நீங்கள் பள்ளி ஆசிரியராக இருந்தாலும், கல்லூரி ஆசிரியராக இருந்தாலும், கல்வி கற்பிப்பதில் ஏதேனும் இடையூறு ஏற்படும்போது WhatsApp மூலம் உங்கள் மாணவர்களுடன் தொடர்பில் இருக்கக் கருதுங்கள்.*
உங்கள் மாணவர்களுடன் தொடர்புகொள்ளும்போது, WhatsApp-ஐப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துங்கள். உங்களுக்குத் தெரிந்த மற்றும் உங்களிடமிருந்து தகவல்களைப் பெற விரும்புகின்ற நபர்களுக்கு மட்டுமே தகவல் அனுப்பிடுங்கள். உங்கள் கைபேசி எண்ணைத் தங்களின் முகவரிப் புத்தகத்தில் சேமித்து வைத்துக் கொள்ளுமாறு உங்கள் அவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். மேலும் தானியங்குத் தகவல்கள் அல்லது விளம்பரத் தகவல்களை குழுக்களில் பகிர வேண்டாம். இந்த எளிமையான சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றாமல் இருப்பது, பிற பயனர்களிடம் இருந்து புகார்களுக்கு வழிவகுத்து கணக்கின் மீது தடையை ஏற்படுத்தக்கூடும்.
WhatsApp Business செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த படிப்படியான வழிகாட்டலுக்கு, இங்கு கிளிக் செய்க .
WhatsApp கொரோனா வைரஸ் தகவல் மையம் தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.