WhatsAppஐ பற்றி

எங்கள் பயன்பாடு

180 நாடுகளில் 100 கோடிக்கு மேலாக மக்கள் WhatsAppஐ 1 நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எங்கேயும் எப்போதும் தொடர்பிலிருக்க பயன்படுத்துகின்றனர். WhatsApp இலவசமானது2 மேலும் இது எளிய, பாதுகாப்பான, நம்பகமான தகவல் பரிமாற்றம் மற்றும் அழைப்பு அம்சங்களை கைபேசிகளில் உலகமெங்கும் வழங்குகிறது.

1 ஆம், WhatsApp என்பது What's Up என்ற சொற்றொடரின் சுருக்கமாகும்.

2 தரவுக் கட்டணங்கள் பொருந்தும்

எங்கள் செயலிலக்கு

WhatsApp குறுந்தகவலுக்கு ஒரு மாற்றாக துவங்கப்பட்டது. தற்போது எங்கள் தயாரிப்பு பல்வேறு ஊடகக்கோப்புகளை அனுப்பவும் பெறவும் ஆதரிக்கின்றது: வார்த்தைகள், படங்கள், காணொலிகள், இருப்பிடம் மற்றும் அழைப்புகள். நம் தகவல்கள் மற்றும் அழைப்புகள் முழு மறையக்கத்துடன் பாதுகாக்கப்படுகிறது, அதாவது WhatsApp உட்பட மூன்றாம் தரப்பினர் எவரும் அவற்றை படிக்கவோ அல்லது கேட்கவோ இயலாது. தயாரிப்பு சார்ந்த முடிவுகள் ஒவ்வொன்றிற்கும் பின்னல் உலகமெங்கும் மக்கள் தடையின்றி தொடர்புகொள்ள வேண்டும் என்ற எங்களது ஆவல் உள்ளது.

எங்கள் அணி

WhatsApp ஜேன் கோம் மற்றும் பிரயான் ஆக்டன் என்பறவர்களால் துவங்கப்பட்டது. இவர்கள் Yahoo நிறுவனத்தில் 20 வருடங்கள் ஒன்றாக பணியாற்றியவர்கள். WhatsApp Facebook உடன் 2014ல் இணைந்தது, ஆனால் இன்னும் தனி பயன்பாடாக, வேகம் மற்றும் நம்பகமான தகவல் சேவையை உலகெங்கும் வழங்குவதில் சீரொளி இலக்குடன் இயங்குகிறது.