பதிவிறக்கவும்
அம்சங்கள்
அழைத்தல்மெசேஜிங்குழுக்கள்சேனல்கள்Meta AIஸ்டேட்டஸ்பாதுகாப்பு
தனியுரிமைவலைப்பூசெயலிகள்உதவி மையம்பிசினஸுக்கு
உள்நுழைக
பதிவிறக்குக

WhatsApp Messenger செயலியில் எவ்வாறு தொடங்குவது

WhatsApp-ஐத் தரவிறக்கி அமைத்தல்

1. செயலியைத் தரவிறக்கிவிட்டு, அதைத் திறக்கவும்: Google Play ஸ்டோர் அல்லது Apple App Store இல் இருந்து இலவசமாக WhatsApp Messenger-ஐத் தரவிறக்கவும். செயலியைத் திறப்பதற்கு, முகப்புத் திரையில் WhatsApp ஐகானைத் தட்டவும்.

2. சேவை விதிமுறைகளைப் படிக்கவும்: சேவை விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கையையும் படித்த பிறகு, அவற்றை ஏற்க ஏற்கிறேன் மற்றும் தொடர்க என்பதைத் தட்டவும்.

3. பதிவுசெய்யவும்: கீழ் தோன்றும் பட்டியலில் இருந்து உங்கள் நாட்டைத் தேர்ந்தெடுத்து, உங்கள் நாட்டின் குறியீட்டையும் சர்வதேச கைபேசி எண் வடிவமைப்பில் உங்கள் கைபேசி எண்ணையும் உள்ளிடவும். அதன் பின்பு, முடிந்தது அல்லது அடுத்து என்பதைத் தட்டி, SMS வழியாகவோ கைபேசி அழைப்பின் வழியாகவோ 6 இலக்கக் குறியீட்டைப் பெறுவதற்கு, சரி என்பதைத் தட்டவும். பதிவு செய்தலை முடிப்பதற்கு, 6 இலக்கக் குறியீட்டை உள்ளிடவும். Android, iPhone அல்லது KaiOS-இல் உங்கள் கைபேசி எண்ணைப் பதிவுசெய்வது எவ்வாறு என்பதைத் தெரிந்துகொள்ளவும்.

4. உங்கள் சுயவிவரத்தை அமைக்கவும்: உங்கள் புதிய சுயவிவரத்தில் உங்கள் பெயரை உள்ளிட்டு பிறகு அடுத்து என்பதைத் தட்டவும். சுயவிவரப்படத்தையும் நீங்கள் சேர்க்கலாம்.

5. தொடர்புகள் மற்றும் புகைப்படங்களுக்கான அணுகலை அனுமதிக்கவும்: உங்கள் கைபேசியின் முகவரிப் புத்தகத்தில் இருந்து WhatsApp-இல் தொடர்புகளைச் சேர்த்துக் கொள்ளலாம். கைபேசியிலுள்ள புகைப்படங்கள், காணொலிகள் மற்றும் கோப்புகளை அணுகுவதற்கான அனுமதியையும் நீங்கள் வழங்கலாம்.

6. அரட்டையைத் தொடங்கவும்: அல்லது -ஐத் தட்டி, தொடங்குவதற்கு ஒரு தொடர்பைத் தேடவும். உரைப் புலத்தில் உங்கள் செய்தியை உள்ளிடவும். படங்கள் அல்லது வீடியோக்களை அனுப்ப, உரைப் புலத்திற்கு அடுத்துள்ள அல்லது -ஐத் தட்டவும். புதிய புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க கேமராவைத் தேர்வுசெய்யவும் அல்லது உங்கள் கைபேசியில் இருந்து ஏற்கெனவே இருக்கும் படம் அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்க கேலரிஅல்லது படம் மற்றும் வீடியோ லைப்ரரியைத் தேர்ந்தெடுக்கவும். பிறகு அல்லது -ஐத் தட்டவும்.

7. குழுவை உருவாக்கவும்: 256 பேர்வரை கொண்ட ஒரு குழுவை நீங்கள் உருவாக்கலாம். அல்லது -ஐத் தட்டி புதிய குழுவைத் தட்டவும். தொடர்புகளைத் தேடவோ தேர்ந்தெடுக்கவோ செய்து குழுவில் சேர்த்து, அடுத்து என்பதைத் தட்டவும். குழுப் பெயரை உள்ளிட்டு அல்லது உருவாக்கு என்பதைத் தட்டவும்.

