்லை.

படங்கள் மற்றும் காணொலிகள்

முக்கியமான தருணங்களை பகிரவும்

படங்கள் மற்றும் காணொலிகளை WhatsAppல் உடனுக்குடன் அனுப்புங்கள். முக்கிய தருணங்களை உள்ளடங்கிய நிழற்படவி மூலம் பதிவு செய்யுங்கள். மந்தமான இணைப்பிலும் WhatsAppல் படங்கள் மற்றும் காணொலிகளை வேகமாக அனுப்பலாம்.

குரல் தகவல்கள்

எண்ணத்தில் உள்ளவற்றை கூறவும்

சில நேரங்களில், தங்கள் குரல் அனைத்தையும் விளக்கும். ஒரே தட்டுதல் மூலம் குரல் தகவலை பதிவு செய்யலாம், சிறிய வணக்கம் அல்லது பெரிய கதை - அனைத்துக்கும் உகந்தது.

ஆவணங்கள்

ஆவணங்கள் பகிர்வு எளிதாக்கப்பட்டது

மின்னஞ்சல் மற்றும் கோப்பு பரிமாறும் பயன்பாடுகள் உதவியின்றி எளிதாக பி டி எஃப், ஆவணங்கள், விரிதாள்கள் மற்றும் பலவற்றை பகிருங்கள். அதிகப்படியாக 100 எம்.பி. வரையுள்ள ஆவணங்களை அனுப்பலாம், இதனால் என்ன வேண்டும் யாரிடமிருந்து வேண்டும் என்பது எளிதாகிறது.