WhatsApp அழைப்பு வசதி மூலம் ஒன்றாகச் சேர்ந்து பலவற்றைச் செய்யலாம்
திரைப் பகிர்தல், அழைப்பைத் திட்டமிடுதல் மற்றும் அழைப்பு இணைப்புகள் அம்சத்தின் மூலம்,
நிகழ்நேரத்தில் தொடர்பு கொள்வதும் இணைப்பில் இருப்பதும் முன்னெப்போதும் இவ்வளவு எளிதாக இருந்ததில்லை.
iOS மற்றும் Android சாதனங்கள் அனைத்திலும் சர்வதேச அளவில் இலவசமான*, நம்பகமான குரல் அம்சம் மற்றும் வீடியோ அழைப்பு வசதி மூலம் உங்களுக்கு முக்கியமான நபர்களுடன் நெருக்கமாக இணைந்திருங்கள்.
* டேட்டா கட்டணங்கள் விதிக்கப்படலாம். விவரங்களுக்கு உங்கள் வழங்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
திரைப் பகிர்தல், அழைப்பைத் திட்டமிடுதல் மற்றும் அழைப்பு இணைப்புகள் அம்சத்தின் மூலம்,
நிகழ்நேரத்தில் தொடர்பு கொள்வதும் இணைப்பில் இருப்பதும் முன்னெப்போதும் இவ்வளவு எளிதாக இருந்ததில்லை.
குரல் அழைப்பின் மூலம் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைத் தொடர்புகொள்ளுங்கள் அல்லது தனியாக மற்றும் குழுவாக வீடியோ அழைப்புகளைச் செய்வதன் மூலம் முகம் பார்த்து நேருக்கு நேர் பேசுங்கள்—இவை எப்போதும் இலவசமானவை* மற்றும் வரம்பேதும் இல்லாதவை.
*நீங்கள் வைஃபை அல்லது டேட்டா பேக்கேஜைப் பயன்படுத்தி அழைக்கும்போது
வீடியோ அழைப்புகளின்போது பகிரப்பட்ட திரையில் ஒன்றாகத் திட்டமிட்டு படைப்பாற்றலைப் பெறலாம்.
அனைவரின் நேரத்திட்டமிடலுக்கும் பொருந்தும் ஒரு கூட்டத்தொடரை ஏற்பாடு செய்வதற்கான நிகழ்வை உருவாக்குங்கள் — இதனால் யாரும் விடுபடாமல் இருப்பார்கள்.
அழைப்பு இணைப்பை அனுப்பி WhatsApp இல் உள்ள எவரையும் உங்கள் அழைப்பில் சேர அழைக்கலாம்.
அனைத்து அளவிலான குழுக்களுக்கான ஆடியோ ஹேங் அவுட்கள். அது ஒரு சுவாரசியமான கால்பந்து விளையாட்டாக இருந்தாலும் சரி, வீட்டுப்பாடப் பிரச்சினையில் சிக்கிக்கொண்டாலும் சரி, பெரிய மெசேஜ்களைப் பகிர்ந்துகொள்வதாக இருந்தாலும் சரி, சில சமயங்களில் உங்கள் குழு உரையாடலில் உள்ளவர்களிடம் அதனைப் பற்றிப் பேச வேண்டியிருக்கும்.
உங்கள் தொடர்புகள் வேறு நாட்டில் இருந்தாலும் கூட, WhatsApp மூலம் இலவசமாக அழைக்க, குரல் அழைப்பு அம்சம் உதவுகிறது. குரல் அழைப்பானது உங்கள் மொபைல் திட்டத்தின் நிமிடங்களுக்குப் பதிலாக உங்கள் ஃபோனின் இணைய இணைப்பைப் பயன்படுத்துகிறது. டேட்டா கட்டணங்கள் பொருந்தலாம். அழைப்பைத் தொடங்க, நீங்கள் அழைக்க விரும்பும் குழு உரையாடலைத் திறந்து, உங்கள் அழைப்பைத் தொடங்க ஃபோன் ஐகானைக் கிளிக் செய்யுங்கள். அழைப்புகள் பிரிவில் இருந்து, உங்கள் தற்போதைய குழு உரையாடல்களுக்கு வெளியே உள்ள தொடர்புகளையும் தேர்வுசெய்யலாம்.
WhatsAppஐப் பயன்படுத்தி உங்கள் தொடர்புகளை வீடியோ அழைப்பை மேற்கொள்ள வீடியோ அழைப்பு உதவுகிறது. அழைப்பைத் தொடங்க, நீங்கள் அழைக்க விரும்பும் குழு உரையாடலைத் திறந்து, உங்கள் அழைப்பைத் தொடங்க வீடியோ ஐகானைக் கிளிக் செய்யுங்கள். அழைப்புகள் பிரிவில் இருந்து, உங்கள் தற்போதைய குழு உரையாடல்களுக்கு வெளியே உள்ள தொடர்புகளையும் தேர்வுசெய்யலாம்.
திரைப் பகிர்வு மக்கள் தங்கள் திரையில் உள்ளதை நிகழ்நேரத்தில் பகிர அனுமதிக்கிறது. உங்கள் திரையைப் பகிர நீங்கள் வீடியோ அழைப்பில் இருக்க வேண்டும். வீடியோ கட்டுப்பாடுகளில் கூடுதல் விருப்பத்தேர்வுகள் (மூன்று செங்குத்து புள்ளிகள்) என்பதைத் தட்டுங்கள், பின்னர் திரைப் பகிர்தல் என்பதைத் தட்டுங்கள். நீங்கள் WhatsApp இல் பதிவுசெய்வதைத் தொடங்க இருக்கிறீர்கள் என்பதை அறிவிக்கும் ஒரு மெசேஜை உங்கள் ஃபோன் காண்பிக்கும்.
ஒன்றிணைவுகளை ஏற்பாடு செய்யவும், இணைப்பில் தொடர்ந்திருக்கவும் நீங்கள் தனிப்பட்ட மற்றும் குழு உரையாடல்களில் நிகழ்வுகளை உருவாக்கலாம். நிகழ்வுகளில் பயனர்கள் எளிதில் அணுகக்கூடிய பயனுள்ள தகவல்கள் உள்ளன. ஒரு நிகழ்வை உருவாக்க, உங்கள் தனிப்பட்ட அல்லது குழு உரையாடலைத் திறந்து சேர்க (கூட்டல் குறியீடு) > நிகழ்வு என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
உங்கள் சாதனங்கள் எதிலிருந்தும் WhatsAppஐ அணுக நம்பகமான, பாதுகாப்பான வழியை இணைக்கப்பட்ட சாதனங்கள் வழங்குகின்றன. உங்கள் முதன்மை ஃபோனுடன் ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களை இணைப்பதன் மூலம் நீங்கள் தொடர்ந்து இணைந்திருக்க முடியும். உங்கள் WhatsApp கணக்கைப் பதிவுசெய்து, புதிய சாதனங்களை இணைக்க உங்கள் முதன்மை ஃபோன் எண் இப்போதும் உங்களுக்குத் தேவைப்படும்.