தொடர்பு கொள்வதற்கான பல்வேறு வழிகள்

  • குரல் மெசேஜ்கள்: மெசேஜை உள்ளிட வேண்டாமெனில் ஆடியோ பதிவை நீங்கள் அனுப்பலாம். இந்த மெசேஜைப் பதிவு செய்ய, அல்லது -ஐத் தட்டிப் பிடித்திருக்கவும். பதிவு செய்வதை நிறுத்த, மைக்ரோஃபோனை விடுவிக்கவும். Android, iPhone அல்லது KaiOS-இல் குரல் மெசேஜை எவ்வாறு அனுப்புவது மற்றும் இயக்குவது என்பதை அறிந்துகொள்ளவும்.
  • குரல் அழைப்புகள்: அழைப்புகள் தாவலுக்குச் சென்று அல்லது -ஐத் தட்டவும். நீங்கள் அழைப்பைச் செய்ய விரும்பும் தொடர்பைத் தேடவும். காணொலி அழைப்பைத் தொடங்க, அல்லது -ஐத் தட்டவும். Android அல்லது iPhone-இல் குரல் அழைப்புகளை எவ்வாறு செய்வது என்பதைத் தெரிந்துகொள்ளவும்.
  • காணொலி அழைப்புகள்: அழைப்புகள் தாவலைத் திறந்து, அல்லது -ஐத் தட்டவும். நீங்கள் அழைப்பைச் செய்ய விரும்பும் தொடர்பைக் கண்டறியவும். காணொலி அழைப்பைத் தொடங்க, அல்லது -ஐத் தட்டவும். Android அல்லது iPhone-இல் காணொலி அழைப்புகளைச் செய்வது எவ்வாறு என்பதைத் தெரிந்துகொள்ளவும்.

பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் மற்றும் உதவிகரமான அம்சங்கள்

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்களைத் தனிப்பயனாக்குதல்
WhatsApp உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் புரிந்துகொள்வதையும் தனிப்பயனாக்குவதையும் எளிதாக்குகிறது. எங்கள் தனியுரிமைப் பக்கத்தில் மேலும் தெரிந்துகொள்ளவும்.

நீங்கள் பெறும் தகவல்களின் உண்மை நிலையைச் சரிபார்த்தல்
நீங்கள் பெறும் தகவல்கள் அனைத்தும் துல்லியமானவை அல்ல என்பதால் நீங்கள் பெறும் தகவல்கள் உண்மையானவையா என்பதைப் பாருங்கள். உங்களுக்கு அனுப்பப்பட்ட தகவலை யார் அனுப்பியுள்ளார் என்று தெரியாத பட்சத்தில், நம்பகமான உண்மைச் சரிபார்ப்பு அமைப்புகளுடன் தகவலை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்க்கவும். தவறான தகவல் பரப்பப்படுவதைத் தடுப்பது எவ்வாறு என்பதை இந்தக் கட்டுரையில் மேலும் தெரிந்துகொள்ளவும்.

முன்னனுப்பப்படும் தகவல்கள்
தவறான தகவல்கள் பரவலைத் தடுக்க, தகவல்களை எவ்வாறு முன்னனுப்பலாம் என்பதைக் கட்டுப்படுத்துகிறோம். முன்னனுப்பப்படும் தகவல்களில் முன்னனுப்பப்பட்டது எனும் லேபில் இருப்பதால் எளிதாக அந்தத் தகவல்களை அடையாளம் காணலாம். ஒரு தகவல் பலமுறை முன்னனுப்பப்பட்டிருந்தால், அந்தத் தகவலுக்கு அருகில் இரட்டை அம்புக்குறி கொண்ட ஐகான் குறிக்கப்பட்டு இருக்கும். முன்னனுப்பப்படும் வரம்புகள் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பதிவிறக்கவும்
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோ
பதிவிறக்கவும்

நாங்கள் வழங்கும் சேவைகள்

  • அம்சங்கள்
  • வலைப்பூ
  • பாதுகாப்பு
  • பிசினஸுக்கானது

எங்களைப் பற்றிய விவரங்கள்

  • எங்களைப் பற்றிய அறிமுகம்
  • தொழில்வாய்ப்புகள்
  • பிராண்டு மையம்
  • தனியுரிமை

WhatsAppஐப் பயன்படுத்துக

  • மொபைல்
  • டெஸ்க்டாப்
  • டேப்லெட்
  • WhatsApp Web

உதவி தேவையா?

  • எங்களைத் தொடர்பு கொள்க
  • உதவி மையம்
  • செயலிகள்
  • பாதுகாப்பு ஆலோசனைகள்
பதிவிறக்கவும்

2026 © WhatsApp LLC

விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கைதளவரைபடம்
  • தமிழ்
  • मराठी
  • हिन्दी
  • বাংলা
  • ਪੰਜਾਬੀ
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • Afrikaans
  • azərbaycan
  • Bahasa Indonesia
  • català
  • čeština
  • dansk
  • Deutsch
  • eesti
  • English
  • español
  • Filipino
  • français
  • Gaeilge
  • hrvatski
  • italiano
  • Kiswahili
  • latviešu
  • lietuvių
  • magyar
  • Melayu
  • Nederlands
  • norsk bokmål
  • o‘zbek
  • polski
  • Português (Brasil)
  • Português (Portugal)
  • română
  • shqip
  • slovenčina
  • slovenščina
  • suomi
  • svenska
  • Tiếng Việt
  • Türkçe
  • Ελληνικά
  • български
  • қазақ тілі
  • македонски
  • русский
  • српски
  • українська
  • עברית
  • اردو
  • العربية
  • فارسی
  • ไทย
  • 한국어
  • 日本語
  • 简体中文
  • 繁體中文(台灣)
  • 繁體中文(香港)